Wednesday, June 6, 2012

நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள்

கூடலூர் :
கூடலூர் :"நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனு:
கடந்த ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது.
தற்போது 120 சேனல்கள் வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீதும் வழங்குவதில்லை. இது குறித்த புகார்களுக்கும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் தாசில்தார் நடவடிக் கை எடுப்பதில்லை.
"இவர் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் நபர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்,' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்­ளது.
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப் படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள் ளார்.
வி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனு:
கடந்த ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது. தற்போது 120 சேனல்கள் வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீதும் வழங்குவதில்லை. இது குறித்த புகார்களுக்கும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் தாசில்தார் நடவடிக் கை எடுப்பதில்லை.
"இவர் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் நபர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்,' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்­ளது.
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப் படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள் ளார்.

No comments:

Post a Comment