Friday, October 23, 2015

பொன்னானி ஆறு தடுப்பனைகள் கட்டி தர ​வேண்டும்

பந்தலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் பொன்னானி ஆறு ஓடுகின்றது  இந்த ஆறு தேவாலா முதல் தொடங்கி பொன்னானி வழியாக வெள்ளேரி வரைசென்று கேரளா மாநிலத்திற்குள் சென்று கபினி ஆற்றினைசென்று அடைகின்றது.  இந்த ஆறு தூர் வாரப்படாமல் இருந்ததினால் அவ்வப்போது பெய்யும் பெரும் மழையின்​​போது இந்த ஆற்றில்வெள்ளப்​​பெருக் கொடுத்து ஆற்றின் ஓரங்களில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்த சேதம் செய்து வந்தது.  மேலும்  விவசாய தோட்டங்களில் வெள்ளம் புகுந்து விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டது.  இந்நிலையில் எங்களது அமைப்பின் மூலமும் இந்த பகுதி பொதுமக்களின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்திற்குகோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் பொன்னானி ஆறு தற்போது தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் இந்த  பகுதியில்  கண மழை பெய்தாலும் ஆற்றில் ஏற்படும்வெள்ளம் குடியிருப்புகளுக்குள்​​​விவசாயதோட்டங்களுக்குள்ளோ புகுந்து சேதம் செய்யும் நிலை ஏற்படவில்லை. இதற்கு அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பணியை செய்து கொடுத்த மலைப் பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கும் வேளான்பொறியியல் துறைக்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.
இந்த ஆற்றினை தூர்வாரியதினால்வெயில் காலங்களில் இந்த ஆறு செல்லும் பகுதியில் வசிக்கும் பலரும் தண்ணீர் தேவைகளை பூர்த்திசெய்து வந்தனர். குறிப்பாக பலர் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், ஆடு மாடுகளை குளிப்பாட்டுவதற்கும் இந்த ஆற்றினை பயன்படுத்தி வந்தனர்.  தற்போது தூர்வாரப்பட்டதினால் பல பகுதிகளில் மக்கள் ஆற்றினை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  வெயில் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் இப்பகுதி மக்கள்பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். 
எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெறும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் பொதுமக்கள் ஆற்றினை பயன் படுத்தும்   வகையிலும், நீர்வளத்தினைசேகரிக்கும்வகையிலும் இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பனைகள் கட்ட வேண்டும் என்றும், இந்த ஆறு 17 கிலோ மீட்டர் தூரம் தமிழக பகுதியில் பாய்கின்றது.  இதில் 500 மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பனை வீதம் சுமார் 3 அடி உயரத்திற்கு கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதற்கு மாவட்ட ஆட்சியரிடம் பொது பணி துறை சார்பில் தடுப்பனை கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி நிதி கோரப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 மாதங்களுக்குமேலாகியும் இதுவரை இதற்கான மேற்நடவடிக்கை எதுவும் இல்லை.
இன்னும் சில மாதங்களில் வெயில் காலம் ஆரம்பிக்க உள்ளது,  இந்த காலகட்டத்தில் பொது மக்கள் ஆற்றினை பயன் படுத்த இயலாமல் பாதிக்கப் படும் நிலை ஏற்படும் எனவே விரைவான நடவடிக்கை எடுத்து இந்த ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் முதற்கட்டமாக தடுப்பனைகள் கட்டி தர வேண்டும் எனவும் மற்ற பகுதிகளில் அடுத்த கட்டங்களில் தடுப்பனைகள் கட்டி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment