ஜீப் கட்டண உயர்வு எதிரொலி
கூடுதல் பேருந்துகளை முறைப்படுத்தி இயக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கூடலூர், அக்.1:
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஜீப் கட்டணம் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் வாகனங்களில் பயணிப்போர், தொழிலாளர்கள், ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பேருந்து கட்டணம் உயர்வதற்கு முன்னதாகவே ஜீப்களில் பல முறை கட்ட ணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பேருந்து கட்டணம் உயர்ந்ததை அடுத்து அதன் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை கட்டணம் உயர்த்தப்பட் டது. டீசல் விலை உயர்வு காரணம் காட்டி 2 முறை ஜீப் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டண உயர்வு காரணமாக பாதிக்கப்படும் பொதுமக் களை பாதுகாக்கும் வகை யில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இங்குள்ள வழி தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழி தடத்தி லும், பேருந்து கட்டணத்தை விட ரூ.7 முதல் ரூ.8 வரை ஜீப் கட்டணம் அதிகமாக உள்ளது. பேருந்துகள் சில சமயங்களில் உரிய நேரத்தில் இயக்கப்படாததாலும், ஒரு நேரத்தில் ஒரே வழி தடத்தில் 2, 3 பேருந்துகள் அடுத்தடுத்து செல்வதாலும், அடுத்து வரும் பேருந்துக்காக மணி கணக்கில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் ஜீப்களை நாட வேண்டியுள்ளது.
இது குறித்து கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய நிர்வாகி சிவசுப்ரமணியம் கூறுகையில், “கூடலூர், பந்தலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக வே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கான நடவடிக்கை தாமதமாகி வருகிறது. உள்ளூர் பேருந்துகளை போதிய அளவில் இயக்க வேண்டும். சரியான நேரத்தில் முறைப்படுத்தி பேருந்துகளை வழிதடத்தில் இயக்கும் வகையில் நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் ஒரே வழி தடத்தில் அடுத்தடுத்து செல்லும் பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைத்து சீரான இடைவெளியில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
கூடலூரில் இருந்து பந்தலூருக்கு வரும் வழியில் நிறுத்தங்கள் அதிகளவில் உள்ளது.
காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து கழகம் எடுக்க வேண்டும்,� என்றார்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
No comments:
Post a Comment