Wednesday, April 10, 2013

பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க மாவட்டம் முழுவதும் சோதனை


பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க
மாவட்டம் முழுவதும் சோதனை
ஊட்டி, ஏப். 10:
40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களையும் வணிகர்கள் பயன்படுத்தாமல் இருக்க அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் தமிழகத்தில் முதன்முறையாக கடந்த 1999ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. குறிப்பாக பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தட்டுக்கள், டம்ளர்கள் ஆகியன பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புக்கள் கேரி பேக்குகள் விற்பனையை முழுமையாக தடை செய்ய தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் சிலர் இந்த கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள், பயன்படுத்தும் வணிகர்களின் கடைகளில் சோதனை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் சிலர் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சிலர், 20 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த துவக்கினர். இதனால் தற்போது 40 மைக்ரானுக்கும் குறைவான அனைத்து பிளாஸ்டிக் கவர்களும் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தற்போது பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எந்தனை மைக்ரான் என கண்டறியும் மெஷின்களும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த வாரத்தில் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசிய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், �நீலகிரி மாவட்டத்தில் முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சென்று முறையாக ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கடந்த 1999ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், 2000ம் ஆண்டு ஊட்டி நகராட்சி நிர்வாகம் 20 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்த தடையுத்தரவு செயல்படுத்தப்பட்டது.
தற்போது சிலர் 20 மைக்ரானுக்கு அதிகமாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே இதையும் தடை செய்ய தற்போது 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுக்கள் மற்றும் கேரி பேக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு துணை ஆட்சியர் மற்றும் தாசில்தார் அளவில் உள்ள அதிகாரிகளை கொண்ட குழு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. மேலும தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றன. 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தால் அவைகளை பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்� என்றார்.
கலெக்டர் தகவல்

ஊட்டி நகராட்சி கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வசூல்


ஊட்டி நகராட்சி கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வசூல்
ஊட்டி, ஏப். 8:
ஊட்டி நகரில் உள்ள நகராட்சி கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட பல மடங்கு அதிக கட்டணங் கள் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சிறுநீர் கழிக்க ரூ.4 வசூலிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகரில் சேரிங்கிராஸ், பஸ் நிலையம், ஏ.டி.சி., உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் நக ராட்சி கழிப்பிடங்கள் உள்ளன. இந்த கழிப்பிடங்கள் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளது.
இந்த கட்டண கழிப்பிடங்களில் சமீப காலமாக நகராட்சி சார்பில் நிர்ணயித்த கட்டணங்களை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து அமைச் சர் ஆய்வு செய்து கட்டணம் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். சில நாட்கள் கடைபிடிக்கப்பட்ட இந்த உத்தரவு கால போக்கில் காற்றில் பறந்தது. இந்நிலையில் தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட பல மடங்கு கட்டணங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக ஊட்டி ஏ.டி.சி., மத்திய பஸ் நிலையம், மார்கெட் வளா கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ரூ.4 வரை வசூலிக்கின்றனர். கழிப்பிடங்களை அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதால் ஒருசிலர் கேட்கும் கட்டணத்தை கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். குறிப்பாக ஒருசில பொதுமக்களோ, சுற்றுலா பயணிகளோ அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே கோடை சீசன் துவங்குவதற்கு முன்பு இது போன்று நகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிக கட்டணங்கள் வசூலிக்கிறார்களாக என நகராட்சி நிர்வாகம் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,
ஊட்டி நகரில் பெரும்பாலான நகராட்சி கட்டண கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறுநீர் கழிக்க ரூ.1 தான் கட்டணமாக நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.4 வரை வசூலிக்கின்றனர். ஆனால் கழிப்பிடங்கள் சுகாதாரமாக இருப்பதில்லை. அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.
பொதுமக்கள் கோரிக்கை
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பள்ளி, கல்லூரி நுகர்வோர் மன்றத்துக்கு நிதி வழங்க கோரிக்கை


பள்ளி, கல்லூரி நுகர்வோர் மன்றத்துக்கு நிதி வழங்க கோரிக்கை
ஊட்டி, ஏப். 8:
போதுமான நிதி வழங்கப்படாத நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இயங்கும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் செயல்படாமல் போகும் அவல நிலை நீடிப்பதாகவும், உடனடியாக நிதி ஒதுக்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் பல்வேறு அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டு நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடையே நுகர்வோர் கல்வி அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர இன்னும் பல பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கி சிறப்புடன் செயல்படுத்த விரும்புகின்றன.ஆனால், பல பள்ளிகளில் தங்களின் சொந்த முயற்சியினால் கடந்த 5 ஆண்டுகளாக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்கியும் அவர்களுக்கு இதுவரை நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பள்ளிகளின் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடுகள் கேள்வி குறியாக உள்ளது.
நுகர்வோர் கல்வி மக்களிடையே அதிகரிக்க பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பெருமளவு உதவியுள்ளது. இது தொடர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். தற்போது இம்மன்றங்களில் உள்ள மாணவர்களுக்கு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் கூட வழங்க முடியாத நிலையில் சில பள்ளிகள் உள்ளன. இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பெயரளவு மட்டுமே உள்ளது. பள்ளிகளில் செயல்படும் இதர சார்பு அமைப்புக்களான என்எஸ்எஸ்., என்சிசி., தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சுலுவை சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு உரிய காலத்திற்குள் நிதி வழங்கப்படுகிறது. இதனால் இவைகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன. ஆனால் நுகர்வோர் மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி கடந்த 3 ஆண்டுகளாக வந்து சேரவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுமக்களிடையே போய் சேருவது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. தொடர்ந்து நிதி வழங்கப்படாதபட்சத்தில் அடிப்படை செயல்பாடுகள் கூட இல்லாமல் நுகர்வோர் மன்றங்கள் முடங்கிவிடும். எனவே இதுநாள் வரை சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு அரசு உடனடியாக நிதி வழங்கி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்


சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்
ஊட்டி, ஏப். 8:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நீலகிரி கோட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் (வணிகம்) சண்முக வேலாயுதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகர்வோர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,
“விழா கால சிறப்பு பஸ்கள் இயக்கும் போது உள்ளூர் மக்கள் பாதிக்காத வகையில் இயக்க வேண்டும். பல பஸ்களில் மேற்கூரை உடைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும். பொன்னானி & கூடலூர் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். பஸ்களில் பெயர் பலகைகளை பொதுமக்களுக்கு அறியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
ஊட்டி ஏ.டி.சி., பஸ் நிலையத்தில் பஸ்களின் கால அட்டவணை வைக்கப்பட வேண்டும். கைகாட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் காலை முதல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் & பந்தலூர் இடையே டவுன் பஸ் சேவை துவக்க வேண்டும். கூடலூர் கிளையில் காலியாக உள்ள பணிகளுக்கு ஒட்டுனர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே ஒட்டுனர் நடத்துனர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்” என்றார்.
போக்குவரத்து கழக பொது மேலாளர் (வணிகம்) சண்முக வேலாயுதம் பேசியதாவது:
நுகர்வோர் அமைப்புகளின் புகார்கள் ஆலோசனைகள் போக்குவரத்து கழக சேவையில் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறைகள் சரி செய்யப்படுகிறது. ஓட்டுனர், நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக பஸ்கள் இயக்கத்தில் குறைபாடு நிலவியது. ஆனால் பெரும்பாலான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஏ.டி.சி.,யில் கால அட்ட வணை வைக்கப்படும். பஸ்களில் உள்ள மற்ற குறைபாடுகள் சரி செய்யப்படும். ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பயணிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொண்டால் போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் வருவாயும், நற்பெயரும் கிடைக்கும். பயணிகள் சில்லரை கொண்டு வருவது அவசியம் என்பதை உணர வேண்டும். சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்
.இவ்வாறு சண்முகவேலாயுதம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலாளர் பாலராமகிருஷ்ணன், உதவி மேலாளர் கணேசன், கிளை மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, March 9, 2013

உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்



உதகை அருகே கத்தாடிமட்டம் அரசு மேல் நிலை பள்ளியில்  உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் நாட்டு நலப் பணி திட்டம் ஆகியன இணைந்து      சிறப்பு நுகர்வோர்  விழிப்புணர்வு முகாமினை நடத்தின.  நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சாரதாமணி தலைமை தங்கினார் 
நாட்டு  நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா முன்னிலை வகித்தார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 
"நுகர்வோர்கள் இன்று பல்வேறு நிலைகளில் ஏமாற்ற படுகின்றனர் இதற்க்கு கரணம் நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது தான். நுகர்வோர் அனைவருக்குமே பல்வேறு உரிமைகளும், கடமைகளும் உள்ளது. நுகர்வோரின் கல்விக்கான உரிமையை செய்து தருவது அரசின் கடமையாகும். நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பள்ளிகளை துவக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது ஒரு தலை முறையினருக்கே விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக அர்த்தம்.

நுகர்வோருக்கு உரிமை இருப்பதைபோல தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் கடமையும் உள்ளது. பொருட்களை, சேவையை பெறும்போது அவைகளை ஆராய்ந்து பார்ப்பது ஒவ்வொரு நுகர்வோரின் கடமையாகும். வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி பொருட்கள் வாங்குவது தவறு.  உரிமையும், கடமையும் சரி சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவு பொருட்கள் தரமானவைகளா? கலப்படம் அற்றதா? என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். பாஸ்ட் பூட் எனப்படும் நுடுல்ஸ், லேஸ், போன்ற உணவு வகைகள் உடலுக்கு தெங்கு விளைவிக்க கூடியவை  

கலர் ஏற்றப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் இயற்கை உணவுகளை உண்டதால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். இன்று நமது சராசரி வயது 63 ஆக உள்ளது. இது மட்டுமின்றி சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே தரமற்ற பொருட்களை  வாங்குவதை தவிர்த்து தர முத்திரைகள் பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும் என்றார் 

முதுகலை ஆசிரியர் அர்சுனன், மாணவி தீபிகா ஆகியோர் நுகர்வோர் குறித்து பேசினார்கள்.  

ஆசிரியர் யோகநாத மூர்த்தி, இராமச்சந்திரன், கணேஷன் மெர்சி  கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகி ஜெயபிரகாஷ்  மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் 400க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.


முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவ தலைவர் ரியாஸ் அகமது வரவேற்று பேசினர் 

முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.






நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலர் ஜெயலச்ச்மி பொருளார் நிஷா மற்றும்  நிர்வாகிகள் செய்து இருந்தனர்.   

Wednesday, January 30, 2013

2012 annual report








 







காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


பந்தலூர், : பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை 
முன்னிட்டு காந்தி உருவபடத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. 

மது ஒழிப்பு குறித்து பொது மக்களுக்கு சேவை மையத்தினர் துண்டுபிரசுரங்களை வினியோகித்தனர். 

 இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

 மகாத்மா காந்தி பொது சேவை மையம் அமைப்பாளர் நவுசாத், பந்தலூர்- கூடலூர் நுகர்வோர் சங்க தலைவர் விஜயசிங்கம், தானிஸ்லாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்

alt

இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்

இயற்கை மற்றும் விலங்குகள்

  • ஊட்டி :ஊட்டி மரவியல் பூங்காவில் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், உலக சதுப்பு நில பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊட்டி சி.எஸ்.ஐ., ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ்.ஐ., மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்று இயற்கை காப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா பேசுகையில், ""உலகம் முழுவதும் பிப்., 2ம் தேதி உலக சதுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

  • தற்போதைய சூழலில் பல்வேறு சதுப்பு நிலங்கள் நிலை மாற்றப்பட்டுள்ளன. இவைகளினால் காற்று, நீர், ஒளி மாசு ஏற்பட்டு பல நிலைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையும், இயற்கை வாழ் நீர் வாழ்வினங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களும் பெரிதும் பாதிக்கின்றன. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பல ஆடம்பர பொருட்கள் இயற்கையை பாதிப்படைய செய்வதுடன் சிறிய உயிரினங்களின் வாழ்வையும் சிதைக்கின்றன.

  • வனத்தீயினால் நீலகிரியில் மிக முக்கிய வன உயிரின மண்டலமான முதுமலை தேசிய பூங்காவான முக்கூர்த்தி போன்ற இயற்கை பாதுகாப்பு பகுதிகள் சேதமடைகின்றன. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் இயற்கையை பாதிக்காத பொருட்களாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தும் சோப்பு முதல் எழுது பொருட்கள் மற்றும் இதர உபயோக பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் நம்பக பொருட்களாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை நமக்கு நல்ல நீர், காற்று, நல்ல சூழலையும், பலவித நன்மைகளையும் தருகிறது. நாமும் இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் இயற்கை நேசிக்கும் குடும்பமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.

  • சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், ""சதுப்பு நிலங்கள் சோலைக்காடுகள், மலைகளை ஒட்டிய நீர்வளங்கள் அடங்கிய பகுதியாகும். இவை பல வகையில் நமக்கு பயன் தருகின்றன. சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் போது ஏற்பட்ட உயிர் சேதங்கள், பொருட்சேதங்கள் அதிகரிக்க கடல் சார்ந்த பகுதிகளில் இருந்த மாங்ரோ காடுகள் அழிக்கப்பட்டதே ஆகும். சதுப்பு நிலங்களில் உள்ளூர் தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நீண்ட கால பாதுகாப்பினை சதுப்பு நிலங்கள் பெறும்,'' என்றார். நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""சதுப்பு நிலங்களில் பல்வேறு உயிரினங்கள் மூலிகை செடிகள் உள்ளன.

  • இங்குள்ள நீராதாரத்தை நம்பியே இவை வாழ்கின்றன. சதுப்பு நிலங்கள் அழியும் போது, இதை சார்ந்துள்ள உயிரினங்கள், தாவரங்கள் அழிந்து போகிறது. வீடுகளில் பூச்செடிகள் வளர்ப்பது போல் மூலிகை செடிகளையும் வளர்க்க வேண்டும்,'' என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இவற்றை அரசும் மக்களும் காப்பாற்ற முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

  • கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""இயற்கையை பாதுகாத்ததினால் சுத்தமான காற்று, நீர், உணவை முன்னோர்கள் பெற்றனர். அதேபோல வருங்கால சந்ததியினர் நல்ல சூழலில் வாழ நாம் தற்போதுள்ள இயற்கையை காப்பாற்ற முன்வரவேண்டும்,''என்றார். மாணவர்களுக்கு மரவியல் பூங்காவை சுற்றி காண்பித்து அங்குள்ள சதுப்பு நில பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை ஹெலினா வரவேற்றார். ஆசிரியர் ஹொனரின்வுட் நன்றி கூறினார்.

பந்தலூரில் ஆதிவாசி விவசாய பொருள் விற்பனை நிலையம்


பந்தலூரில் ஆதிவாசி விவசாய பொருள் விற்பனை நிலையம்



ஊட்டி, : ஊட்டியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் தனி அலுவலர் கோபால், பொது விநியோக கூட்டுறவு சார் பதிவாளர் ரவி ஆனந்த் மற்றும் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், 

நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க சூப்பர் மார்கெட்டில் தரமற்ற காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 
மேலும், பல ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படுவதில்லை. இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

 பல நியாயவிலை கடைகளில் மின் தாரசு பயன்படுத்துவதில்லை. எடையளவுகள் சரியில்லாமல் எடை குறைவாக உள்ளதாக பலர் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

பந்தலூரில் உரம் விற்பனை செய்ய கிடங்கு அமைக்க வேண்டும். 

சேரம்பாடி அருகே மண்ணாத்திவயல் பகுதியில் கடை அமைக்க வேண்டும்.  

அனைத்து நியாய விலை கடைகளிலும் அயோடின் உப்பு விற்பனை செய்யப்பட வேண்டும். 

கூட்டுறவுத்துறை சார்பில் பந்தலூரில் சூப்பர் மார்கெட் திறக்க வேண்டும். 

கொளப்பள்ளியில் கூட்டுறவு வங்கி திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் கூறுகையில், அளவகள் குறித்து நியாயவிலை கடை ஊழியர்கள் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்படும். 

பந்தலூரில் ஆதிவாசிகளுக்கான விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மையம் திறக்கப்படும். 

மண்ணாத்திவயல் பகுதியில் ரேஷன் கடை அமைக்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலவச அறை வசதி செய்து கொடுக்கப்பட்டால் விரைவில் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அனைத்து கடைகளிலும் இருப்பை பொருத்து அயோ டின் உப்பு விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்படும்.

ஏற்கனவே தேவாலாவில் உள்ள சூப்பர் மார்கெட் நஷ்டத்தில் இயங்குகிறது. எனவே புதிய சூப்பர் மார்கெட் அமைப்பது கடினம். இருப்பினும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.''

கொளப்பள்ளி பகுதியில் கூட்டுறவு வங்கி திறக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு அனுமதி பெற்றவுடன் வங்கி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கூட்டுறவு நிறுவனம் மூலம் பந்தலூர், தேவாலா, கூடலூர் மற்றும் ஊட்டியில் மருந்துகடைகள் செயல்படுகின்றன. இங்கு தரமான மருந்து பொருட்கள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுக்கின்றது. 

கோத்தகிரியில் புதிதாக கூட்டுறவு மருந்துகடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். 

கூட்டத்தில் புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன், நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
.

ஊட்டி : நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய- மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், நியாய விலை கடைகளில் மின்னணு தராசுகளில் பேட்டரி சார்ஜ் நிற்பதில்லை எனக்கூறி பழைய எடைகற்களை கொண்ட தராசுகளை பயன்படுத்துகின்றனர். புதிய பேட்டரி மாற்றி மின்னணு தராசுகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பந்தலூரில் உர குடோன் அமைக்க வேண்டும்; பங்குகளில் மதியத்திற்கு மேல் மண்ணெண்ணெய் தருவதில்லை, பணியாளர்கள் சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும், என முறையிட்டார். இதற்கு பதிலளித்து துணை பதிவாளர் கேசவன் பேசுகையில்,மின் தட்டுப்பாடு காரணமாக மின்னணு எடை தராசுகள் பேட்டரி பழுதடைந்திருக்கலாம். புதிய மின்னணு தராசுகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய எடை கற்கள், தராசுகள் தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது. தற்காலிக அவசர தேவைக்கு கற்கள், தராசு பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் 
தரமற்ற பொருட்கள், தகவல் இல்லாத பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். 
காலாவதி பொருட்கள் கடையில் இருப்பு வைக்க கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பந்தலூரில் என்.சி.எம்.­எஸ்., உர குடோன் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும், என்றார். கூட்டத்தில், கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், தனி அலுவலர்கள், நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

உடல் உறுப்பு தானம் செய்ய, இளைஞர்கள் முன்வர வேண்டும்

ஊட்டி:உடல் உறுப்பு தானம் செய்ய, இளைஞர்கள் முன்வர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.மத்திய அரசின் நேரு யுவகேந்திரா நீலகிரி கிளை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து, ஊட்டி ரமணா பயிற்சி மையத்தில், தேசிய இளையோர் தின விழாவை நடத்தின.பயிற்சி மைய முதல்வர் சுரேஷ் வரவேற்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், உடல் உறுப்பு தானம் செய்வது, மிகப் பெரிய தியாகம். ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறையாவது ரத்த தானம் செய்திருக்க வேண்டும், என்றார்.
நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் பேசுகையில்,இளைஞர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட, நேரு யுவகேந்திரா பல உதவிகளை செய்து வருகிறது. போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளிவர வேண்டும், என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசுகையில், இளைஞர்கள், அரசியல், ஜாதி, மதம், இனம், ரசிகர் மன்றங்களை கடந்து, சேவை செய்ய வேண்டும், என்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நஞ்சன், மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் பேசினர். மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

கூடலூர் அரசு மருத்துவமனையில் "பிரசவ பிரிவு' துவங்க வேண்டும்


கூடலூர்:கூடலூர் அரசு மருத்துவமனையில், அனைத்து வசதிகளுடன் கூடிய "பிரசவ பிரிவு' துவங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:

கூடலூர்  பந்தலூர்   பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு  விவசாயிகள் வசித்து வருகின்றனர். இங்கு வாழ்வோர் தனியார் மருத்துவமனைகள் போதுமானதாக இல்லாததால், மருத்துவ தேவைகளுக்கு, கூடலூர் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். இங்கு, நோயாளிகள் சிறப்பான சிகிச்சையை பெற்று பயனடைந்து வருகின்றனர். எனினும், ஆபத்தான அவசர சிகிச்சைக்கு, ஊட்டி, கேரளா மாநிலம் கல்பட்டா, சுல்தான்பத்தேரிக்கு பரிந்துரை செய்வதால், நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்துக்கு முன் மற்றும் பின் கால பரிசோதனை சிறப்பாக உள்ளது. 

ஆனால், பிரசவ நேரத்தில் அவசர சிகிச்சைக்கான வசதி இல்லாததால், 50 கி.மீ., தொலைவிலுள்ள ஊட்டி அரசு  சேட் தாய் சேய்  மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு கொண்டு செல்லும் பொது அசம்பாவிதங்கள்  நடை பெறும் ஆபத்து உள்ளது. ஊட்டி அரசு  சேட் தாய் சேய்  மருத்துவ மனையில் பெரும்பாலும் கூடலூர் பகுதி மக்கள் பிரசவத்திற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.   சேட் தாய் சேய்  மருத்துவ மனையிலும் போதிய கட்டில் வசதி இல்லாமல் ஒரு கட்டிலில் இரு நபர்கள் தாங்கும் நிலையும் உள்ளது 

எனவே  கூடலூர் அரசு மருத்துவமனையில் சிசேரியன் பிரிவு, குழந்தைகள் பாதுகாப்புக்கான தனி பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய "பிரசவ பிரிவு' துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல இங்கு கட்டி முடிக்கப்பட்ட நிலுவையில் உள்ள ரத்த வங்கியை உடனடியாக திறக்க வேண்டும் 

 "எக்ஸ்ரே' பிரிவுக்கு தற்போது வாரம் இருமுறை மட்டுமே எடுக்க படுகிறது இதற்க்கு  நிரந்த ஊழியரை நியமிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூர் நகரின் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் ஒரு டாக்டருடன் செயல்படும் கூடலூர் நகர அரசு மருந்தகத்தில், சிகிச்சைக்காக தினமும் 200 முதல் 300 நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகள் விரைவில் எளிதில் சிகிச்சை பெற இந்த மருந்தகம் உதவுகிறது எனவே நோயாளிகளின் சிரமத்தை போக்க, கூடுதல் டாக்டரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

Saturday, October 13, 2012

இணைய பக்கத்தை

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்  மக்கள் மையம் 
செய்தி குறிப்பு  

தலைவர் சு சிவசுப்பிரமணியம் மாவட்ட பிரதிநிதி அரசு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு  குழு நீலகிரி மாவட்டம் 

பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்  இணைய பக்கத்தை துவக்கியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்  மக்கள் மையம்  அரசு அங்கீகாரத்தோடு சிறப்பான முறையில் செயல்பட்டு மாவட்ட மக்கள், மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் மனித உரிமைகள், வாக்காளர்  சுற்றுச்சூழல், ரத்ததானம், கண்தானம் மற்றும் எய்ட்ஸ் உட்பட பல் வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்  மக்கள்
 மையத்தின் சார்பில்http://cchepnlg.blogspot.in/
http://cchepeye.blogspot.in, http://cchepnilagiri.blogspot.in/  ஆகிய  இணைய பக்கங்களை  உருவாக்கி உள்ளது.  இந்த இணைய தளத்தில் நுகர் வோர் உரிமைகள், கடமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தர முத்திரைகள், உணவு கலப்படம், மனித உரிமை சட்டம், தகவல் உரி மை சட்டம்,  இந்திய சாட்சிய சட்டம், கண்தானம், ரத்ததானம் மற்றும் மாநில,மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற முகவரிகள் உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்து  வெளியிட்டுள்ளது.  நுகர்வோர் குறித்தும், பிற தகவல்கள் குறித்தும் இந்த இணைய பக்கத்தில்  தேடி பெறலாம். 


மேலும் மாவட்ட நுகர்வோர் சேவை மையத்தினையும் செயல்படுத்தி வருகின்றோம் நுகர்வோர் குறித்த ஆலோனைகருக்கு 9488520800, 9489860250, 9345398085 9626585301, 9442974075  ஆகிய எங்களை கலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை  தொடர்பு கொண்டு  நுகர்வோர் குறித்த ஆலோசனைகள் பெறலாம்  

அரசு வேலை நாட்களில் நுகர்வோர் குறித்த புகார், ஆலோசனைகளுக்கு மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044-28592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Tuesday, October 2, 2012

கூடுதல் பேருந்துகளை முறைப்படுத்தி இயக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஜீப் கட்டண உயர்வு எதிரொலி
கூடுதல் பேருந்துகளை முறைப்படுத்தி இயக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கூடலூர், அக்.1:
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஜீப் கட்டணம் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் வாகனங்களில் பயணிப்போர், தொழிலாளர்கள், ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பேருந்து கட்டணம் உயர்வதற்கு முன்னதாகவே ஜீப்களில் பல முறை கட்ட ணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பேருந்து கட்டணம் உயர்ந்ததை அடுத்து அதன் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை கட்டணம் உயர்த்தப்பட் டது. டீசல் விலை உயர்வு காரணம் காட்டி 2 முறை ஜீப் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டண உயர்வு காரணமாக பாதிக்கப்படும் பொதுமக் களை பாதுகாக்கும் வகை யில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இங்குள்ள வழி தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழி தடத்தி லும், பேருந்து கட்டணத்தை விட ரூ.7 முதல் ரூ.8 வரை ஜீப் கட்டணம் அதிகமாக உள்ளது. பேருந்துகள் சில சமயங்களில் உரிய நேரத்தில் இயக்கப்படாததாலும், ஒரு நேரத்தில் ஒரே வழி தடத்தில் 2, 3 பேருந்துகள் அடுத்தடுத்து செல்வதாலும், அடுத்து வரும் பேருந்துக்காக மணி கணக்கில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் ஜீப்களை நாட வேண்டியுள்ளது.
இது குறித்து கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய நிர்வாகி சிவசுப்ரமணியம் கூறுகையில், “கூடலூர், பந்தலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக வே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கான நடவடிக்கை தாமதமாகி வருகிறது. உள்ளூர் பேருந்துகளை போதிய அளவில் இயக்க வேண்டும். சரியான நேரத்தில் முறைப்படுத்தி பேருந்துகளை வழிதடத்தில் இயக்கும் வகையில் நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் ஒரே வழி தடத்தில் அடுத்தடுத்து செல்லும் பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைத்து சீரான இடைவெளியில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
கூடலூரில் இருந்து பந்தலூருக்கு வரும் வழியில் நிறுத்தங்கள் அதிகளவில் உள்ளது.
காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து கழகம் எடுக்க வேண்டும்,� என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

Sunday, September 16, 2012

Tobacco

Tobacco
Mental illness, a reason to quit smoking
YORK, England (UPI) -- A British researcher says smoking cessation programs need to include smokers with severe mental illness.
Simon Gilbody of the University of York & Hull York Medical School inEngland says those with severe mental illness need to be offered these programs.
"Despite huge expansion in smoking cessation services in recent years, people with severe mental illness have been left behind," Gilbody says in a statement.
Gilbody and colleagues reviewed studies on smoking cessation and mental illness and concluded treatment for smoking dependence is as effective among people with severe mental illnesses as it is for the general population. Moreover, such treatments do not appear to cause mental health deterioration.
The study, published in the journal Addiction, notes people with severe mental illnesses such as schizophrenia have high rates of physical illness and are two to three times likely as others to smoke.
The researchers suggest smoking-related illnesses contribute significantly to the sickness among those with severe mental illness. Mortality rates for those with severe mental illness are three times those of the rest of the population -- largely due to smoking-related illness rather than schizophrenia itself.


Tobacco
Light cigarettes similar to cigarettes
LOS ANGELES (UPI) -- U.S. researchers say low-nicotine cigarettes act similarly to regular cigarettes, occupying a significant percentage of the brains nicotine receptors.
University of California, Los Angeles, psychiatry professor Dr. Arthur L. Brody and colleagues said light cigarettes have nicotine levels of 0.6 to 1 milligram, while regular cigarettes contain between 1.2 and 1.4 milligrams.
The researchers also looked at de-nicotinized cigarettes, which contain only a trace amount of nicotine.
"The two take-home messages are that very little nicotine is needed to occupy a substantial portion of brain nicotine receptors, and cigarettes with less nicotine than regular cigarettes, such as light cigarettes, still occupy most brain nicotine receptors," Brody said in a statement.
The study, published in the online edition of the International Journal of Neuropsychopharmacology, found low-nicotine cigarettes function almost the same as regular cigarettes in terms of brain nicotine-receptor occupancy.
When nerve cells communicate, nerve impulses jump chemically across gaps between cells called synapses through neurotransmitters. The neurotransmitters bind to receptor sites on nerve cells -- in this case acetylcholine -- resulting in the release of a pleasure-inducing chemical called dopamine. Nicotine mimics acetylcholine, but it lasts longer, releasing more dopamine.
The 15 study participants were given positron emission tomography scans that use minute amounts of radiation-emitting substances to tag specific molecules.
Source : United Press International 
Tobacco
Ravaged lungs, tumors on matchbook covers
NEW YORK (UPI) -- Matchbooks distributed by the New York City health department have images of ravaged lungs, rotting gums and large, painful tumors, officials said.
The matchbook are free at 132 cigarette retailers in the South Bronx, East and Central Harlem, and North and Central Brooklyn, Dr. Thomas R. Frieden, city health commissioner, said.
"Throat cancer, gum disease, blackened lungs -- these are the realities of smoking," Frieden said in a statement. "Many countries put these images right on the cigarette pack, where they belong.
While the United States hasnt done this yet -- and New York City is pre-empted from requiring cigarette package labels -- we are putting these images where New Yorkers buy cigarettes, just before they light up, in the hope theyll think twice about the decision to continue smoking."

The campaign draws inspiration from Australia, Brazil, Canada and other countries where cigarette packs carry graphic warnings. Studies suggest that the approach encourages smokers to quit, Frieden said.
"The tobacco industry spends $13 billion dollars each year promoting smoking by showing glamorous, healthful images," Sarah B. Perl of the health department. "The reality of smoking is
ugly and devastating."

Source : United Press International
Tobacco
Cigarettes and other Tobacco Products
Cigarettes and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, production, Supply and Distribution) Rules, 2004
G.S.R. 137. — In Exercise of the power conferred by section 31 of the Cigarettes and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act, 2003 (34 of 2003), the Central Government hereby makes the following rules, namely: - 
1 Short title and commencement.
A. These rules may be called the Cigarettes and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, production, Supply and Distribution) Rules, 2004
B. They shall come into force on the 1st day of May, 2004

2 Definitions. — In these rules, unless the context otherwise requires,—
A. “Act” means the Cigarettes and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of trade and Commerce, production, Supply and Distribution Act, 2003
B. “section” means a section of the Act
C. “open space” mentioned in Section 3(1) of the Act shall not include any places visited by the public such as open auditorium, stadium, railway station, bus stop and such other places; and
D. words and expressions used herein and not defined in these rules but defined in the Act, shall have the meaning, respectively, assigned to them in the Act

3 Prohibition of smoking in a public place.
A. The owner or the manager or in charge of the affairs of a public place shall cause to be displayed prominently a board, of a minimum size of sixty centimeter by thirty centimetre in the Indian languages(s) as applicable, at least one at the entrance of the public place and one at conspicuous place(s) inside, containing the warning “No Smoking Area - Smoking here is an offence
B. The owner or the manager or in charge of the affair of a hotel having thirty rooms or restaurants having seating capacity of thirty persons or more and the manager of the airport shall ensure that, —
i) The smoking and non-smoking areas are physically segregated;
ii) The smoking area shall be located in such manner that the public is not required to pass through it in order to reach the non-smoking area; and
iii) Each area shall contain boards indicating thereon “Smoking Area/Non-Smoking area”.


4 Prohibition of advertisement of cigarette and other tobacco products.—

A. The size of the board used for advertisement for cigarettes and any other tobacco products displayed at the entrance or inside a warehouse or a shop where cigarettes and any other such tobacco products are offered for distribution or sale shall not exceed ninety centimetre by sixty centimetre and number of such boards shall not exceed two.
B. Each such board shall contain in the Indian language as applicable, one of the following warning occupying twenty-five percent, of top area of the board, namely: -
i) Tobacco Causes Cancer, or
ii) Tobacco Kills

C. The board referred to in sub-rule (2) shall contain only the brand name or picture of the tobacco products and no other promotional message and picture 

A. The owner or the manager or the Incharge of the affairs of a place where cigarettes and other tobacco products are sold shall display a board of minimum size of sixty centimetre by thirty centimetre at conspicuous place(s) containing the warning “Sales of tobacco products to a person under the age of eighteen years is a punishable offence”, in Indian language(s) applicable.
B. The onus of proof that the buyer of the tobacco products is not a minor lies with the seller of the tobacco products. The seller, in case of doubt, may request tobacco purchaser to provide appropriate evidence of having reached eighteen years of age.

[F.No. P-16011/2/2003-PH]

thanks 

BHAVANI THYAGARAHJAN, Jt. Secy

பொது விநியோக திட்ட கருத்தரங்கு


பொது விநியோக திட்ட கருத்தரங்கு


ஊட்டி,:  கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள்  மையம்  சார்பில் கோத்தகிரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொது விநியோக திட்ட மக்கள் சேவைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. 
 
 விரிவுரையாளர் ஜோசுவா மனோகர்ராஜ் வரவேற்றார்.
 
கருத்தரங்கிற்கு பயிற்சி நிறுவன முதல்வர் நாராயணன் தலைமை வகித்தார்.
  
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். 

கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது, 

தமிழகத்தில் 1968ம் ஆண்டு முதல் பொது விநியோக திட்டம் அமுல்படுத்தப்பட்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் விநியோகத்திற்காக அரசு 49,000 கோடி ஆண்டுக்கு செலவிட்டுவருகின்றது. மொத்தமாக கொள்முதல்செய்து மணியத்தின விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது கொடுத்தல் செலவுகளுக்கு அரசு மானியம் முலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகின்றது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வயதிற்குட்பட்டவர்கள் சிறியவர்கள் என்ற அடிப்படையில் அரை யூனிட்டாகவும், 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரியவர்கள் என்ற அடிப்படையில் 1 யூனிட்டாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. 

1 யூனிட்டிற்கு 12 கிலோ அரிசியும், அதற்கு மேல் அதிகபட்சமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட குடும்ப அட்டைக்கு 4 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. இதே போன்ற மற்ற பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை ஆகியவை 100 சதவீதம் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுக்கிறது. மற்ற பொருட்கள் அரசு ஒதுக்கீடு பொறுத்து வழங்கப்படுகின்றன. நீலகிரியில் 96 சதவீதம் வரை அரிசி மக்கள் வாங்கி பயனடைகின்றனர். 

விரைவில் தமிழக அரசு பயோ மெட்ரிக் ரெஷன் கார்டுகள் வழங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம், கண் கருவிழி, கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டு அதன் தகவல்கள் அடங்கிய அட்டை வழங்கப்பட உள்ளது. நியாயவிலை கடைகளில் அதற்காக வழங்கப்படும் இயந்திரம் மூலம் குடும்ப உறுப்பினர் ஒருவர் பொருட் களை பெற முடியும். இந்த நவீன முறை காரணமாக போலி கார்டுகள் ஒழிக்கப்படும். இதற்கான தகவல்கள் விரைவில் வீடுகளில் சேகரிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அத்தகவல்களை பிழையின்றி உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றார். 

இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன், ஆசிரியர் பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் வசந்தமணி, கற்பகம், பயிற்சி நிலைய மாணவ, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.