Wednesday, January 30, 2013

பந்தலூரில் ஆதிவாசி விவசாய பொருள் விற்பனை நிலையம்


பந்தலூரில் ஆதிவாசி விவசாய பொருள் விற்பனை நிலையம்



ஊட்டி, : ஊட்டியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் தனி அலுவலர் கோபால், பொது விநியோக கூட்டுறவு சார் பதிவாளர் ரவி ஆனந்த் மற்றும் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், 

நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க சூப்பர் மார்கெட்டில் தரமற்ற காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 
மேலும், பல ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படுவதில்லை. இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

 பல நியாயவிலை கடைகளில் மின் தாரசு பயன்படுத்துவதில்லை. எடையளவுகள் சரியில்லாமல் எடை குறைவாக உள்ளதாக பலர் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

பந்தலூரில் உரம் விற்பனை செய்ய கிடங்கு அமைக்க வேண்டும். 

சேரம்பாடி அருகே மண்ணாத்திவயல் பகுதியில் கடை அமைக்க வேண்டும்.  

அனைத்து நியாய விலை கடைகளிலும் அயோடின் உப்பு விற்பனை செய்யப்பட வேண்டும். 

கூட்டுறவுத்துறை சார்பில் பந்தலூரில் சூப்பர் மார்கெட் திறக்க வேண்டும். 

கொளப்பள்ளியில் கூட்டுறவு வங்கி திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் கூறுகையில், அளவகள் குறித்து நியாயவிலை கடை ஊழியர்கள் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்படும். 

பந்தலூரில் ஆதிவாசிகளுக்கான விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மையம் திறக்கப்படும். 

மண்ணாத்திவயல் பகுதியில் ரேஷன் கடை அமைக்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலவச அறை வசதி செய்து கொடுக்கப்பட்டால் விரைவில் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அனைத்து கடைகளிலும் இருப்பை பொருத்து அயோ டின் உப்பு விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்படும்.

ஏற்கனவே தேவாலாவில் உள்ள சூப்பர் மார்கெட் நஷ்டத்தில் இயங்குகிறது. எனவே புதிய சூப்பர் மார்கெட் அமைப்பது கடினம். இருப்பினும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.''

கொளப்பள்ளி பகுதியில் கூட்டுறவு வங்கி திறக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு அனுமதி பெற்றவுடன் வங்கி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கூட்டுறவு நிறுவனம் மூலம் பந்தலூர், தேவாலா, கூடலூர் மற்றும் ஊட்டியில் மருந்துகடைகள் செயல்படுகின்றன. இங்கு தரமான மருந்து பொருட்கள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுக்கின்றது. 

கோத்தகிரியில் புதிதாக கூட்டுறவு மருந்துகடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். 

கூட்டத்தில் புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன், நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
.

No comments:

Post a Comment