Monday, October 20, 2014

உதகை அருகே  காத்தாடிமட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் அதிகரட்டி மின் வாரியம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன் இனைந்து எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நெடுமாறன் தலைமை வகித்தார்.  நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் வரவேற்றார்.  

அதிகரட்டி மின் வாரிய உதவி மின் பொறியாளர் நிர்மல்குமார்  பேசும்போது தற்போது உலக அளவில் வெப்பமயமாதலினால் மிக பெரிய ஆபத்து ஏற்படவுள்ளது.  தற்போது மின் உற்பத்தி அதிக அளவு அனல் மின் நிலையங்கள் முலமே உற்பத்தி செய்யபடுகிறது. இவற்றில் இருந்து வெளியாகும் வாயுக்கள் முலமும் உலக வெப்பமயமாதல் ஏற்படுகிறது.  நாம் வெப்பமயமாதலை தடுக்க மின்சாரத்தினை சிக்கனப்படுத்த வேண்டும்.  நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு மின்சார பொருட்களுக்கும்  மின்தேவை உள்ளது.  சராசரியாக 60  வாட்ஸ் தரகூடிய வெளிச்சத்தினை காட்டிலும் இரு மடங்கு வெளிச்சத்தினை 16 வாட்ஸ் சி எப் எல் பல்பில்  பெறலாம்.  தற்சமயம் LED பல்புகள் 6 வட்ஸ் பல்புகள்  60 வாட்ச் குண்டு பல்புகள் தரும் வெளுச்சைதினை தருகிறது.  இவற்றை பயன் படுத்துவாதல் மின் கட்டணம் 5 மடங்கு குறையும் சாதாரண ஜீரோ வாட்ஸ்  பல்புகளே 12 வாட்ஸ் வரை மின்சாரத்தினை எடுத்து கொள்கிறது. எனவே ஒவ்வருவரும் மின்சாரத்தினை சிக்கனபடுத்திட வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நாம் அண்றாடம் பயன் படுத்தும் பொருட்களான  வாசிங் மெசின் அயன்பாக்ஸ் உள்ளிட்டவற்றில்  3 ஸ்டார் குறியீடு இருப்பின் பயன்படுத்தலாம் ISI தர குறியீடு பெற்ற பொருட்கள் மின் செலவையும் கட்டுபடுத்தும்.  தேவையற்ற பொது மின்சார பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் சூரிய சக்தி மின் சக்தியை பயன்படுத்தலாம். மின்சாரம் சிக்கனம் செய்வதன் மூலம் தொழில் சாலை களுக்கு மின் தேவையைபூர்த்தி செய்ய முடியும் இதனால் தொழில் வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் உதவலாம் என்றார்.

மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் அதிகரட்டி மின் வாரிய ஊழியர்கள் ரமேஷ், ஈஸ்வரன், சங்கர், சுப்பிரமணி,  ரவிகுமார் பள்ளி ஆசிரியர்கள் கட்டபொம்மன், விஜய் கண்ணன், மூர்த்தி, கணேஷ் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஆசிரியர் லோகநாதன்  நன்றி கூறினார்.

No comments:

Post a Comment