Wednesday, April 10, 2013

தனியார் வசம் உள்ள நூறு ஏக்கர் ந�லத்தை மீட்டு பந்தலூரில் அரசு அலுவலகங்கள் அமைக்க கோரிக்கை


தனியார் வசம் உள்ள நூறு ஏக்கர் ந�லத்தை மீட்டு பந்தலூரில் அரசு அலுவலகங்கள் அமைக்க கோரிக்கை
பந்தலூர், ஏப்.3:
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவ.சுப்பிரமணியம், மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை வருவாய்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
பந்தலூர் நகரில் வாடகை கட்டடத்தில் சில அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல அலுவலகங்கள் இடவசதியை காரணம் காட்டி பந்தலூரில் அமைக்கப்படவில்லை. அரசுக்கு சொந்தமான நூறு ஏக்கர் நிலம், தனியார் வசம் உள் ளது. அதனை மீட்டு அரசு அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண் டும்.
பந்தலூர் தாலுகாவாக பிரிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 3 ஆண�டுக்கு முன்பு தான் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. பந்தலூரில் அரசு கருவூலம், அரசு நுகர்வோர் பொருள் வாணிப கழக குடோன், நூலகம், சந்தை, பொழுதுபோக்கு பூங்கா, பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளிட்டவை அமைக்க போதிய இடவசதியில்லை என்று காரணம் கூறப்பட்டு அவை அமைக்கப்படவில்லை.தற்போது இயங்கி வரும் நுகர்வோர் பொருள் கழக குடோன், விளையாட்டு மைதானம், கிளை நூலகம் ஆகியவை போதிய இடவசதி இல்லாமலும், மிகவும் பழுதடைந்து, உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. பந்தலூரில் பல்வேறு அரசு துறை அலுவலக கட்டடம் அமைக்க உரிய நடவடிக்கை வேண�டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க மாவட்டம் முழுவதும் சோதனை


பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க
மாவட்டம் முழுவதும் சோதனை
ஊட்டி, ஏப். 10:
40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களையும் வணிகர்கள் பயன்படுத்தாமல் இருக்க அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் தமிழகத்தில் முதன்முறையாக கடந்த 1999ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. குறிப்பாக பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தட்டுக்கள், டம்ளர்கள் ஆகியன பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புக்கள் கேரி பேக்குகள் விற்பனையை முழுமையாக தடை செய்ய தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் சிலர் இந்த கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள், பயன்படுத்தும் வணிகர்களின் கடைகளில் சோதனை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் சிலர் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சிலர், 20 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த துவக்கினர். இதனால் தற்போது 40 மைக்ரானுக்கும் குறைவான அனைத்து பிளாஸ்டிக் கவர்களும் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தற்போது பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எந்தனை மைக்ரான் என கண்டறியும் மெஷின்களும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த வாரத்தில் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசிய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், �நீலகிரி மாவட்டத்தில் முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சென்று முறையாக ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கடந்த 1999ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், 2000ம் ஆண்டு ஊட்டி நகராட்சி நிர்வாகம் 20 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்த தடையுத்தரவு செயல்படுத்தப்பட்டது.
தற்போது சிலர் 20 மைக்ரானுக்கு அதிகமாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே இதையும் தடை செய்ய தற்போது 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுக்கள் மற்றும் கேரி பேக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு துணை ஆட்சியர் மற்றும் தாசில்தார் அளவில் உள்ள அதிகாரிகளை கொண்ட குழு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. மேலும தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றன. 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தால் அவைகளை பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்� என்றார்.
கலெக்டர் தகவல்

ஊட்டி நகராட்சி கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வசூல்


ஊட்டி நகராட்சி கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வசூல்
ஊட்டி, ஏப். 8:
ஊட்டி நகரில் உள்ள நகராட்சி கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட பல மடங்கு அதிக கட்டணங் கள் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சிறுநீர் கழிக்க ரூ.4 வசூலிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகரில் சேரிங்கிராஸ், பஸ் நிலையம், ஏ.டி.சி., உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் நக ராட்சி கழிப்பிடங்கள் உள்ளன. இந்த கழிப்பிடங்கள் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளது.
இந்த கட்டண கழிப்பிடங்களில் சமீப காலமாக நகராட்சி சார்பில் நிர்ணயித்த கட்டணங்களை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து அமைச் சர் ஆய்வு செய்து கட்டணம் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். சில நாட்கள் கடைபிடிக்கப்பட்ட இந்த உத்தரவு கால போக்கில் காற்றில் பறந்தது. இந்நிலையில் தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட பல மடங்கு கட்டணங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக ஊட்டி ஏ.டி.சி., மத்திய பஸ் நிலையம், மார்கெட் வளா கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வரை வசூலிக்கின்றனர். கழிப்பிடங்களை அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதால் ஒருசிலர் கேட்கும் கட்டணத்தை கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். குறிப்பாக ஒருசில பொதுமக்களோ, சுற்றுலா பயணிகளோ அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே கோடை சீசன் துவங்குவதற்கு முன்பு இது போன்று நகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிக கட்டணங்கள் வசூலிக்கிறார்களாக என நகராட்சி நிர்வாகம் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,
ஊட்டி நகரில் பெரும்பாலான நகராட்சி கட்டண கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறுநீர் கழிக்க ரூ.1 தான் கட்டணமாக நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.4 வரை வசூலிக்கின்றனர். ஆனால் கழிப்பிடங்கள் சுகாதாரமாக இருப்பதில்லை. அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.
பொதுமக்கள் கோரிக்கை
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பள்ளி, கல்லூரி நுகர்வோர் மன்றத்துக்கு நிதி வழங்க கோரிக்கை


பள்ளி, கல்லூரி நுகர்வோர் மன்றத்துக்கு நிதி வழங்க கோரிக்கை
ஊட்டி, ஏப். 8:
போதுமான நிதி வழங்கப்படாத நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இயங்கும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் செயல்படாமல் போகும் அவல நிலை நீடிப்பதாகவும், உடனடியாக நிதி ஒதுக்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் பல்வேறு அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டு நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடையே நுகர்வோர் கல்வி அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர இன்னும் பல பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கி சிறப்புடன் செயல்படுத்த விரும்புகின்றன.ஆனால், பல பள்ளிகளில் தங்களின் சொந்த முயற்சியினால் கடந்த 5 ஆண்டுகளாக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்கியும் அவர்களுக்கு இதுவரை நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பள்ளிகளின் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடுகள் கேள்வி குறியாக உள்ளது.
நுகர்வோர் கல்வி மக்களிடையே அதிகரிக்க பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பெருமளவு உதவியுள்ளது. இது தொடர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். தற்போது இம்மன்றங்களில் உள்ள மாணவர்களுக்கு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் கூட வழங்க முடியாத நிலையில் சில பள்ளிகள் உள்ளன. இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பெயரளவு மட்டுமே உள்ளது. பள்ளிகளில் செயல்படும் இதர சார்பு அமைப்புக்களான என்எஸ்எஸ்., என்சிசி., தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சுலுவை சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு உரிய காலத்திற்குள் நிதி வழங்கப்படுகிறது. இதனால் இவைகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன. ஆனால் நுகர்வோர் மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி கடந்த 3 ஆண்டுகளாக வந்து சேரவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுமக்களிடையே போய் சேருவது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. தொடர்ந்து நிதி வழங்கப்படாதபட்சத்தில் அடிப்படை செயல்பாடுகள் கூட இல்லாமல் நுகர்வோர் மன்றங்கள் முடங்கிவிடும். எனவே இதுநாள் வரை சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு அரசு உடனடியாக நிதி வழங்கி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்


சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்
ஊட்டி, ஏப். 8:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நீலகிரி கோட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் (வணிகம்) சண்முக வேலாயுதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகர்வோர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,
“விழா கால சிறப்பு பஸ்கள் இயக்கும் போது உள்ளூர் மக்கள் பாதிக்காத வகையில் இயக்க வேண்டும். பல பஸ்களில் மேற்கூரை உடைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும். பொன்னானி & கூடலூர் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். பஸ்களில் பெயர் பலகைகளை பொதுமக்களுக்கு அறியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
ஊட்டி ஏ.டி.சி., பஸ் நிலையத்தில் பஸ்களின் கால அட்டவணை வைக்கப்பட வேண்டும். கைகாட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் காலை முதல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் & பந்தலூர் இடையே டவுன் பஸ் சேவை துவக்க வேண்டும். கூடலூர் கிளையில் காலியாக உள்ள பணிகளுக்கு ஒட்டுனர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே ஒட்டுனர் நடத்துனர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்” என்றார்.
போக்குவரத்து கழக பொது மேலாளர் (வணிகம்) சண்முக வேலாயுதம் பேசியதாவது:
நுகர்வோர் அமைப்புகளின் புகார்கள் ஆலோசனைகள் போக்குவரத்து கழக சேவையில் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறைகள் சரி செய்யப்படுகிறது. ஓட்டுனர், நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக பஸ்கள் இயக்கத்தில் குறைபாடு நிலவியது. ஆனால் பெரும்பாலான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஏ.டி.சி.,யில் கால அட்ட வணை வைக்கப்படும். பஸ்களில் உள்ள மற்ற குறைபாடுகள் சரி செய்யப்படும். ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பயணிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொண்டால் போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் வருவாயும், நற்பெயரும் கிடைக்கும். பயணிகள் சில்லரை கொண்டு வருவது அவசியம் என்பதை உணர வேண்டும். சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்
.இவ்வாறு சண்முகவேலாயுதம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலாளர் பாலராமகிருஷ்ணன், உதவி மேலாளர் கணேசன், கிளை மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.