Saturday, August 29, 2015

தொழிலாளர் நல துறை அலுவலகத்தில் துறை ரீதியான நுகர்வோர்காலாண்டு கூட்டம் நடைப்பெற்றது

குன்னூர் தொழிலாளர் நல துறை அலுவலகத்தில் துறை ரீதியான நுகர்வோர்காலாண்டு கூட்டம் நடைப்பெற்றது.  கூட்டத்திற்கு தொழிலாளர் நல அலுவலர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.  
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போதுதேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் எஸ்டேட்டுகளில் அரசு விடுமுறைஅறிவிக்கும் போது விடுமுறை விடாமல் வேலை செய்ய வைக்கின்றனர்உன்¢ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும்குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு அவ்வப்போதுமேற்க்கொள்ள வேண்டும்,  எடை அளவுகள் பொட்டலமிடுதல் போன்றவைமுறையற்று நடைபெறுகின்றதுஎந்த தகவலும் இல்லாமல் உள்ளதையும் பாலில் பலநிறுவனங்கள் பயன்பாட்டு தேதியை அச்சிடுகின்றனர்இதனால் நுகர்வோர் குழப்பம்அடைகின்றனர் இவற்றையும்  உரிய ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும் என்றார்
நீலகின்¢ மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பின் பொது செயலாளர் வீரபாண்டியன்பேசும்போது எரிவாயு வினியோகத்தின் போது எடையளவு கருவிகள் கொண்டுசெல்வதில்லை,  தராசுகள் பல இடங்களில் முறைகோடாக பயன்படுத்தபடுவதால்நுகர்வோர் எடையளவில் பாதிக்கப்படுகின்றனர்.  மண்ணென்னை அளவுகள் மிகவும்குறைவாக ஊற்றப்படுகின்றது,  பெட்ரோல் பங்குகளில் அளவுகளில் முறைகேடுஉள்ளது இவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் பேசும்போது பெட்ரோல்விலை அதிகரித்தவுடன் விலையை அதிகரிக்கும் பெட்ரோல் பங்குகள் விலைகுறையும் போது உடனடியாக குறைப்பதில்லை உரிய ஆய்வு மேற்க்கொள்ளவேண்டும் எடை தராசுகள் பதிவு முத்திரை இடாதவர்கள் பதிவு செய்து கொள்ள உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்,
பதிலளித்து பேசிய தொழிலாளர் நல அலுவலர் வேல்முருகன் பேசும்போதுதோட்டங்களில் அரசு அறிவித்த விடுமுறைகளில் வேலை வைத்தால் அதற்குஇரட்டை ஊதியம் வழங்க வேண்டும்,  பலரும் எங்களுக்கு படிவம் 5ல்தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று தந்துவிட்டு வேலை வழங்குகின்றனர்எங்களுக்கு தகவல் தராமல் வேலை கொடுப்பவர்கள் மீது புகாரின் அடிப்படையில்வழக்கு பதிவு செய்து வருகின்றோம்,  குழந்தை தொழிலாளர்களை பொறுத்தவரையில் 14 வயதிற்குட்பட்டவர்கள் கட்டாயம் வேலையில் அமர்த்த கூடாது, 14முதல் 18 வயது வரையிலானவர்கள் எளிமையான வேலைகளில் மட்டும்பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால் அதனை தடை செய்ய முடியாது,  எனினும்அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்,  பொட்டலமிடுவதற்கு சென்னையில் உரிமம் பெறவேண்டும் பொட்டலங்கள் உரிய தகவல் இல்லாதபோது அவை மீது நடவடிக்கைஎடுக்கப்படும்.  அனைத்து பொருட்களுக்கும் பொட்டலமிடப்பட்ட தேதியை கட்டாயம்அச்சிட வேண்டும்பாலை பொறுத்தவரையிலும் பொட்டலமிடப்பட்ட தேதியையேபயன்படுத்த வேண்டும்
எரிவாயு நிறுவனங்கள் வில் தராசு பயன்படுத்துகின்றனர் அவை கட்டாயம் எரிவாயுவினியோக வாகனத்தில் இருக்க வேண்டும்,  மண்ணென்னை அளவு குறைபாடுமக்களில் அவசரத்தினாலேயே ஏற்படுகின்றது,  மக்கள் பொறுமையாக அளவைசரிபார்த்து வாங்க வேண்டும் பெட்ரோல் பங்குகளில் தற்போது உள்ள இயந்திரங்களில்முறைகேடு செய்ய இயலாது,  அதற்கேற்றார் போல் எங்களின் துறை சார்பான சீல்வைக்கப்படுகின்றதுஎடையளவு கருவிகளை பொருத்தவரை  தயாரிப்பு நிறுவனம்மற்றும் எண்ணெய் நிறுவனங்களே 0.05 சதவீதம் எடை அளவில் மாறுபடும் எனகூறியுள்ளனர்,  அதைவிட அதிக அளவு குறைவாக இருப்பின் கட்டாயம் நடவடிக்கைஎடுக்கப்படும்
தாராசுகள் முகாம்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் முத்திரை இடப்படுகின்றதுமுகாம்களில் தவறவிட்டவர்கள் கூடலூர் பந்தலூர் உதகை ஆகிய பகுதிகளைசேர்ந்தவர்கள் வியாழக்கிழமை தோறும் உதகை தொழிலாளர் அலுவலகத்திலும்,குன்னூர் கோத்தகிரி குந்தா பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளி தோறும் குன்னூர்தொழிலாளர் அலுவலகத்திலும் முத்திரை இட்டுக்கொள்ளலாம்வில்தாராசுகள்எலக்ராணிக்ஸ் தாராசுகள் ஆண்டுக்கொரு முறையும்எடை கற்கள் தாராசுகள்இரண்டான்டிற்கு ஒரு முறையும் முத்திரை இட வேண்டும் காலத்தில்தவறவிட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் முத்திரை இட்டுக்கொள்ளலாம்முத்திரை இடாத தாராசுகள் அளவைகள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் பெட்ரோல் உள்ளிட்ட எண்ணை விலைகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில்இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் ஒவ்வொரு பங்குகளிலும்விற்பனை அலுவலர் எண் குறிப்பிட வேண்டும் அதில் புகார் தெரிவிக்க வேண்டும்என்றார்
கூட்டத்தில் மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்,
முன்னதாக குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் செல்லப்பா இசக்கி வரவேற்றார் முடிவில் உதகை தொழிலாளர் உதவி ஆய்வாளர்  சேகரன்  நன்றி கூறினார்.


S.SHIVA, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800 - 94 88 315 600  94 898 60 250  -  944 29 740 75  - 948 639 34 06

No comments:

Post a Comment