Sunday, July 27, 2014

சேரம்பாடி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்


சேரம்பாடி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பந்தலூர் கூடலூர் நுகர்வோர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தங்கினார். சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன், சேரம்பாடி கல்வி வளர்ச்சி குழு செயலாளர் யோகராஜ், நிர்வாகி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மகாவிஷ்ணு முகாமினை துவக்கி வைத்தார்.  ஊட்டி அரசு கண் மருத்துவர்  அகல்யா  தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் 100க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர். 10 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டு   கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் கண் பரிசோதகர் கலாவதி, ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்க்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ், சந்திரன், காதர்  உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.  முன்னதாக பந்தலூர் கூடலூர் வட்டார நுகர்வோர் சங்க  தலைவர் விஜயசிங்கம் வரவேற்றார்.  முடிவில் நுகர்வோர் மைய நிர்வாகி முஸ்தபா நன்றி கூறினார்.









No comments:

Post a Comment