Wednesday, April 10, 2013

ஊட்டி நகராட்சி கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வசூல்


ஊட்டி நகராட்சி கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வசூல்
ஊட்டி, ஏப். 8:
ஊட்டி நகரில் உள்ள நகராட்சி கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட பல மடங்கு அதிக கட்டணங் கள் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சிறுநீர் கழிக்க ரூ.4 வசூலிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகரில் சேரிங்கிராஸ், பஸ் நிலையம், ஏ.டி.சி., உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் நக ராட்சி கழிப்பிடங்கள் உள்ளன. இந்த கழிப்பிடங்கள் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளது.
இந்த கட்டண கழிப்பிடங்களில் சமீப காலமாக நகராட்சி சார்பில் நிர்ணயித்த கட்டணங்களை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து அமைச் சர் ஆய்வு செய்து கட்டணம் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். சில நாட்கள் கடைபிடிக்கப்பட்ட இந்த உத்தரவு கால போக்கில் காற்றில் பறந்தது. இந்நிலையில் தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட பல மடங்கு கட்டணங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக ஊட்டி ஏ.டி.சி., மத்திய பஸ் நிலையம், மார்கெட் வளா கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வரை வசூலிக்கின்றனர். கழிப்பிடங்களை அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதால் ஒருசிலர் கேட்கும் கட்டணத்தை கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். குறிப்பாக ஒருசில பொதுமக்களோ, சுற்றுலா பயணிகளோ அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே கோடை சீசன் துவங்குவதற்கு முன்பு இது போன்று நகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிக கட்டணங்கள் வசூலிக்கிறார்களாக என நகராட்சி நிர்வாகம் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,
ஊட்டி நகரில் பெரும்பாலான நகராட்சி கட்டண கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறுநீர் கழிக்க ரூ.1 தான் கட்டணமாக நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.4 வரை வசூலிக்கின்றனர். ஆனால் கழிப்பிடங்கள் சுகாதாரமாக இருப்பதில்லை. அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.
பொதுமக்கள் கோரிக்கை
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment