ஊட்டி:"கவர்ச்சிகர விளம்பரங்களில் வரும் பொருட்களை கவனமுடன் வாங்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் சார்பில், ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
பயிற்சி இயக்குனர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்ரமணியம், "நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளி பேசுகையில், ""உணவில் கலப்படம் அதிகரித்து வருகிறது. கடுகு, பருப்பு, தேயிலை தூள், மைதா மாவு போன்ற அத்தியாவசிய பொருட்களில் செய்யப்படும் கலப்படும் பலவித நோய்கள் ஏற்பட காரணமாகிவிடுகிறது. கவர்ச்சிகர விளம்பரங்கள் மூலம் விற்பனைக்கு வரும் "ஜங்க்புட்' உணவுப் பொருட்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும். உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிக்க பிரத்யேக உபகரணம் உள்ளது; இதில், 20 வகை பரிசோதனை உபகரணங்கள் உள்ளன.
இதை மக்கள் பயன்படுத்தி, கலப்படத்தை கண்டறிய வேண்டும்,'' என்றார்.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் பேசுகையில், ""சாலையோர தள்ளு வண்டிக் கடைகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் தரமற்றவை,'' என்றார்.
பயிற்சி மைய பயிற்சியாளர் சதீஷ், பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர்.
"கலப்படம் செய்யும் கல் நெஞ்சங்களே' என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உணவு கலப்படம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
No comments:
Post a Comment