Wednesday, September 30, 2020

பொதுக்குழு கூட்டம் பந்தலூர் 24.08.2020

 கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பொதுக்குழு கூட்டம் பந்தலூர் 24.08.2020 அன்று போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்

 

கூட்டத்தில் செயலாளர் சிவசுப்பிரமணியம் செயல்பாட்டு அறிக்கையும்

பொருளாளர் ஜெயச்சந்திரன் வரவு செலவு அறிக்கையையும் வாசித்து அளித்தனர்.

 

அமைப்பின் உறுப்பினர்கள் இறந்தவர்கள் அடிப்படையில் ராஜசேகர், லட்சுமி மற்றும்  அமைப்பின் கொள்கைக்கு எதிரான வகையில் செயல்பட்டதால் புவனேஸ்வரன், சுரேஷ், கனேசன், செல்லையா ஆகியோர் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

 

தொடா்ந்து விவாதத்திற்க பிறகு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 

1.      அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு அளித்த அரசு துறைகள், நுகர்வோர் அமைப்புகள் கூட்டமைப்புகள், தன்னார்வ அமைப்புகள்,  பத்திரிக்கைகள் எனஅனைத்து தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுதல்,

 

2.      நீலகிரி மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி அளித்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்ளுதல்.

 

3.      பந்தலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் நியமனம் செய்யப்பட வேண்டும் பிரசவங்கள் பார்ப்பதை அதிகரிக்கவேண்டும் சிறப்பு மருத்துவர்கள் நியமித்து முழுநேர சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

4.      மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கும் வகையில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பழுதடைந்த குடியிருப்புகளை உடைத்து நீக்கிவிட்டு புதிய குடியிருப்புகளை இரு மாடி கட்டிடங்களாக கட்டி தர  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

5.      கூடலூர் அரசு மருத்துவமனையை நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் டயாலிசிஸ் பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் துவக்கப்பட வேண்டும் பொதுமக்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

6.      கூடலூர் பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததினால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் எனவே மேற்படி மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துதால்.

 

7.      உப்பட்டி பகுதியில் செயல்படும் பழங்குடியினர் தொழிற் பயிற்சி மையத்தை பழங்குடியின மாணவர்கள் குறைந்த அளவே சேர்ந்து வருவதால் சுமார் 50க்கு மேற்பட்ட இடங்கள் யாரும் சேராமல் காலியாகவே உள்ளது எனவே இந்த இடங்களை நிரப்பும் வகையில் இதர பிரிவு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்வி துறையை கேட்டுக் கொள்தல்

 

8.      மின் இணைப்பு பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்ற உயர் நீதிமன்ற சுட்டிக் காட்டிய போதும் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பலரும் மின்னிணைப்பு இன்றி சிரமப்படுகின்றனர். மின் இணைப்பு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என மின்சார வாரியத்தில் தமிழக அரசையும் கேட்டுக் கொள்ளல்.

 

9.      போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை முறையான நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துதல்.

 

10.  உணவு கலப்படம் மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து தொடர் ஆய்வுகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை வலியுறுத்தல்.

 

11.  நீலகிரி  மாவட்டம் மலை மாவட்டம் என்பதனால்  அதிக எரிபொருள் தேவை உள்ளது என்பதை  கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 5 லிட்டர் வீதம்  கூடுதல் மண்ணெண்ணெய் வாங்க வேண்டும் எனவும் ரேஷன் கடைகளில் வழங்கும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களான பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் 100 சதவீத ஒதுக்கீடு வழங்கி உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளல்

 

12.  அரசு மூலம் தமிழ்நாடு உப்பு உற்பத்தி கழகம் வழங்கும் அம்மா உப்பு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  இதை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் விதமாக சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் சோ்த்து அனைவருக்கும் ஊட்ட சத்துகள் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது

 

13.  பொது வினியோக திட்டத்தில் ரேசன் கார்டுகளுக்கு  வழங்கும் வென் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்வது

 

14.  மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் கொரனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கண் சிகிச்சை முகாம்களை மீண்டும் கிராம புற மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுத்தல் எனவும்

 

15.  மக்களின் இரத்த தேவைக்கு இலவச இரத்த தான முகாம்களை ஒருங்கிணைத்து கொடுத்தல் எனவும், இரத்த கொடையாளர்களை உருவாக்க முயற்சிகள் எடுத்தல் எனவும்

 

16.  அரசு வேலை வாய்ப்பு பெறும் வகையில் இளைஞர்களுக்கு போட்டி தேர்விற்கு தொடர்ந்து பயிற்சி அளித்தல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது

 

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 

கூட்டத்தில் ஆலோசகர்கள் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

 

No comments:

Post a Comment