பெறுனர்
பொது மேலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்உதகை மண்டலம்.
உதகை.
பொருள் : பொன்னானி கோவை பேருந்து இயக்க கேட்டல் சார்பாக.
அய்யா
அவர்களுக்கு வணக்கம்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர்
அருகே பொன்னானி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியவசிய தேவைக்கு வெளியில் செல்ல அரசு
பேருந்துகள் போதிய அளவு இல்லாததினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது உதகை கிளை மூலம் பொன்னானியில்
காலை 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் பேருந்தும் பாட்டவயல் பந்தலூர் வழியாக செல்லும்
2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இவை
3 மணி நேரத்திற்க ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகின்றது.
பொன்னானி அருகில் அம்மன்காவு,
குன்றில்கடவு, வாளவயல், பாண்டிசேரி, நெல்லியாளம், நெல்லியாளம் டேன்டீ சரகம் 2 மற்றும்
1, புஞ்சவயல். ஒலிமடா, உப்பட்டி. பூதானகுன்னு, சேலக்குன்னா, ஏலமன்னா, அத்திக்குன்னா, பெருங்கரை, தொண்டியாளம். மேங்கோரெஞ்
உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சார்ந்தவர்கள் இந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்தினை
நம்பி உள்ளனர்.
இப்பகுதியில் இருந்து தற்போது
கோவைக்கு காலை 7 மணிக்கு செல்லும் பேருந்தை தவிர வேறு பேருந்துகள் இல்லை. இதனால் பொதுமக்கள் வெளி மாவட்டத்திற்கு சென்று வருவதில்
சிரம்மப்படுகின்றனர்.
எனவே காலை 8.30 மணி யளவில்
பொன்னானியில் இருந்து கோவை அல்லது ஈரோடு சென்று வரும் வகையில் பேருந்து இயக்க நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.
காலையில் கூடலூரில் இருந்து
6.45 அல்லது 7 மணிக்கு புறப்பட்டு பந்தலூர் வழியாக பொன்னானிக்கு வந்து சேர 8.15 ஆகும்
8,30 மணிக்கு புறப்பட்டால் காலை 9.30 முதல் 9,45க்கு கூடலூர் சென்றுவிடலாம்.
எனவே பொன்னானியில் இருந்து கோவை செல்லும் வகையில் புதிய பேருந்து
இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
சி. காளிமுத்து சு. சிவசுப்பிரமணியம்
தலைவர் பொது
செயலாளர்