- உலக நீர் தினம்... ஆரோக்கியமான வாழ்வுக்கு தூய நீர் இன்றியமையாததென்பதே இன்றைய தினத்தின் கருப்பொருள் ஆகும். பூமியில் அனைத்து வகையான உயிரங்கிகளும் நிலைத்திருப்பதற்காக தூய நீரின் வளத்தைப் பேணுவது அவசியமென்பதை வலியுறுத்தி உலகெங்கும் இன்றைய தினம் வைபவங்கள் நடைபெறுகின்றன.
- முன்னைய காலங்களில் தூய நீருக்கான பற்றாக்குறை ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் தூயநீரின் வளம் உலகில் மிக வேகமாக குறைந்து கொண்டு செல்வது அவதானிக் கப்பட்டு வருகிறது. இத்தகைய போக்கு கட்டுப்படுத்தப்படாது போகுமானால் எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் மனிதனின் தனிப்பட்ட பாவனைக்கான தூயநீருக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து ஏற்படலாம்.
- புவியின் மேற்பரப்பில் முக்கால் பங்குக்கு மேலான பகுதி நீரினால் மூடப்பட்டுள்ளது. கடல் உட்பட அனைத்து நீர் நிலைகளிலும் இருந்து நீர் ஆவியாகி மேலே சென்று முகிலாகி மழையாகப் பெய்து, மீண்டும் நிலத்தை வந்த டையும் செயற்பாடு தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீர் வட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண் டேயிருக்கிறது. நீர்க்கோளத்தை விட்டு நீர் எங்குமே சென்று விடுவதில்லை. அவ்வாறிருக்கையில் உலகம் தூய நீருக்கான பற்றாக்குறையை எதிர்நோக்குவது ஏன்?
- மனிதனின் செயற்பாடுகளே இந்த ஆபத்துக்குக் காரணமென நீரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காடுகள் மெருமளவில் அழிக்கப்படுதல், நீர் மாசடைதல், நீரின் அதிகரித்த பாவனை ஆகியனவே தூய நீருக்கான பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமென அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- மனித செயற்பாடுகளின் விளைவினால் புவி உஷ்ணமடைந்து செல்வதால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயருகிறது. இதனால் கடல் நீர் புவியினுள் பிரவேசிப்பதன் விளைவாக தூயநீரின் விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. இது போதாதென்று மறுபுறத்தில் இரசாயனப் பதார்த்தங்களின் பாவனையினால் தூயநீர் படிப்படியாக மாசடைந்து செல்கிறது.
|
No comments:
Post a Comment