Tuesday, August 4, 2015

எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைப்பெற்றது.

கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைப்பெற்றதுகூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லசாமி தலைமை தாங்கினார்
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது புதிய கேஸ் இணைப்பிற்கு அடுப்பு உள்ளிட்டவை கட்டாயம் வாங்க சொல்வதை தடுக்க வேண்டும், கேஸ் ஏஜென்சி நியமித்த ஊழியர் தவிர பிறர் எரிவாயு வினியோக வாகனத்தில் செல்வது தடுக்கப்படவேண்டும், எரிவாயு உருளையின் வாய்பகுதி உரிய பாதுகாப்புடன் இல்லாமல் உள்ளது கண்காணிக்க வேண்டும் கேஸ் சிலிண்டர் கேட்டு பதிவு செய்யும்போது அடிக்கடி கேன்சல் ஆவதால் மக்கள் பாதிக்கபடுகின்றனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எரிவாயு பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்மேலும் எரிவாயு நுகர்வோர்கள் சார்பில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தல், வாகனம் உரிய அடையாளத்துடன்  இயக்கவேண்டும் வாடிக்கை யாளர்களிடம் மரியாதை குறைவாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்வேறு பகுதியில் உரிய இடங்களில் வினியோகம் செய்யப்படாமை நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் கூலிதொழிலாளர்கள் பலரும் ஒரிடத்தில் சிலிண்டர்களை இறக்கி வைக்க சொல்லும் போது ஆய்வின்போது பறிமுதல் செய்வதால் பாதிக்கப்படுகின்றனர் இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
பதில் அளித்த மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லசாமி பேசும்போது  சட்டப்படி புதிய இணைப்பிற்கு கட்டாயப்படுத்த கூடாது விருப்பமுள்ளவர்கள் மட்டும் இணைப்புகளை வாங்கிக் கொள்ளட்டும், உரிய பணியாளர்கள் இன்றி மற்றவர்களை எரிவாயு வினியோகிக்க அனுப்பகூடாது, உரிய பாதுகாப்புடன் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்யவேண்டும், மக்கள் அதிகம் உள்ள இடங்களில் அவர்களின் இருப்பிடம் அருகில் சிலிண்டர்கள் இறக்கிதர வேண்டும், வாகனம் உரிய அடையாளத்துடன் இயக்கவேண்டும், நிர்ணயம் செய்த கட்டணத்தினை விட வினியோகம் செய்யும் நபர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது எரிவாயு முகமைகள் உரிய கண்காணிப்புடன் செயல்படவேண்டும்மேற்படி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ​மேலும் ஒரிடத்தில் அதிக சிலிண்டர்கள்​ வைத்திருப்பது சட்டப்படி குற்றம் எனினும் எரிவாயு பதிவு​ செய்தது மற்றும் உரிய ஆவணங்கள் காட்டினால் அ​வை உரியவர்களிடம் ஒப்ப​டைக்கப் படும் நுகர்வோர் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் மத்தியில் எரிவாயு பயன்பாடு மற்றும் சிக்கனம் தொடர்பாக அனைத்து எரிவாயு முகமைகளும் உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் மற்றும் கவுன்சிலர்கள் எரிவாயு முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment