Wednesday, January 30, 2013

உடல் உறுப்பு தானம் செய்ய, இளைஞர்கள் முன்வர வேண்டும்

ஊட்டி:உடல் உறுப்பு தானம் செய்ய, இளைஞர்கள் முன்வர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.மத்திய அரசின் நேரு யுவகேந்திரா நீலகிரி கிளை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து, ஊட்டி ரமணா பயிற்சி மையத்தில், தேசிய இளையோர் தின விழாவை நடத்தின.பயிற்சி மைய முதல்வர் சுரேஷ் வரவேற்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், உடல் உறுப்பு தானம் செய்வது, மிகப் பெரிய தியாகம். ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறையாவது ரத்த தானம் செய்திருக்க வேண்டும், என்றார்.
நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் பேசுகையில்,இளைஞர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட, நேரு யுவகேந்திரா பல உதவிகளை செய்து வருகிறது. போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளிவர வேண்டும், என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசுகையில், இளைஞர்கள், அரசியல், ஜாதி, மதம், இனம், ரசிகர் மன்றங்களை கடந்து, சேவை செய்ய வேண்டும், என்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நஞ்சன், மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் பேசினர். மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment