பந்தலூர் : "மின்சார சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்படைய 
வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு-மக்கள் 
மையம் சார்பில் மின்சார சிக்கனம் குறித்து நடந்த பேச்சுப்போட்டியில் 
வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி புனித சேவியர் பெண்கள் 
உயர்நிலை பள்ளியில் நடந்தது. மாணவர் நுகர்வோர் மன்ற ஆசிரியர் மார்ட்டின் 
வரவேற்றார். மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். மின்வாரிய உதவி 
செயற்பொறியாளர் ராமச்சந்திரன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். மாணவியர் 
சிவசங்கரி, கோகிலா, இளையகனி ஆகியோருக்கு முதல் மூன்று பரிசுகள் 
வழங்கப்பட்டன. பள்ளி தலைமையாசிரியர் செலீன், சாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் 
இயக்குநர் விஜயன்சாமுவேல், மைய நிர்வாகி தனிஸ்லாஸ், மாணவிகள் பங்கேற்றனர். 
பொறுப்பாசிரியர் சுகைனா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment