ஊட்டி வர்க்கி தாயரிக்கபடும் போது அவை முறைாய மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுவதில்லை ஊட்டி வர்க்கி மைதா, டால்டா, நெய் சர்க்கரை ஈஸ்ட், எண்ணெய் போன்றவை சேர்க்கப்படுகின்றது இதில் சேர்க்கப்படும் முக்கிய மூலப்பொருளான மைதா பல்வோறு பாதிப்பகளை ஏற்படுத்த கூடியது
மைதாவின் மூலப்பொருளான கோதுமையிலிருந்து நார்ச்சத்தை பிரித்தெடுத்து அதில் காணப்படும் மஞ்சள் நிறமாவையும், மரவள்ளிக்கிழங்கு மாவு என்பது சற்று பழுப்பு நிறம் கொண்ட மாவையும். வெள்ளை நிறமாக மாற்ற பென்சாயில் பெராக்சைடு எனும் ரசாயனப்பொருள் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து மாவை மிருதுவானதாக மாற்ற அலாக்ஷன் என்ற பொருள் கலக்கப்படுகிறது. மேலும் மாவு அதிகப்படியாக உருவாவதற்கு பொட்டாசியம் புரோமேட் சேர்க்கப்பட்டு, ஆஸ்காரிப் ஆசிட் கலந்து மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் பல்வேறு ரசாயனப் பொருட்களில் ஆஸ்காரிப் ஆசிட் தவிர மற்ற அனைத்துவிதமான வேதிப்பொருட்களுமே மனித உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அலாக்ஸான்’ எனும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. வெண்மை என்றால் சாதாரண வெண்மையா என்ன? மைதாவின் வெண்மையை ஊரே போற்ற வேண்டும் என்பதற்காக அதில் செயற்கை வண்ணப்பொடியும் கலக்கப்படுகிறது. பரோட்டாவுக்கு சுவை சேர்க்க வேண்டாமா? இதற்காக உணவு எண்ணெய்கள், சுவை கூட்டிகள் எனப்படும் டேஸ்ட் மேக்கர்ஸ், மைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையான ரசாயனங்கள் (பிரசர் வேடீவ்ஸ்) அஜினோ மோட்டோ, இனிப்பு பொருட்களில் சாக்ரின் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவை பெரும்பாண்மையாக மனிதனுக்கு தீங்கு விளைவிக்க கூடியது.
டால்டா
என்னும் வனஸ்பதி நல்ல கொலஸ்ட்ராலை குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். இதில் உள்ள அதிக அளவான Trans fat முக்கிய காரணமாக இருக்கிறது. இவ்வகை கொழுப்புகள் அசைவ உணவுகள், பால் பொருட்களிலும் சிறிதளவு உண்டு. கொலஸ்டரால் என்ற பிரச்சினை மட்டும் இல்லாமல் உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றிற்கும் காரணமாக அமையலாம். இவையன்றி நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களும் இதய நோயை வரவழைக்கின்றன.
சர்க்கரை தயாரிப்பு குறித்துபார்த்தால் கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
சர்க்கரையாக உருவாக்க பயன்படுத்தும் பாஸ்போரிக் ஆசிட் சுண்ணாம்பு, சல்பர்-டை-ஆக்சைடு வாயு பாலி எலக்ட்ரோலைட்டை காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா, சல்பர் டை ஆக்சைடு, சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் உள்ளிட்ட ராசாயணங்கள்
சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும்
உடலுக்கு தீங்கு விளைவிக்க
கூடியதே மேலும் தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
இதுபோன்ற பல்வேறு மூலப்பொருட்கள் சேர்த்து தாயரிக்கப்படும் ஊட்டி வர்க்கி மனிதனுக்கு சத்தான ஆகாரமாக பயன்படுவதில்லை. மேலும் வர்க்கி புரோட்டா மாவு பதத்துக்குப் பிசைந்த மைதா மாவு, ஓரிரவு முழுதும் சுமார் 9 முதல் 10 மணிநேரம் வரை ஊற வைக்கப்பட்டு, மீண்டும் நன்கு பிசையப்பட்டு படிப்படியாக வர்க்கி செய்யப்படுகிறது பல இடங்களில் ஊட்டி வர்க்கி தரமான முறையில் தயாரிக்க்ப்படுவதில்லை. இதில் எண்னைக்கு ப
இந்தநிலையில் தயாரிக்கப்படும் ஊட்டி வர்க்கிக்கு புவிசார்குறியீடுஎன்பது எந்த வகையில்சரியானது என தெரியவில்லை. தற்போது உணவு பகுப்பாய்வு ஊட்டிவர்க்கி சரியானது தரமானதுஎன சான்று கொடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் அவை முறையாக தயாரிக்கப்படவில்லை என கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்புஅதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வர்க்கி புவிசார் குறியீடு பெற இது இந்த பகுதியில் உருவானதல்ல ஆங்கிலேயர்களால் அவர்களின் வழக்கத்தில்உருவாக்கப்பட்டதே. மனித உடலுக்குதீங்கு விளைவிக்கும்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்குவது என்பது ஏற்புடையதல்ல என்பதே எங்களின் கருத்தாகும்
விரைவில் மாவட்டத்தில் செயல்படும் அரசால் அங்கீகரித்த நுகர்வோர் அமைப்புகளான கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஊட்டியில் விற்பனை செய்யப்படும் வர்க்கிகள் பல இடங்களில் சேகரித்து மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ளஉணவு பகுப்பாய்வு மையங்களுக்கு அனுப்பி பரிசோதனை அறிக்கை பெறப்படும். அதன் பின்னர் அவை பாதுகாப்பற்ற உணவு தெரியவந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும்உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்னய சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குபதிவுசெய்யப்படும்
No comments:
Post a Comment