அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில்
இயற்கை பாதுகாப்பு தினம் கடைபிடிக்க பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், தேசிய பசுமை படை ஆகியன சார்பில் அத்திக்குன்னா அரசு உயர்நிலை பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கபட்டது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதர சுந்தரம் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் இயற்கை பாதுகாப்பின் அவசியங்கள் குறித்து பேசும்போது நமக்கு உணவு, உடை, நீர், காற்று என அனைத்தும் இயற்கையே தருகிறது. நமது செயல்களால் இயற்கை பதிப்புகள் அதிகரிக்கிறது. இயற்கையில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள் நமக்கே பாதிப்பாக அமைகிறது. நமது தேவைகளை குறைத்து கொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்வதால் இயற்கை அழிவை தடுக்க முடியும். இயற்கைக்கு பாதிப்பு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது. நமது சந்ததியினர் நலமாக வாழ நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துகொன்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் பிரதீப் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ரகுபதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment