உதகை
சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் துறை சார்பான மாவட்ட நுகர்வோர்
பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு இணை இயக்குனர் பெருமாள்
தலைமை தங்கினார்.
கண்காணிப்பாளர் அனிபா முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
பந்தலுருக்கு கூடுதல் மருத்துவர்கள் பெற்று தந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றோம்.
பந்தலூர்
கூடலூர் ஊட்டி அரசு மருத்துவ மனைகளில் தினசரி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் அல்லது ஸ்கேன் எடுக்கும் நாளை தனியாக நிர்ணயித்து
அந்நாளில் முறையாக ஸ்கேன் எடுக்க வேண்டும் நோயாளிகள் அலைகழிக்க படுவது
தவிர்க்க வேண்டும். பந்தலூர் அரசு மருத்துவ மனையில் முழு நேர உள்நோயாளிகள்
அனுமதிக்க வேண்டும்.
அவசர
சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இரத்த பரிசோதனை செய்ய பரிசோதகார்கள்
நியமிக்க வேண்டும். என்ன பரிசோதனை மேற்கொள்ள படுகிறது என்பது குறித்து
தகவல் பலகை வைக்க வேண்டும்.
கூடலூர்
இரத்த வங்கி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளுக்கு
சுடு தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் மருத்துவமனை வளாகம்
மற்றும் கழிவறைகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். மனித உரிமை என்ற
வார்த்தையை அமைப்பின் பெயரில் பயன் படுத்த அரசு தடை விதித்துள்ளது ஆனால்
இவ் வாசகத்தோடு உதகை அரசு தலைமை மருத்துவ மனைகளில் அறிவிப்பு ஓட்ட
பட்டுள்ளது இவற்றை அகற்ற வேண்டும்.
பந்தலூர் மருத்துவ மனை எக்ஸ் ரே மிஷன் பழுதடைந்துள்ளது. சரிசெய்ய வேண்டும்.
கூடலூர் டிஸ்பென்சரி க்கு கூடுதல் மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும்.
மருந்து சிட்டுகள் நோயாளிக்கு வழங்க வேண்டும்.
நேயாளிகள் முறையாக கவனிக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து பேசினார்.
இணை இயக்குனர் பெருமாள் பதில் அளித்து பேசியதாவது
கூடலூர் இரத்த வங்கி தற்போது எம் எல் ஏ நிதியின் முலம் ஏசி மிசின் வாங்கி பொருத்தப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற உடன் விரைவில் திறக்க படும்.
பந்தலூர் எக்ஸ்ரே இயந்திரம் கண்டம் செய்ய பட்டுள்ளது எனவே கோத்தகிரி மருத்துவ மையிலிருந்து வேறு இயந்திரம் பெற பட்டு விரைவில் வழங்கப்பட்டு செயல் படுத்த படும்
மருந்து சிட்டுகள் கொடுக்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.
விரைவில் கூடலூர் டிஸ்பென்சரி க்கு கூடுதல் மருத்துவர் நியமிக்க படும் என்றார் மேலும்
நோயாளிகள் மருத்துவ மனை வளாகங்களில் சுத்தமாக வைக்க உதவ வேண்டும். வரிசையில் நின்று பொறுமையுடன் சிகிக்சை பெற வேண்டும் என்றார் .
கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள் விவேக் ஆனந்த், சுரேஷ் ராஜன், அறிவழகன், கார்த்திகேயன் அங்கீகரிக்க பட்ட நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
No comments:
Post a Comment