உதகை அருகே கத்தாடிமட்டம் அரசு மேல் நிலை பள்ளியில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் நாட்டு நலப் பணி திட்டம் ஆகியன இணைந்து சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை நடத்தின. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சாரதாமணி தலைமை தங்கினார்
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
நுகர்வோருக்கு உரிமை இருப்பதைபோல தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் கடமையும் உள்ளது. பொருட்களை, சேவையை பெறும்போது அவைகளை ஆராய்ந்து பார்ப்பது ஒவ்வொரு நுகர்வோரின் கடமையாகும். வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி பொருட்கள் வாங்குவது தவறு. உரிமையும், கடமையும் சரி சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவு பொருட்கள் தரமானவைகளா? கலப்படம் அற்றதா? என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். பாஸ்ட் பூட் எனப்படும் நுடுல்ஸ், லேஸ், போன்ற உணவு வகைகள் உடலுக்கு தெங்கு விளைவிக்க கூடியவை
கலர் ஏற்றப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் இயற்கை உணவுகளை உண்டதால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். இன்று நமது சராசரி வயது 63 ஆக உள்ளது. இது மட்டுமின்றி சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே தரமற்ற பொருட்களை வாங்குவதை தவிர்த்து தர முத்திரைகள் பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும் என்றார்
ஆசிரியர் யோகநாத மூர்த்தி, இராமச்சந்திரன், கணேஷன் மெர்சி கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகி ஜெயபிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் 400க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவ தலைவர் ரியாஸ் அகமது வரவேற்று பேசினர்
முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலர் ஜெயலச்ச்மி பொருளார் நிஷா மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment