உதகை சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலங்குகளிடம் அன்பாயிருத்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம், நெஸ்ட் அறக்கட்டளை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பள்ளி தேசிய பசுமை படை ஆகியன சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லாதா தலைமை தாங்கினார். பள்ளியில் உள்ள மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஓவிய போட்டியில் பங்கேற்றனர். அதில் பலரும் சிறப்பாக ஓவியங்கள் வரைந்திருந்தனர். நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், பள்ளி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முரளி, பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் வழங்கப்பட்ட துணி பைகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லதா துணி பைகளை வழங்கினார். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment