Monday, June 29, 2015

கொளப்பள்ளி பகுதியில் இளையோர் பாராளுமன்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கொளப்பள்ளி பகுதியில் இளையோர் பாராளுமன்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்திய அரசு நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்டம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்றம் ஆகியன இணைந்து இளையோர் பாராளுமன்றம் குறித்த விழிப்புணர்வு நிகழச்சியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு ​​மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்ற தலைவர் ஜம்சீர் தலைமை தாங்கினார். இளையோர் பாராளுமன்றம் குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், நீலகிரி மின் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினருமான சு.சிவசுப்பிர மணியம் பேசும்போது அரசின் திட்டங்கள் குறித்து இளைஞர்கள் அறிந்து கொண்டு அவற்றின் பயன்கள் கிராம மக்களுக்கு கிடைக்கவும். கிராமங்களின் தேவையை அரசிடம் சம்பந்தபட்ட துறைகளில் ​​தெரிவித்து அதன் மூலம் கிராம மேம்பாட்டிற்கு உதவும் இளைஞர் மன்றத்தினர்​ செயல்பட முன்வர வேண்டும் என்றார்.
கப்பாலா ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் பேசும்போது அரசு பல்வேறு துறைகள் பல்வேறு கட்டங்களில் செயல்பட்டு வருகின்றது. அவற்​றை அறிந்து ​​கெள்ள ​வேண்டும். குப்பைகளை குறைக்கும் போது அதனை அகற்ற உள்ளாட்சிகள் செய்யும் செலவு குறைகின்றது.  இதனால் மற்ற திட்டங்களுக்கும் அரசு செலவிட்டு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். சிலர் பெயரளவிற்கு அமைப்பு தெடங்கி அதனை பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றுதல், தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்துதல், அரசு துறையினரை மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சமூகத்தில் அமைப்புகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.  இது போன்று இளைஞர் சங்கங்கள் செயல்பட கூடாது என்றார்.
கொளப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சத்தியமூர்த்தி பேசும்போது இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.  அப்போது தான் வெற்றி பெற முடியும்.  இளைஞர்களிடையே தாழ்வு மணபான்மை இருக்ககூடாது.  போட்டி ​தேர்வுகளில் பங்கேற்பதால் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
கொளப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் கிருஸ்ணமூர்த்தி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, பேக்டோ நிறுவன இயக்குனர் ராதாகிருஸ்ணன், அமைப்பு சாரா தொழிலாளர் வாரிய உறுப்பினர் கதிரேசன் சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ​மெர்குரிகாய்ஸ் இளைஞர் மன்றம், விவேகானந்தா இளைஞர் மன்றம்,  பாரதி இளைஞர் மன்றம் 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  முன்னதாக ​மெர்குரி காய்ஸ் இளையோர் மன்ற நிர்வாகி உதயராசு வரவேற்றார்.  முடிவில் நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர் ஆண்டம்மாள் நன்றி கூறினார்.













No comments:

Post a Comment