காலாவதி உணவு பொருள் விற்பனை செய்வோர் மற்றும் கலப்படம் செய்வோர் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று உணவு அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார்.
வடசென்னையில் காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கி வைத்தது பிடிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரசையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இது குறித்து நடந்த விவாதத்தில் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் சேகர் பாபு, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பா.ம.க உறுப்பினர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், ம.தி.மு.க உறுப்பினர் சதன் திருமலை குமார், விடுதலைசிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, காலாவதி உணவுப்பொருட்கள் மற்றும் கலப்பட உணவுப்பொருட்கள் விற்பனை செய்வோரை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், சென்னை நகரில் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு உணவு கிடங்கில் காலாவதியான உணவு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தொலைபேசி மூலமாக தகவல் பெறப்பட்டது.
இத்தகவலை அடுத்து, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை ஆணையாளர் மற்றும் அலுவலர்கள், குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், உள்ளூர் காவல்துறை அலுவலர்கள் ஆகியோருடன் கடந்த 30ஆம் தேதி இரவு 7.30மணிக்கு வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.சாலை 4வது சந்தில் உள்ள கிடங்கில் திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த சோதனையின் போது, கிடங்கு பூட்டப்பட்டு இருந்தது. உரிய தகவல் அளித்தும் கிடங்கை வாடைக்கு எடுத்துள்ள துரை பாண்டி என்பவர் வரவில்லை. அங்கு குழுமிருந்த பத்திரிகை செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்த கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு கிடங்கு சோதனையிடப்பட்டது.
இந்த சோதனையின் போது, அந்த கிடங்கில் காலாவதியான அரிசி, துவரம் பருப்பு, மிளகாய் ஆகிய உணவுப்பொருட்களும், டீத்தூள், புளி, சாக்லேட் மற்றும் சோப்பு, பவுடர்கள், பிஸ்கட், பேஸ்ட் போன்ற காலாவதி பொருட்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்களிடமும் இதுகுறித்து விசாரணை செய்ததில் பெரிய கடைகளில் காலாவதியான பொருட்களை இந்த கிடங்கை வாடகைக்கு எடுத்துள்ள நபர் துரைபாண்டி என்பவர் குறைந்த விலைக்கு வாங்கி. இக்குடோனுக்கு கொண்டு வந்து அப்பகுதி மக்களுக்கு டேமேஜான பொருட்கள் என தெரிவித்து இப்பொருட்களை குறைவான விலையில் விற்பதாக தெரிவித்து விற்பனை செய்தும் வந்தார் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து பொதுமக்கள், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னிலையில் கிடங்கில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள 47 வகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல் நலனுக்கு உறுவிளைவிக்கும் வகையில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்து வந்த துரைபாண்டி என்பவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழும், உணவு கலப்பட தடுப்புச்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க ராயபுரம் மண்டல உதவி ஆணையரால், ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜெகன், சுடலை ஈஸ்வரன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வியாபாரத்தை நடத்தும் துரைபாண்டி என்பவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். உணவு கலப்பட தடுப்புச்சட்டத்தின் கீழ் துரைபாண்டி மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் காலாவதி உணவுப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் காலாவதியான உணவுப்பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்திலும் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துரைபாண்டியை காவல்துறையினர் தேடி வருவதுடன், உணவுப்பொருள் கலப்படம் மற்றும் காலாவதி உணவுப்பொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
பொதுமக்களிடம் காலாவதி உணவுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கல்லூரி மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி அளிக்கப்படும். இதை கொண்டு அவர்கள் பொற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்று அமைச்சர் வேலு கூறினார்.

No comments:
Post a Comment