Sunday, August 23, 2015

கொளப்பள்ளியில் மருத்துவ முகாம்


நேரு யுவகேந்திரா, மெர்குரி காய்ஸ் இளைஞர் மன்றம், கிரின்வுட் பவுன்​டேசன். கூடலூர் நுகர்​வோர் பாதுகாப்பு ​மையம் சார்பில் கொளப்பள்ளியில் மருத்துவமுகாம்   நடைப்பெற்றது,  நிகழ்ச்சிக்கு இளைஞர் மன்ற தலைவர் ஜம்சீர் தலைமை தாங்கினார். நிர்வாகி கிருஸ்ணராஜ் வரவேற்றார்,  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, நேருயுவகேந்திரா ஆண்டம்மாள், வியாபாரிகள்சங்க செயலாளர் செல்வகுமார், சமூக ஆர்வலர்கள் யோகராஜ், மகேஸ்வரன், ​யோ​கேந்திரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் பலருக்கும் ஊட்டச்சத்து கு​றைபாடு மற்றும்​ தைராய்டு கு​றைபாடுகளும், இரத்த​கொழுப்பு, சர்க்க​ரை பிரச்ச​னைகளும் இருப்பது கண்டறியப்பட்டது அதற்கான உணவு மு​றைகள் மற்றும் மருந்துகள் குறித்தும் மக்களி​டை​யே விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 200க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  முகாமிற்கான ஏற்பாடுக​ளை இ​ளைஞர் மன்ற நிர்வாகிகள் ரிசாத், குரு​மோகன், ​கோபிநாத் உள்ளிட்​டோர்​செய்திருந்தனர் முடிவில் இ​ளைஞர் மன்ற நிர்வாகி கிருஸ்ணராஜ் நன்றி கூறினார்.

cchep kollappally medical camp 23.08.2015











cchep kollappally medical camp 23.08.2015








cchep kollappally medical camp 23.08.2015



















No comments:

Post a Comment