Wednesday, June 6, 2012

சேரங்கோடு பகுதியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் 110வது இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் 110வது இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், பந்தலூர்-கூடலூர் வட்டார நுகர்வோர் சங்கம் இணைந்து பந்தலூர் அஅஙீருகேயுள்ள சேரங்கோடு இலவச தையல் பயிற்சி மையத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தின.
டாக்டர் அமராவதி ராஜஅஙீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.126 பேர் பங்கேற்ற முகாமில், 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் விஜயன் சாமுவேல் வரவேற்றார்.சங்க தலைவர் விஜயசிங்கம், எச்.ஏ.டி.பி., ஒருங்கிணைபாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் எலிசெபத், தனிஷ்லாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜா நன்றி கூறினார்

No comments:

Post a Comment