Saturday, October 25, 2014

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?


முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.
வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.
கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.
பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.
பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.
அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.
சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.
 
 
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment