டீ யின் மருத்துவ குணம்
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ-நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .
இருபினும் "உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள்" தினமும் ஒரு கப் டீ மட்டும் அருந்தினால் நன்று . உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.
ஒரு சிலர் டீயை கொதிக்க கொதிக்க தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே இவை தொடர்ந்தால் தொண்டை புற்று நோய் உருவாக வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய மருத்துவ-ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
இஞ்சி டீ-யின் மருத்துவ குணங்கள் | |
[ செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, 02:39.03 மு.ப GMT ] | |
மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
கவலை நிவாரணி
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.
நமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
மன அழுத்தம் போக்கும்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.
இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜீரணசக்தி கிடைக்கும்
மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க, இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின் மீது வைத்துக் கொண்டால் பெரிய அளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கேன்சர்:கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
நீரிழிவு:கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.அத்துடன் இது 'இன்சுலீனின்'செயல்பாட்டையும்'அதிகரிக்கிறது. இதயம்:இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL ,டிரைகிளிசரைடுகளின் அளவைக்கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. ஆர்த்ரைட்டீஸ்:ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டாம். ஒபிஸிட்டி: உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது. முதுமை: வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுக்கலாமே.உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப் படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது. பல்: கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது. அழகு: கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறதாம். பயன்படுத்தும் முறை: கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு. இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும். மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது. 80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம். சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம். ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.
|
No comments:
Post a Comment