Friday, July 20, 2012

தரமற்றப் பொருட்களுக்கு செலவிடுவதால்.................


ஊட்டி:"தேவையற்ற மற்றும் தரமற்றப் பொருட்களுக்கு செலவிடுவதால், பணம் விரயமாவதுடன், நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஊட்டி அருகே காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், என்.எஸ்.எஸ்., சார்பில், தரக் கட்டுப்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் பேசுகையில், ""பணம் சம்பாதிக்கும் வழிகள் குறித்து சிந்திப்பதை விட, அதை செலவு செய்யும் போது அதிகமாக சிந்திக்க வேண்டும்; சம்பாதித்த பணத்தை முறையாக செலவு செய்ய வேண்டும்.

தேவையற்ற மற்றும் தரமற்றப் பொருட்களுக்கு செலவிடுவதால், பணம் விரயமாவதுடன், நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தேவையற்ற உணவுகளை புறக்கணிக்க பழக வேண்டும். சுவைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் உண்ணும் பண்டங்கள் பல, நோயை உருவாக்குகின்றன; இவற்றை தவிர்ப்பதுடன், பயன்படுத்தும் நபர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.சென்னை மக்கள் மைய திட்ட அலுவலர் கோதண்டராமன், சிறப்பு அழைப்பாளராக பேசுகையில், ""தரமற்றப் பொருட்களின் விற்பனை இன்று அதிகரித்துள்ளது. பிரபலமான நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை முறையாக ஆய்வு செய்து வாங்க வேண்டும். காய்கறிகள் உட்பட பல பொருட்களின் விளைச்சலை அதிகரிக்க, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. நுகர்வோர் முறையாக கவனித்து வாங்க வேண்டும்,'' என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""தரமான வாழ்வை, தரமான பொருட்களால் தான் பெற முடியும். தரமற்றப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தாலும், விரைவில் பழுதடைந்து அதிகபட்ச செலவுகளையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும். தரமான பொருட்களுக்கு, இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைவனம், ஐ.எஸ்.ஐ., எப்.பி.ஓ., ஹால்மார்க் போன்ற பலதரபட்ட முத்திரைகளை வழங்குகிறது. இந்த தர முத்திரை உள்ள பொருட்களை வாங்கும் போது, உத்திரவாதமும் கிடைக்கிறது. முத்திரை பெற்ற பொருட்கள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாமல் இருந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்கு பயன் தராவிட்டாலோ, இந்திய தர அமைவனத்தில் முறையாக புகார் செய்தால், போலி பொருட்கள் தயாரித்த நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""பால் போன்ற உணவுகள், குறுகிய காலத்தில் கெட்டுப் போகக் கூடியது. இவை போன்ற பொருட்கள், தற்போது மூன்று நாட்களுக்கு மேல் வைத்து விற்பனை செய்யப்படுகிறது; இதில் ரசாயனக் கலவை அதிகரித்துள்ளது. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை உட்கொள்வதால், ஜீரணக் கோளாறு ஏற்படுகிறது,'' என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் வெளியிடப்பட்ட கையேட்டை, 
பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட, மக்கள் மைய திட்ட அலுவலர் கோதண்டராமன் பெற்றுக் கொண்டார். 

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் என்.எஸ்.எஸ்., அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். 
ஊட்டி மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, தேவர்சோலை மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் பூபதி, வார்டு கவுன்சிலர் அருணா சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

CCC INAGURATION

Wednesday, July 18, 2012

kaiunni eye camp


kaiuni eye camp 8.7.12


பந்தலூர் :  பந்தலூர் கையுன்னி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,  கையுன்னி  சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு அறக்கட்டளை  ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், ஆகியன  சார்பில்,  கையுன்னி அரசு உயர் நிலை பள்ளியில்   இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சு. சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
 சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கூடலூர்  ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வர்கீஸ் ஆகியோர் முகாமினை துவக்கி வைக்க நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான  அமராவதி ராஜன்   தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து சிகிச்சைகள் ஆலோசனை வழங்கினர்
முகாமில்  கையுன்னி பகுதிகளை சேர்ந்த  120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  
நிகழ்ச்சியில் , மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை களபணியளர்கள் முத்துராஜ் ஸ்ரீதர்   கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் கையுன்னி  சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள்  உட்பட பலர் பங்கேற்றனர்
கையுன்னி  சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் முகம்மது வரவேற்றார்   
கையுன்னி  சிறு தேயிலை விவசாயிகள் சங்க செயலாளர் ஆண்டனி  நன்றி கூறினார்.
















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.


Pandalur st Francine xevior school ccc inauguration programme

 

பந்தலூர், : பந்தலூர் புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. 

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தலைமை வகித்தார். 

கூட லூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய  தலைவர் சிவசுப்பிரமணியம், 
சேரன் அறக்கட்டளை நிர்வாகி தங்கராஜ் 
ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளி நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். 

சிறப்பு  அழைப்பாளராக  கலந்து  கொண்ட  குடிமக்கள் நுகர்வோர் மன்ற மண்டல ஒருங்கிணைப்பா ளர் சொக்கலிங்கம் பேசு கையில், ‘1986ம் ஆண்டு நுகர்வோர்சட்டத்தின் படி தரமான பொருள்களை தான் விற்க வேண்டும். ஆனால் தரமான பொருட்கள் நுகர்வோர்களுக்கு கிடைப்பதில்லை. பொரு ளைப் பற்றிய அறிவு, கவனிப்பு, செயல்பாடு, அது குறித்து புகார் தெரிவித்தல் ஆகிய விழிப்புணர்வு வாடிக்கையாளர்களுக்கு இல்லாததே தரமான பொருள் கிடைப்பதில்லை. 
இதனால் நுகர்வோர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். 2005 முதல் பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஏற்படுத்தி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு தருகிறோம். இதில் 50 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல விளம்பரங்களில் தவறான தகவல்கள் வருகின்றன. அதனால் பொருளின் உண்மைத் தன்மை அறிந்து பொருட்களை வாங்க வேண்டும்‘ என்றார். 


இதில் நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் நவுசாத், தனிஷ்லாஸ், சில்வர் ஸ்டார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




























கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்