Thursday, December 5, 2013

மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் டிசம்பர் 2013 கருத்துரு

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல்  பாதுகாப்பு மையம்



நீலகிரி  மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் டிசம்பர்  2013
கருத்துரு நடவடிக்கை எடுக்க பரிந்துறைத்தல் சார்பாக



பொதுவானவை

நுகர்வோர் புகார்கள் மற்றும் குறைகளை களைவதில் விரைவான நடவடிக்கை எடுத்து  சிறப்பான சேவை செய்து வரும் தமிழநாடு மின்சார வாரியம் நீலகிரி மின் பகிர்மான வட்டத்திற்கும்,   நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்ளுவதோடு இத்துறைகளின் சிறப்பான சேவைகளை பாராட்டி  தேசிய நுகர்வோர் தினத்தில் நினைவு பரிசு வழங்க வேண்டும்.

பல துறைகளில் பல முறை வலியுறுத்தியும் இது வரை காலாண்டு நுகர்வோர்  கூட்டம் நடத்த படவில்லை இது மிகவும் வருந்ததக்கது
இவர்கள் மீது தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரிவாயு விநியோகம் செய்யும் பகுதி குறித்து தகவல் அந்த பகுதி ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஏற்கணவே தீர்மாணிக்க பட்டது இதனை நடைமுறை படுத்த வேண்டும்.

வருவாய் துறை சான்றுகள் பெற விண்ணப்பங்கள் ஜெராக்ஸ் கடைகளில் வாங்க சொல்வதோடு விண்ணப்பத்தோடு பரிந்துரை கடிதங்கள் உள்ளிட்டவை  இணைக்க வேண்டும் எனவும் கட்டாயமாக கோர்ட் பீ ஸ்டாம்பு ஓட்ட வேண்டும் என கூறபடுகிறது. இது குறித்து விளக்கம் வேண்டும்.

மளிகைக் கடைகள் மற்றும் மருந்து கடைகளில் முறையான பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தரமற்ற மின் சாதன  பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

உதகை உணவு விலை ஏற்றத்தினை கட்டுபடுத்த வேண்டும். மக்கள் பயன் பெரும் விதமாக அம்மா உணவகம் உதகையில் அமைக்க வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர், உதகை.

அங்கிகரிக்காத கல்விகளை மிக அதிக கட்டணத்துடன் படித்து கொடுப்பதாக பலர் விளம்பரம் செய்கின்றனர் இது குறித்து கல்வித்துறை காவல் துறை ஆகியோர் முழம் ஆய்வு செய்ய வேண்டும்  

ஞாயிற்று கிழமைகளில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன.  இது மனித உரிமை மற்றும் குழந்தைகள் உரிமைகள் மீறிய  செயல் எனவே வாரந்திர விடுப்பு மற்றும் அரசு விடுமுறைகளை அனைத்து பள்ளிகளிலும் விட அறிவுறுத்துமாறு கேட்டு கொள்வதுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் கொள்கின்றோம்.

சேரம்பாடி உயர் நிலை பள்ளிக்கான இடம் குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் தடுப்பு சுவர் இல்லாததினால் பாதிப்பு  ஏற்படுகின்றது விரைவில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் - நீலகிரி
 
பல நியாய விலை கடைகளில் இன்னும் பழைய முழுமையான தகவல் இல்லாத கடுகு மற்றும் வெந்தயம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய படுகின்றது  பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  அனைத்து கடைகளிலும் காலவதியான தகவல் இல்லாத பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் முலம் உரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கூடலூர் என் சி எம் எஸ் மூலம்  கோஸ் விநியோகத்தில் சேவை அதிக குறைபாடுகள் புகார்கள் வருகின்றன உரிய காலத்தில்  எரிவாயு விநியோக்கிக்க படுவதில்லை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு மருந்தகம் மற்றும் கூட்டுறவு சிறப்பங்காடிகளில்  காலவதியான உணவு பொருட்கள் விநியோகிக்க படுகின்றது வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கூட்டுறவு மருந்தகத்தில் ஜெராக்ஸ் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பொது மேலாளர்,  உதகை மண்டலம்,  
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  

பேருந்துகளில் பாட்டு அதிக சப்தத்துடன் ஒலிக்கபடுவதால் பயணிகள் பாதிப்பு  ஓட்டுனர் நடத்துனர்களிடம் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

கூடலூர் தேவர்சோலை நெலாக்கோட்டை பொன்னானி வழியாக காலையில் ஒரு பேருந்து இயக்க வேண்டும்.

உப்பட்டி கூடலூர் ஈரோடு வழித் தடத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டும்.

பந்தலூர் பகுதியில் பேருந்து இயக்கத்தினை முறை படுத்த நேர காப்பாளர் வேண்டும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் திறக்க வேண்டும்.

பல பழைய பேருந்துகள் இயக்க படுகின்றன இவற்றை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும்

குன்னூர் கைகட்டி பகுதிக்கு மாலை நேரத்தில் உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்க படுவதில்லை பொது மக்கள் பதிப்பு கிளை மேலாளர்  கண்காணிக்க வேண்டும் .

விரைவு பேருந்து சாதாரண பேருந்து தனி அடையாளம் தெரியாமல் மக்கள் குழப்பம் அடைகின்றனர்.  அடையாள படுத்த வேண்டும்.
கிராம புறங்களுக்கு விரைவு பேருந்து இயக்க படுவது கிராம மக்களுக்கு பதிப்பை ஏற்படுத்துகிறது.  இவற்றை சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும்

ஊட்டி கூடலூர் ஆகிய இடங்களில்  போக்குவரத்து கழக கழிப்பிடங்களில் அதிக கட்டணம் ஆனால் சுத்தம் இல்லை பராமரிப்பு இல்லை நடவடிக்கை தேவை

போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பும் புகார்களுக்கு பதில் கிடைப்பதில்லை விரைவான நடவடிக்கை தேவை


இணை இயக்குனர், சுகாதார பணிகள்,
உதகை தலைமை மருத்துவ மனை வளாகம்,  உதகை.

பந்தலுருக்கு கூடுதல் மருத்துவர்கள் பெற்று தந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றோம்.

பந்தலூர் கூடலூர் ஊட்டி  அரசு மருத்துவ மனைகளில் தினசரி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது  ஸ்கேன் எடுக்கும் நாளை  தனியாக நிர்ணயித்து அந்நாளில்  முறையாக ஸ்கேன் எடுக்க வேண்டும் நோயாளிகள் அலைகழிக்க படுவது தவிர்க்க வேண்டும்.

பந்தலூர் அரசு மருத்துவ மனையில் முழு நேர உள்நோயாளிகள் அனுமதிக்க வேண்டும். அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்

இரத்த பரிசோதனை செய்ய பரிசோதகார்கள் நியமிக்க வேண்டும்.  என்ன பரிசோதனை மேற்கொள்ள படுகிறது என்பது குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும்.

கூடலூர் இரத்த வங்கி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு சுடு தண்ணீர்  வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்

மருத்துவ மனை வளாகம்  மற்றும்  கழிவறைகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும்

மனித உரிமை என்ற வார்த்தையை அமைப்பின் பெயரில் பயன் படுத்த அரசு தடை விதித்துள்ளது ஆனால் இவ் வாசகத்தோடு  உதகை அரசு தலைமை மருத்துவ மனைகளில் அறிவிப்பு ஓட்ட பட்டுள்ளது இவற்றை அகற்ற வேண்டும்.

துணை இயக்குனர் பொது சுகாதாரம், உதகை.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும்.

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

காவல் கண்காணிப்பாளர், காவல் துறை  உதகை.

பந்தலூரில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும்

மாலை  வேளைகளில் மாணவர்கள் மக்கள் பேருந்துகளில் ஏறுவதற்க்கு முண்டியடித்து கொண்டு செல்கின்றனர் பேருந்துகளில் மக்கள் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு செல்கின்றனர்.  எனவே கூடலூர் பேருந்து நிலையம் மற்றும் பந்தலூர் பேருந்து நிலையங்களில் தினசரி காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லியாளம் நகராட்சி,  பந்தலூர்.

எலியாஸ் கடை அருகே, தேவாலா நீர்மட்டம் பகுதி மற்றும் உப்பட்டி புஞ்சவயல் பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகள் தூர் நாற்றம் வீசுகின்றது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலூரில் இலவச கழிப்பிடம் அமைக்க வேண்டும்.

பேருந்து நிலையம் அருகில் பயணிகள் நலன் கருதி சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மாநில நெடுஞ்சாலை துறை, ஊட்டி

பந்தலூர் முனிஸ்வரன் கோவில் முதல் முக்கட்டி வரை சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

எலியாஸ் கடை முதல் கொளப்பள்ளி வரை சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மலை பகுதி மேம்பட்டு திட்டம்.

பொன்னானி ஆறு பல பகுதிகளில் குறுகலாக உள்ளதால் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுகின்றது எனவே இந்த ஆற்றை தூர் வார  வேண்டும்.

பந்தலூர் அரசு மருத்துவ மனை பிணவறை அருகே வங்கி உள்ளது இது மழை காலத்தில்  சரிந்து விழும் அபாயம் உள்ளது.  இதனால் பிணவறை பாதிக்கும் எனவே இங்கு தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.

உதகை நகராட்சி,  உதகை.

ஏ டி சி பகுதியில் உள்ள கழிவுகள் அப்புறபடுத்த வேண்டும் தொடர்ந்து சுத்தபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கிய இடங்களில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும்.

தற்போது உள்ள கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க படுகிறது இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சுகாதார மின்றி உள்ளது. கண்காணிக்க வேண்டும்.

கூடலூர் நகராட்சி,  கூடலூர்.

கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் மூடப்பட்டுள்ளதால் சுகாதாரம் பதிப்பு ஏற்பட்டு வருகின்றது.  விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பேருந்து நிலையம் வானத்துர்கா  கோவில் செல்லும் வழியில் உள்ள இலவச கழிப்பிடம் தற்போது சிலர் நின்று  கொண்டு கட்டணம் வசூலிக்கின்றனர்.  மீண்டும் இலவச கழிப்பிடமாக செயல் படுத்த வேண்டும்.

பொது மேலாளர், BSNL குன்னூர்.

மாவட்டத்தின் பல பகுதிகளில்  BSNL கார்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்ய படுகிறது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குந்தா  தேவர் சோலை பகுதியில் புதிய டவர் அமைக்க வேண்டும்.

பல பகுதிகளில்  BSNL டவர் சிக்னல் கிடைப்பதில் சிரம்மம் உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி

சு. சிவசுப்பிரமணியம்
தலைவர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்


















No comments:

Post a Comment