பந்தலூர் 2016 பிப் 15
பந்தலூர் அருகே சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.
கூடலூர் நுகா்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,
கிரின்வுட் பவுண்டேசன், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம், ஆகியன இணைந்து நடத்திய
இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரபோஸ், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு கண் மருத்துவமனை கண் மருத்துவருமான மருத்துவர் அமராவதிராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஐந்து பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
S. Sivasubramaniam President

No comments:
Post a Comment