Thursday, July 9, 2015

மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஜுலை 2015 தீர்மாணங்கள்

பெறுனர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,                                 மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர்அலுவலகம் உதகை.                     மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உதகை.

பொருள்மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஜுலை 2015 
  தீர்மாணங்கள் அனுப்புதல் தொடர்பாக

அய்யா அவர்களுக்கு வணக்கம்
எங்கள் அமைப்பின் சர்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தந்தமைக்கு நன்றியை ​தெரிவித்துக் கொள்கின்றோம்புதிதாக சில கோரிக்கைகளை முன் வைக்கின்றோம். அதற்கும் தக்க நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அமைப்பின் ​கோரிக்கையை ஏற்று பொன்னானி ஆறு தூர் வாரப்பட்டதுவேளான்மை பொறியியல் துறை சார்பில் தூர்வாரும் பணி நடைப்பெற்றதுஇதனால் அத்திக்குன்னா, நெல்லியாளம், பொன்னானி, சேலக்குன்னா உள்ளிட்ட பல்வேறு பகுதியை சந்​சேர்ந்வர்களும் பந்தலூர் பகுதியில் பெய்த கணமழை காலங்களில் ​வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கப்பட்டதுகுடியிருப்புகள் மற்றும் விவசாய பொருட்கள் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டதுபொன்னானி ஆறு தூர் வார அனுமதி அளித்தமைக்காக மாவட்ட ஆட்சியார் அவர்களுக்கும், சிறப்பான முறையில் இப்பணியினை செய்து கொடுத்தமைக்கு வேளான்பொறியியல் துறையினருக்கும் நன்றியை ​தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆதார் அட்டை எடுக்க பதிவு செய்ய விண்ணப்பம் அளிக்கப்பட்டவர்கள் பலமுறை அலைகழிக்கப்பட்டு வருகின்றனா;.  பலரது விண்ணப்பம் குப்பை போல போடப் பட்டுள்ளதுவிண்ணப்பம் உரிய முறைப்படி பதிவேற்றம் செய்யாமல் உள்ளதுஇது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நுகர்வோர் காலாண்டு கூட்டம் இதுவரை தொழிலாளர் நலத்துறை. மற்றும் துணை இயக்குனர் ஊரக நலம் பொதுசுகாதாரம், காவல்துறை ஆகியவற்றில் இதுவரை நடத்தப்படவில்லைஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூர் வனப்பகுதிகளில் உள்ள காட்டு யாணைகள் ஊருக்குள் வராமல் இருக்க அகழி அமைக்கப்பட்டதுஆனால் முறையாக அமைக்கப்படவில்லைபழைய அகழிகள் இடிந்துவிட்டனஇவற்றை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்அனைத்து பகுதிகளிலும் முறையாக அகழி அமைத்து யாணைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும்.
உதகை அரசு கலை கல்லூரியில் பந்தலூர் கூடலூர் பகுதியை ​சேர்ந்த மாணவிகள் பலரும் ​சேர்ந்துள்ளனர்இவர்கள் அரசு மாணவியா; விடுதிக்கு விண்ணப்பித்தும் இடம் கிடைக்காமல் அவதிபடும் நிலை ஏற்படுகின்றதுஎனவே கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யும்போது பந்தலூர் மற்றும் கூடலூர் மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 
கூடலூர் தேவர்சோலை மே பீல்டு பகுதியில் செயல்படும் தனியார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்கள் மீது வன்கொடுமை நடப்பதாக புகார்கள் பெறப்படுகின்றதுஇது குறித்து ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பந்தலூர் பகுதியில் ஒற்றை யாணைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றனஇவை மக்களை தாக்கும் நிலையும் ஏற்படுகின்றதுஇந்த யாணையை வளர்ப்பு யாணையாக பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லியாளம் நகராட்சியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட பொது குடிநீர் கிணறு  களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதுஇதனால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனா;.  எனவே மின் இணைப்பு வழங்க உள்ள தடைகளை நீக்கி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு துறையினர் இதுவரை பந்தலூர் வட்டார பகுதிகயில் உணவு ஆய்வு நடத்தவில்லை விரைவில் ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும்.

இலவச கண் சிகிச்சை முகாம்களை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து கிராமபுற மக்கள் பயன்படும் வகையில் நடத்தி வருகின்றோம்இம்முகாம் குறித்து மக்களிடம் தகவல் ​​தெரிவிக்க வாகண பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளிப்பதற்கு 15 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் வாகன உரிமையாளர் வகனம் குறித்த தகவல்கள் தரவேண்டும் எனவும் கட்டாய படுத்துகின்றனா;.  வணிக நோக்கில் செல்வோருக்கு போல் தகவல்கள் கேட்பதால் முகாம் ஒருங்கிணைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றனமாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமிற்கு மாதந்தோறும் அனுமதி பெற சொல்வதை தவிர்க்க வேண்டும்.

உப்பட்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமாண பணி நிறைவு அடையாமல் உள்ளதுவிரைவில் கட்டுமாண பணி நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல கர்ப்பினி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவி பலருக்கு கிடைக்கவில்லைகடந்த அக்டோபார் நவம்பர் மாதத்தில் உதகை சேட் மருத்துவமனையில் பிரசவம் நடை பெற்றவர்களுக்கும் இதுவரை பணம் கிடைக்கவில்லை என ​தெரிவிக்கப்படுகின்றதுகுறிப்பாக தங்காடு வட்டார சுகாதார நிலையத்தில் கர்ப்பினியாக பதிவு செய்த வர்களுக்கு கிடைக்கவில்லைஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல சுகாதார செவிலியர்கள் மாதாந்திர அறிக்கை இணையத்தில் பதிவு செய்வதற்காக பிரவுசிங் சென்டர்களில் முகாமிடும் நிலை உள்ளதுஇதனால் அவர்களின் சுகாதார பணிகள் பாதிக்கின்றதுகர்ப்பினி பெண்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதில்லைஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுக்கப்படும் ஸ்கேன் அறிக்கை தரப்படுவதில்லை. மேலும் ஸ்கேன் பார்த்து குழந்தையின் நிலை குறித்தும் தாய்மார்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தகவல் ​தெரிவிப்பதில்லைஇதனால் கடைசி நேரத்தில் கர்ப்பினிகள் பிரசவத்திற்கு அலைகழிக்கும் நிலை உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு பெற தடையில்லா சான்று, வாரிசு சான்று, உள்ளிட்ட சான்றுகள் பெற அலைகழிக்கப்படும் நிலை உள்ளதுபோதிய பணியாளர்கள் இல்லை என்பதாலே இந்நிலை எனதெரிவிக்கப்படுகின்றது. உரிய பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

பந்தலூர் சேரங்கோடு ஊராட்சியில் கோரன்சால் பகுதியில் ஊராட்சி குடிநீர் கிணறு அமைக்கப்பட்டுள்ளதன் அருகில் தனிநபரின் கழிவு தேக்க தொட்டி அமைக்கப் பட்டுள்ளதுஇதனால் குடிநீர் மாசுப்படுகின்றதுபல இடங்களில் மழை நீர் கால்வாயில் மனித கழிவுகள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுஇதனால் பொதுசுகாதாரம் பாதிக்கப்படுகின்றதுஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லைஇது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதகை அரசு சேட் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் குழந்தைகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலையே உள்ளதுபார்வையாளர்கள் அமர்ந்து காத்திருக்க உதவியாக இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை அமைக்க  வேண்டும்.

பல நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை முறையாக மக்களுக்கு கிடைப்பதில்லை என பரவலாக புகாh;கள் பெறப்படுகின்றது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் சிரம்மம் ஏற்படுவதாக தகவல் ​தெரிவிக்கின்றனர்.  108 சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலூர் பகுதியில் செயல்படும் இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரம் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்இதுகுறித்து கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்திய முதுநிலை மேலாளர் கூறியபடி புதிய ஏடிஎம் இயந்திரம் இன்னும் வரவில்லை.   உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலூர் பகுதியில் சௌத் இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுஆனால் அதனை திறக்க காவல் துறை சார்பில் அனுமதி வழங்கவில்லை என தகவல் ​தெரிவிக்கின்றனர்இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி கடன் பெற மாணவர்கள் அலைகழிப்பதை தடுக்க கடந்த வருடம் போல் கல்வி கடன் மேளா நடத்த வேண்டும்இதில் கூடலூர் கோத்தகிரி பகுதியிலும் கூடுதலாக நடத்தினால் மக்களுக்கு சிரமம் குறைவாக இருக்கும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குந்தா தேவர்சோலை பகுதியில் உள்ளோர் அதிகம் பிஎஸ்என்எல் செல்போன்களையே பயன்படுத்தி வருலுகின்றனர்ஆனால் இந்த பகுதியில் பிஎஸ்என் எல் டவர் கிடைப்பதில்லைஎனவே புதிய பிஎஸ்என்எல் டவர் அமைக்க வேண்டும்.

குந்தா தேவர்சோலை பகுதியில் குடிநீர் வழங்க பல லட்ச ரூபாய் செலவு செய்தும் முறையான குடிநீர் வழங்கப்படாமல் மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை உள்ளது. நீர்வளம் குறித்து உரிய ஆய்வு செய்யாமல் பெயரளவிற்கு கால்வாய் நீரை பயன்படுத்தி குடிநீருக்கான டேங்க் மற்றும் ஆல்துளை கிணறு ஆகியன அமைக்கப்பட்டுள்ளதாக ஊர் பொதுமக்கள் புகார் ​தெரிவித்துள்ளனர்இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தப்பட வேண்டும் இப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

தொழிலாளர் நல வாரியம் மூலம் உறுப்பினர்சேர்கைக்கு பதிவிற்கான முகாம் பந்தலூரில் நடைப்பெற்றதுஇதில் கிராம நிர்வாக அலுவலர் வராததினால் உறுப்பினர் ​சேர்க்கை செய்வதற்கு கையெழுத்து பெற மீண்டும் அலைகழிக்கப்படும் நிலை ஏற்படுகின்றதுஇந்நிலை மாற நலவாரிய உறுப்பினர் ​சேர்க்கை முகாம் நடைபெறும் போது கிராம நிர்வாக அலுவலரும் இந்த முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும்அதிக கிராம பகுதிகளில் முகாம் நடத்த வேண்டும்.  முன்கூட்டியே விளம்பரம் செய்ய வேண்டும்.

பந்தலூர் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தற்போது தமிழாசிரியர் இல்லாத நிலை உள்ளதுஇதனால் புதிதாக மாணவர்களை ​சேர்க்கவும் பொதுமக்கள் தயங்குகின்றனர். இப்பள்ளிக்கு தமிழாசிரியர் நியமிக்க வேண்டும்.

மேலும் இங்கு செயல்பட்டு வந்த அங்கன்வாடி மூடப்பட்டுள்ளதுஇதனால் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதுஇதனால் வரும் காலங்களில் இப்பள்ளிக்கு புதிய மாணவர்கள் சேரும் வாய்ப்பு மிககுறையும் நிலை ஏற்பட்டுள்ளதுஏற்கனவே மாவட்ட வருவாய் அலுவலரால் இந்த அங்கன்வாடி திறந்து செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டதுஇப்பகுதியில்; தற்போது 8 ஆதிவாசி குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா;.  எனவே மீண்டும் இங்கு அங்கன்வாடி மையத்தினை செயல்படுத்த வேண்டும்.

பொன்னூர் பகுதியில் செயல்படும் அங்கன் வாடி மையம் உரிய பாதுகாப்பு இல்லாமல் ஒழுகுகின்றதுஇதனால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதுஇது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா மூச்சுக்குன்னு பகுதியில் உரிய சாலை வசதி இல்லாதினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

அரசு துறை அதிகாரிகள் தனியார் அங்கீகாரம் இல்லாத அமைப்புகள் அங்கீகாரம் இல்லாத கல்வி நிலையங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும்குறிப்பாக வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் அரசு துறையினர் கலந்து கொள்வதை புகைப்படங்களை, விழாவினை நோட்டீசாக அச்சடித்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

கந்துவட்டி மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றதுமைக்ரோ பைணான்ஸ் என்ற பெயரில் மகளீர் குழுக்களிடம் கடன் வழங்கி அதிகபட்ச வட்டி வசூலித்து வருகின்றனமகளீர் திட்டம் அனுமதி பெற்றதாகவும் சிலர் ஏமாற்றி வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு வழங்கும் பசுமை வீடுகள் அதிக வசதி படைத்த பலருக்கும் வழங்கப்பட்டுள்ளதுஉண்மையான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகின்றதுஅதுபோல கழிப்பிடம் அமைக்க அரசு வழங்கும் நிதியும் உண்மையான பயணாளிகளுக்கு விண்ணப்பித்தும் இதுவரை நிதிஉதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளதுஆனால் தகுதியில்லாத பலருக்கு கழிப்பிடம் கட்ட நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளதுஇது குறித்து உரிய ஆய்வு மேற்க்கொண்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்தகுதியான நபர்களுக்கு விரைவில் நிதி உதவி வழங்க வேண்டும்.

பந்தலூரில் உள்ள பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லைமழை காலங்களில் நனைந்து கொண்டே பேருந்தில் ஏறிச்செல்லும் நிலை உள்ளதுமேற்கூரை அமைக்க வேண்டும்

பந்தலூர் நகரை மையமாக கொண்டு கிராம புறங்களுக்கு மினி பேருந்து இயக்க உரிய அனுமதி வழங்க வேண்டும்பல்வேறு கிராம பகுதியை சார்ந்த மக்கள் போக்குவரத்து வசதி இன்றி தனியார் ஜீப் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்லும் நிலையே உள்ளது. எனவே, மினி பேருந்து இயக்க உரிய அனுமதி வழங்க வேண்டும்.

எரிவாயு சிலிண்டர்கள் புதிதாக இணைப்பு பெற விண்ணப்பித்தால் கண்டிப்பாக அடுப்பு வாங்க வேண்டும் என கட்டாயபடுத்துகின்றனர்இல்லாவிட்டால் இணைப்பு வழங்க இயலாது என மறுப்பு ​தெரிவிக்கின்றனர்கூடலூர் கோல்டன் கேஸ் நிறுவனம் மீது புகார் உள்ளதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித உரிமைகள் என்ற பெயரில் எந்த அமைப்பும் செயல்பட கூடாது என அறிவிக்கப் பட்டது ஆனால் இன்று வரை சிலர் மனித உரிமைகள் என்ற பெயரை பயன்படுத்தி ஏமாற்றி வருகின்றனர்இவர்கள் மீது எடுத்த நடவடிக்கை விவரம்.

கூடலூர் உதகை தேசிய நெடுஞ்சாலையோரங்களில் வளர்ந்துள்ள செடிகள் போக்கு வரத்திற்கு இடையுறாக உள்ளது. பைக்காரா பாலம். டீ ஆர் பஜார் பாலம் மற்றும் சில இடங்களில் உள்ள பாலங்கள் குறுகியதாகவும் பழமையானதாகவும் உள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் சத்துணவு வழங்கும் இடம் சேரும் சகதியுமாக உள்ளதுமேலும் மாணவர்கள் கொட்டும் மழையில் திறந்த வெளியில் உணவு உண்னும் நிலை உள்ளது.  இப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்மாணவர்கள் நின்று கொண்டு உணவு அறுந்த உதவும் வகையில் மேற்கூரை அமைத்து தர வேண்டும்.



இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.
உறுப்பினர், மின் நுகர்வோர் குறை தீர் மன்றம் நீலகிரி (TNEB)

No comments:

Post a Comment