Tuesday, October 20, 2015

CCHEP NLG IODINE AWARNESS PROGRAMME MSS UPPATTY 20.10.15



அயோடின் குறைபாட்டால் இரும்பு சத்து குறைபாடு, ஏற்படுகிறது
அயோடின் உப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
பந்தலூா், அக். 23; பந்தலூா் அருகே உப்பட்டி எம் எஸ் எஸ் உயர்நிலைப்பள்ளியில் உலக அயோடின் தினத்தை முன்னிட்டு அயோடின் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் பற்றாக்குறையால் உடல் வளர்ச்சி இன்மை, முன் கழுத்து கழலை,  இரும்பு சத்து குறைபாடு, மந்த தன்மை, பிறவி குறைபாடுகள், ஊனதன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.  எனவே அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துவதால் இதுபோன்ற குறைபாடுகளை களையலாம் கடைகளில் எடுக்கபட்ட உப்பு மாதிரிகளில் 48 சதவீதத்தில் மட்டுமே போதுமான அளவு அயோடின் உள்ளது. கடைகளில் எடுக்கப்பட்ட  கல் உப்பில் 33.4 சதவீத அளவில் மட்டுமே அயோடின் உள்ளது. அயோடின் சத்து கடல்களில் உள்ள பவளபாறை உள்ளிட்ட வற்றில் அதிகமாக உள்ளது.  எனவே மீன் உள்ளிட்ட கடல் வாழ் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு நமக்கு 150 முதல் 200 மைக்ரோ கிராம் அளவு அயோடின் தேவை, உப்பு வாங்கும் முன் பாதுகாப்பான முறையில் உள்ள உப்புகளை பார்த்து வாங்க வேண்டும் காலாவதி தேதி மற்றும் பாக்கெட்டில் சிரிக்கும் சூரியன், உணவு தர கட்டுபாட்டு பதிவு எண் போன்றவற்றை கவணித்து வாங்க வேண்டும்   அயோடின் சத்து இல்லாத உப்புகளை தவிர்க்க வேண்டும் என்றார்.   நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்http://www.cchepnlg.blogspot.in/

No comments:

Post a Comment