Sunday, October 6, 2013

மருத்துவ குணங்களை கொண்ட தேநீர்

மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட சுவைமிகு ஆரோக்கிய பானம் தேநீர்


தேயிலை ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வணிகப் பயிராகும். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப் படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன் படுத்தப்படுகிறது.



வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ் வேறு வகையான தேயிலைகள் பெறப்பட்டாலும், பக்குவப் படுத்தல் முறையில் அவை வேறுபடுகின்றன.

தேயிலையின் இரு சொற் பெயர் Camellia Sinensis என்பதாகும்.
இங்கு ஷிinலீnsis என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். விaசீலீllia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661 - 1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும்.
அருட்திரு செரொக் காமெல் தேயி லைச் செடியைக் கண்டுபிடிக்கவோ, அல்லது பெயரிடவோ இல்லை. எனி னும் தேயிலையின் இன்றைய இன த்தை உருவாக்கியகரோலஸ் லின்னே யஸ் என அறியப்பட்ட தாவரவியலாள ரான அருட்திரு. செரொக் காமெல் அடிகளார் அறிவியல்துறைக்கு ஆற் றிய சேவையை பாராட்டும் வகை யில் இப்பேரினத்துக்கு இப்பெ யரை இட்டார்.
தேயிலை முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின்னர் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க சென்ற ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு. 800 களில் தேயிலை ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரர்கள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-1850களில் இந்தி யாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வர வழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழைமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுக ர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன் றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்பகுதி யில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை பிரசித்தி பெற்றவையாகும்.
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யப் படுகின்றன. அந்த வகையில் டார் ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
இமயமலையின் பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை டார்ஜிலிங் தேயிலையாகும். இப்பகு திக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண்வளம் மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் டார்ஜிங் தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும்.
டார்ஜிலிங் தேயிலையை போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச் சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிக பட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், போலந்து, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள் ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற் றுமதி செய்யப்படுகிறது.
சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.
தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள் ளன. தேநீரின் நிறத்தைப் பொறுத்து இவை இவ்வாறு பிரிக்கப்படு கின்றன.
தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், நன்மை செய்யக் கூடியதாகும். பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய் ப்புகள் குறைவதாக உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடி வுகள் தெரிவிக்கின்றன.
உடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது. சீனாவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலை துணை புரிவ தாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் களை ப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறுசுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவு கிறது.
தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென் டுகள். குறைவான கொழுப்பு அளவு ஆக்கியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல்புற்று நோய் வராமல் தடுப் பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு, உதவுகின்றன. தேயிலையில் உள்ள புளோரைட்டு பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment