பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து 146-வது மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் 39-வது கருப்பு காந்தி காமராஜரின் நினைவு நாள் ஆகியன அனுசரிக்க பட்டது.
மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் ஆகியோர் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூய்மை இந்தியாவிற்கு உறுதிமொழி எடுத்து கொள்ளபட்டது
இதனை முன்னிட்டு மாணவிகளிடையே கட்டுரை போட்டி நடத்த பட்டது.கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடத்த பட்டது. நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் செலின், கூட்டுறவு பண்டக சாலை மேற்பார்வையாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
கட்டுரை போட்டியில் 9-10 வகுப்பு பிரிவில் முதல் பரிசு நிசாந்தியும், இரண்டாம் பரிசு சிஞ்சுவும், மூன்றாம் பரிசு ஷோபாவும் பெற்றனர்.
6-8ம் வகுப்பு பிரிவில் வினோதினி முதல் பரிசும் சுஷ்மிதா இரண்டாம் பரிசும், ராதிகா மூன்றாம் பரிசும் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற 45 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காந்தி பொது சேவை மைய செயலாளர் சந்திரன், நிர்வாகிகள் காளிமுத்து, செல்வராஜ், சுரேஷ், கபீர், சாதிக், செந்தாமரை, அகமது மஜீத், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment