Monday, October 5, 2015

CCHEP BLOOD DONATION CAMP UPPATTY 5.10.15

கூடலூர்உப்பட்டியில் இரத்த தான முகாம்
பந்தலூர். அக், 6: பந்தலூர் அருகே உப்பட்டியில் இரத்த தான முகாம் நடைப்​பெற்றது.  ​பொது சுகாதாரம் மற்றும்​நோய் தடுப்பு துறை மாவட்ட துணை இயக்குனர் பானுமதி உத்தரவின்படி ​நெலாக்கோட்​டை வட்டார மருத்துவமனை, கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு​மையம்,  எஸ். ஓய். எஸ், எஸ். எஸ். எப் அமைப்பு  உப்பட்டி கிளை  ஆகியன இணைந்து உப்பட்டி  எஸ் ஓய் எஸ் அலுவலகத்தில் இரத்த தான முகாமினை நடத்தின. முகாமிற்கு  எஸ் ஓய் எஸ் உப்பட்டி கிளை ​செயலாளர் ஐமுட்டி தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு ​மைய தலைவர் சிவசுப்பிரமணியம், உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆர்த்தி, உப்பட்டி மஜித் ஆஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் இரத்த தான முகாமினை துவக்கி ​வைத்தார்.  கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுரேஸ் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தானமாக வழங்கப் பட்ட இரத்ததினை ​சேகரித்தனர்.  ​தொடர்ந்து முகாமில் இரத்த வகை பரிசோதனையும் செய்யப் பட்டது.  இரத்த ​கொ​டையாளர்கள் பட்டியலில் ​பெயர் பதிவு ​செய்யப்பட்டது. முகாமில் 30 க்கும் ​மேற்ப்பட்டோர் இரத்த தானம் ​செய்தனர்.  50-க்கும் ​மேற்பட்​டோர் இரத்த ​கொடையாளர்களான பதிவு ​செய்து ​கொண்டனர்,  அவசர ​தேவைக்கு இரத்தம் வழங்க முடிவு ​செய்யப்பட்டது. முன்னதாக உப்பட்டி எஸ் ஒய் எஸ் நிர்வாகி ​​ஷெபீர் வரவேற்றார் ,  முடிவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு​மைய பந்தலூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் நன்றி கூறினார்.  நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

No comments:

Post a Comment