Sify Home >> Movies >> Fullstory
போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி
16 JUNE ,
2015, 11:51 சென்னை,
தமிழக அரசு சார்பில் ஒரு
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் தேசிய ஆசிரியர்
கல்வி குழுமத்தின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்
2003þ2004ம் ஆண்டிற்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜøலை,
ஆகஸ்டு ஆகிய மாதத்தில் விண்ணப்பதாரரிடமிருந்து வரவேற்கப்பட்டு, கடந்த நவம்பர், டிசம்பர்
மாதத்துடன் சேர்க்கை முடிவுற்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசு தேசிய
ஆசிரியர் கல்வி குழுமத்தின் அங்கீகாரம் பெறாத பல ஆசிரியர்
பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரம் செய்து மாணவர்
சேர்க்கை நடந்து வருவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
அரசு அங்கீகாரம் பெறாத மேற்கண்ட
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் எவரும் சேர வேண்டாம் எனவும், அவ்வாறு சேர்ந்து
பயிலும் மாணவர்கள் அரசுத் தேர்வு எழுதவோ, சான்றிதழ் பெறவோ இயலாது எனவும் மாணவர்களும்,
பெற்றோர்களும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட எச்சரிக்கையை மீறி
போலி விளம்பரங்களைக் கண்டு அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும்
மாணவ / மாணவிகள் சார்பாக அரசோ அல்லது துறையோ எந்தப் பொறுப்பும் ஏற்காது.
தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால்
அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தவிர அங்கீகாரம் பெறாத ஆசிரியர்
பயிற்சி நிறு வனங்களில் மாணவர்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
THANKS தேசிய ஆசிரியர்
கல்வி குழுமம்.
No comments:
Post a Comment