Thursday, January 27, 2011

இந்தியச் சரணாலயங்கள்

  இந்தியச் சரணாலயங்கள்

இந்தியாவில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் வனவிலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வீரம் என்று மகிழ்ச்சி அடைவதும், அதன் இறைச்சியை உண்பதும், இறைச்சியை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்துவதுமாக பல நோக்கங்கள் இருக்கின்றன. இந்த நோக்கங்களால் அரியவகை பல வனவிலங்குகளும், பறவைகளும் இன்று இல்லாமல் போய்விட்டன. இனியும் இந்த நிலை நீடிக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் இந்திய அரசும் மாநில அரசுகளும் 247 வனவிலங்கு சரணாலயங்கள், 55 தேசீயப் பூங்காக்களையும் உருவாக்கிப் பராமரித்து வருகின்றன. இவற்றில் முக்கியமான சில வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் குறித்த சிறு தகவல்கள்

பொருளடக்கம்

தமிழ்நாடு

தமிழகத்தில், உயிரினங்கள் பாதுகாப்புக்கு எட்டு சரணாலயங்கள்; 13 பறவை சரணாலயங்கள்; ஐந்து தேசிய பூங்காக்கள்; மூன்று புலிகள் சரணாலயங்கள்; நான்கு யானை சரணாலயங்கள்; மூன்று பல்லுயிர் பெருக்கத் தளங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

கிண்டி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் கிண்டி தேசீயப் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் மொத்தப்பரப்பளவு 2.7 சதுர கிலோ மீட்டர்தான். இங்கு பலவகை மான்கள் இருக்கின்றன. இதனருகில் பாம்புப் பண்ணை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயம்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்குறுங்குடி மலைப்பகுதி தொடங்கி அம்பாசமுத்திரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் முண்டந்துறை மலைப்பகுதி வரையிலான வனப்பகுதி களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயமாகும். இது புலிகளுக்கான சரணாலயம் என்றாலும் இம்மலைப் பகுதியில் மிளா, காட்டுப்பன்றி, சிங்கவால் குரங்கு, யானை, உடும்பு, கரடி, பலவகைபாம்புகளும் அதிகம் வாழ்கின்றன.

ஆனைமலை

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆனைமலை வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 958 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, கடம்பை மான், புள்ளி மான், காட்டுப்பன்றி, கரடி என்று நிறைய வன விலங்குகள் இருக்கின்றன.

முதுமலை

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் முதுமலை வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 321 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, கடம்பை மான், புள்ளி மான், குரைக்கும் மான், காட்டுப்பன்றிகள், காட்டுப் பூனை, புனுகுப்பூனை, பறக்கும் அணில், பாம்பு வகைகள், பறவை வகைகள் என்று நிறைய வன உயிரினங்கள் இருக்கின்றன.

வேடந்தாங்கல்

தமிழ்நாட்டில் செங்கற்பட்டு ஊரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வேடந்தாங்கல் சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 0.3 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் நவம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பல வெளிநாட்டுப் பறவைகள் வந்து இங்குள்ள நீர்நிலைகளில் தங்கி இருக்கின்றன.

கோடிக்கரை

தமிழ்நாட்டில் கோடிக்கரை ஊரிலிருக்கும் வனப்பகுதியில் 17 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த சரணாலயம் இருக்கிறது. இங்கு வெளிநாட்டுப் பறவைகள் ஏராளமாக வந்து தங்கிச் செல்கின்றன.

ஆந்திரா

ஆந்திராவில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

நாகார்ஜீனசாகர் - ஸ்ரீசைலம்

ஆந்திராவின் குண்டூர், கர்நூல், நல்கொண்டா மற்றும் மகபூப் நகர் என்று ஐந்து மாவட்டங்களில் இருக்கும் மிகப்பெரிய நாகார்ஜீனசாகர் வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 3568 சதுர கிலோமீட்டராகும். இதில் நாகார்ஜீன சாகர் புலிகள் திட்டத்திற்கு மட்டும் 2800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கிறது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, பலவகையான மான், நரி, ஓநாய் மற்றும் முதலை போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

கொல்லேரு

ஆந்திராவின் விஜயவாடா நகருக்கு அருகில் இருக்கும் கொல்லேரு சரணாலயம் ஏரியுடன் 673 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையதாகும். இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள காலத்தில் நாரை, வண்ணக் கொக்கு மற்றும் நீர்நிலைப் பறவைகள் சில வந்து இனப்பெருக்கம் செய்து திரும்புகின்றன.

கர்நாடகா

கர்நாடகாவில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

பந்திப்பூர்

கர்நாடகாவில் மைசூரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனவிலங்குகளுக்கான இந்த தேசீயப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 874 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, பலவகையான மான், நரி, ஓநாய், காட்டு நாய், மலபார் அணில், பச்சைப் புறா, காடை, கவுதாரி மற்றும் முதலை போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

நகர்ஹோலே

கர்நாடகாவில் மைசூரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனவிலங்குகளுக்கான இந்த குடகுமலைத் தேசீயப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 571 சதுர கிலோமீட்டர். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, காடை, கவுதாரி மற்றும் காட்டுக்கோழி போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பன்னார்கட்டா

கர்நாடகாவில் பெங்களூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த வனப்பகுதியின் பன்னார்கட்டா தேசியப்பூங்காவில் பலவகையான மான்கள் இருக்கின்றன.

ரங்கன் திட்டு

கர்நாடகாவில் ஸ்ரீரங்கப்பட்டினம் ஊருக்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ரங்கன் திட்டு சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் ஜீலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையுள்ள காலத்தில் திறந்த வாய் நாரை, கரண்டி மூக்கன் மற்றும் வெள்ளை இபிஸ் போன்ற நீர்நிலைப் பறவைகள் சில வந்து செல்கின்றன.

கேரளா

கேரளாவில் இருக்கும் முக்கியமான சரணாலயம் பெரியாறு சரணாலயம்தான்.

பெரியாறு

கேரளாவில் இருக்கும் கோட்டயம் எனும் ஊரிலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவிலும் தமிழ்நாட்டில் இருக்கும் தேனி எனும் ஊரிலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் பெரியாறு சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 777 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டு எருமை, பலவகையான மான், காட்டு நாய், புலி, பலவகைக் குரங்கு, பறக்கும் அணில்கள், மலை அணில், காட்டுக் கோழி, காட்டு மைனா போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

காசிரங்கா

அஸ்ஸாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 217 கிலோமீட்டர் தொலைவிலும், ஜோர்கட் எனும் ஊரிலிருந்து 84 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் காசிரங்கா சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 430 சதுர கிலோமீட்டர். இது காண்டா மிருகத்திற்கான சிறப்பு சரணாலயமாகும். இங்கு காண்டாமிருகம், யானை, சதுப்பு நில மான், சிறுத்தை, பூனை, மலைப்ப்பாம்பு, சிகப்புக் காட்டுக் கோழி, வாத்து, மானிடர் பல்லி போன்றவை அதிகமாக இருக்கின்றன.

மானஸ்

அஸ்ஸாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூட்டான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மானஸ் நதியுள்ள 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சரணாலயம் இது. இந்த சரணாலயத்தில் புலி, பலவகையான பறவைகள் பல இருக்கின்றன.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

ஜல்டபாரா

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் ஹாசிமாரா அருகில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 116 சதுர கிலோமீட்டர். இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, காட்டு எருமை, குரைக்கும் மான், முள்ளம்பன்றி மற்றும் பலவகையான பறவை போன்றவை அதிகமாக இருக்கின்றன.

[தொகு] சுந்தரவனம்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்கத்தாவிற்குத் தெற்கே 112 கிலோமீட்டர் தொலைவிலும் போட்கானிங் எனும் ஊரிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் சுந்தரவனம் இருக்கிறது. இந்த சுந்தரவனத்தின் வடக்குப் பகுதியை சஜ்ரகலி சரணாலயம் என்றும் தெற்குப் பகுதியை லோதெய்ன் தீவு சரணாலயம் என்றும் சொல்கின்றனர். இதன் மொத்தப் பரப்பளவு 2585 சதுர கிலோமீட்டர். இங்கு ராயல் பெங்கால் டைகர்ஸ் எனும் சிறப்பு புலி, மான், காட்டுப்பன்றி, பலவிதமான முதலை மற்றும் ஆமை இருக்கின்றன.

பீகார்

பீகார் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ஹஜாரிபாக்

பீகார் மாநிலத்தில் ராஞ்சி எனும் ஊரிலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலும் கோடர்மா எனும் ஊரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இந்த மலைப்பிரதேச சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 186 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, மயில், நீலப்பசு போன்றவை நிறைய இருக்கின்றன.

பலாமாவு

பீகார் மாநிலத்தில் ராஞ்சி எனும் ஊரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் சிப்பாதோஹர் எனும் ஊரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 979 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுஎருமை, குரைக்கும் மான் மற்றும் பலவகையான மான் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ராதாநகரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் கோல்ஹாபூர் அருகில் இருக்கும் ராதாநகரி சரணாலாயத்தின் மொத்தப்பரப்பளவு 2072 சதுர கிலோமீட்டர். இது காட்டு எருமைகளுக்கான சரணாலயமாகும். இங்கு காட்டு எருமை, சிறுத்தை, காட்டுப் பன்றி, பல வகை மான்கள் அதிகம் இருக்கின்றன.

பொரிவ்லி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பை அருகில் 34 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பொரிவ்லி ஊரில் உள்ள விலங்கியல் தேசீயப் பூங்காவான இதன் மொத்தப் பரப்பளவு 100 சதுர கிலோமீட்டர். இங்கு சிறுத்தை, காட்டுப் பன்றி மற்றும் பறவைகள் இருக்கின்றன.

டடோபா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சந்திராபூர் எனும் ஊரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் தெற்கிலும் வரோரா எனும் ஊரில் இருந்து 56 கிலோமீட்டர் தென்மேற்கிலும் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 117 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, காட்டு எருமை, கடம்பை மான், காட்டு மாடு, காட்டுப் பன்றி, முதலை ஆகியவை இங்கு இருக்கின்றன.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

கிர்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் சௌராஷ்டிரப் பகுதியில் உள்ள கிர் காடுகளில் சிங்கங்களுக்கான சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் சிங்கத்திற்கான ஆசிய அளவில் சிறப்பு பெற்ற சரணாலயமாகும். சாசன்கிர் எனும் ஊரிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 1412 சதுர கிலோமீட்டர். இங்கு சிங்கம், சிறுத்தை, காட்டுப் பன்றி, கடம்பை மான், மலைப்பாம்பு, கழுகு மற்றும் கருடன் போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பிரோடன்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகர் எனும் ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கடல் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 271 சதுர கிலோமீட்டர். இங்கு பருவகாலமாக நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கிறது. இங்கு ஆக்டோபஸ், பவளப் பூச்சி, பப்பர் மீன், கொக்கு, நாரை போன்றவை இருக்கிறது.

சுரேந்திர நகர்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் தாரங்கத்ரா எனும் ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுரேந்திர நகர் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 3569 சதுர கிலோமீட்டர். இது காட்டுக்கழுதைகளுக்கான சரணாலயம் ஆகும். இந்தக் காட்டுக் கழுதைகள் அரேபியா, துருக்கி, திபெத், மங்கோலியா, ரசியா போன்ற நாடுகளில் மட்டும்தான் இருக்கின்றன. இங்கு காட்டுக் கழுதை தவிர காட்டு மாடு, ஒநாய், கடம்பை மான் போன்றவைகளும் இருக்கின்றன.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

கன்ஹா

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சிரிடோங்கிரி எனும் ஊரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயம் மண்ட்லா மற்றும் பாலாகாட் எனும் இரண்டு மாவட்டங்களில் மொத்தப் பரப்பளவில் 1940 சதுர கிலோமீட்டர் உள்ளது.இங்கு புலி, மான், காட்டுப் பன்றி, காட்டு எருமை, சிறுத்தை, குரைக்கும் மான், சுண்டெலி மான், முள்ளம்பன்றி, காட்டு மாடு போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பந்தவ்கர்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உமாரியா எனும் ஊரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 105 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, வெள்ளைப் புலி போன்றவை இருக்கின்றன.

சிவ்புரி

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஜான்சி எனும் ஊரில் இருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிவ்புரி சரணாலயத்தில் கடம்பை மான் மற்றும் காட்டு மாடு போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ரண்தம்போர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சவாய் மதாபூர் எனும் ஊரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 392 சதுர கிலோமீட்டர் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, கழுதைப்புலி, ஓநாய், காட்டுப் பூனை, புனுகு பூனை, காடை, கவுதாரி, பச்சைப்புறா, சிவப்புக் காட்டுக் கோழி போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பரத்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆலிவர் எனும் ஊரில் தெற்கில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர். இங்கு 350 க்கும் அதிகமான பறவை வகைகள் இருக்கின்றன.

சாரிஸ்கா

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆலிவர் எனும் ஊரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாரிஸ்கா சரணாலயத்திலன் மொத்தப் பரப்பளவு 197 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை மற்றும் பலவகையான மான்கள் , முதலை போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ஜெய்சல்மேர் பார்மர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்சல்மேர் நகரைச் சுற்றி அமைந்துள்ள இந்தப் பாலைவனச் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 3000 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்தப் பாலைவனப் பகுதியில் அதிகமாக வளர்ந்துள்ள புதர்ச்செடிப் பகுதிகளில் சில வகை மான்கள், ஓநாய், பாலைவன பூனை, நரி போன்றவைகளுடன் பஸ்டர்டு எனும் அரியவகைப் பறவையும் இங்கு காணப்படுகின்றன.

உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

[தொகு] கார்பெட்

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ராம் நகர் எனும் ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயம்தான் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் சரணாலயம். இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 525 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு புலி, குரைக்கும் மான், புள்ளி மான், கடம்பை மான், காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, சிறுத்தை, முள் எலி, மலைப்பாம்பு, கரடி, காடை, கவுதாரி காட்டு மாடு போன்றவைகள் நிறைய இருக்கின்றன.
இங்கு 110 வகையான மரங்கள், 51 வகையான புதர்ச்செடிகள், 33 வகையான மூங்கில்கள் இருக்கின்றன.

தூத்வா

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் தூத்வா எனும் ஊரில் இருக்கும் இந்த சரணாலயம் நேபாள நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 492 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, நீலப்பசு, மீன் பூனை, சிறுத்தைப் பூனை, கொம்பு ஆந்தை, கழுகு ஆந்தை, காடை, கவுதாரி, கொக்கு மற்றும் நாரை போன்றவைகள் இருக்கின்றன.

நந்ததேவி

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இமயமலைப் பனிப் பிரதேசப் பகுதியில் இருக்கும் இந்த சரணாலயத்தில் மொத்தப் பரப்பளவு 630 சதுர கிலோமீட்டர். இங்கு ஹிமாலயப் பிரௌன் கரடி, ஹிமாலய கறுப்புக் கரடி, பனிச் சிறுத்தை, கஸ்தூரி மான் மற்றும் பனிப்புழு போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ஒரிசா

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

சிம்லிபால்

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் பாரிபாடா எனும் ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 303 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு சுண்டெலி மான், புலி, சிறுத்தை, யானை, காட்டு எருமை, பறக்கும் அணில் ஆகியவை அதிகம் இருக்கின்றன.

சில்கா

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் பால்கான் எனும் ஊரில் இருக்கும் இந்தப் பறவைகள் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 900 சதுர கிலோமீட்டர். இங்குள்ள ஏரியில் பலவகையான கொக்கு, நாரை, போன்ற நீர்நிலைப் பறவைகள் மற்றும் மான்கள் போன்றவைகள் இருக்கின்றன.

சட்கோஜியா கார்ஜ்

ஒரிசா மாநிலத்தில் தென்கனால், பூரி, கட்டாக் மற்றும் பூல்பனி எனும் நான்கு மாவட்டங்களில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டு எருமை, காட்டுப் பன்றி, குரங்கு மற்றும் காடை, கவுதாரி, பறக்கும் அணில் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

இமாசலப் பிரதேசம்

இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

மணலி

இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் குலூ எனும் ஊரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மணலி சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு செப்டம்பர், அக்டோபர் மற்றும் மே, ஜீன் ஆகிய மாதங்கள் பருவகாலமாக இருக்கிறது. இங்கு தார், சேரோ, கோரல், கலிஜ், கோக்லாஸ், சக்கோர் மார்டன் எனும் இமாசலப் பிரதேசத்தில் மட்டும் இருக்கும் அபூர்வ விலங்குகள், புனுகுப் பூனை, பறக்கும் நரி ஆகியவை இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

டச்சிகாம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் எனும் ஊரில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 142 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு ஏப்ரல் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரையிலான எட்டு மாதங்கள் பருவகாலமாக இருக்கிறது. இங்கு மான், ஹிமாலயக் கரடி, பனிச்சிறுத்தை, காட்டு ஆடு, பனிப்பிரதேச மயில், இபெக்ஸ், கஸ்தூரி மான் ஆகியவை இருக்கின்றன.

Sunday, January 16, 2011

அஜினோ மோட்டோ....


அஜினோ மோட்டோ....



                          னிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன.  ஆனால் மனிதன்  மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான். 

இந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.  முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodium glutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.

கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கிக் குவிக்கும் நமது மக்கள், அஜினோ மோட்டோவுக்கும் அடிமையாக இருப்பதில் வியப்பில்லை.

பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்ற எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்பூன் அஜினோ மோட்டோ சேருங்கள்.. சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பாருங்கள் என்ற விளம்பரங்களுடன் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த  அஜினோமோட்டோ விற்பனை, இப்போது பெட்டிக்கடைகள் வரை சக்கைப்போடு போடுகிறது.

அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து.  தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக்கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது என்ற சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.  அப்போதுதான் அஜினோ மோட்டோவின் இன்னொரு முகம் பொதுமக்களுக்கு தெரியத் தொடங்கியது.

அஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோ மோட்டோவைப் பயன் படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் என அனைவருக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது.  பின்னர் இதுகுறித்து கீழ்க்கண்ட விளக்கத்தை அந்த  நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்தனர்.

எங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக  இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.  அஜினோமோட்டோ என்ற பெயரில் இதனை விற்பனை செய்து வருகிறோம். வேறு பல நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இதனை விற்பனை செய்து வருகின்றன.

சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினோ மோட்டோ  பயன்படுத்தப்பட்டு வருகிறது.   நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் சேய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.

அஜினோமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும் என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது.  அதன்பிறகு  நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது.  அஜினோமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பு  இது பாதுகாப்பானது என அங்கீகரித்துள்ளது.  சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம்.  இது நம் உடலில் உள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது.  நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம்.  இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது.  கடைகளில் கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது.  இந்த கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும் என்று அவர்கள் விளக்கம் கூறியிருந்தனர்.

போலி உணவுப் பொருட்களையும் மாத்திரை மருந்துகளையும் கண்டறிவதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, போலி  வேதிப் பொருட்களை கண்டறிவது சுலபமான வேலையா என்ன ?

விஷத்தன்மை

இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.  கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ  கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அஜினோமோட்டோ  கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும்.  இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது.  மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.  இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.  ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும்.  இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்

அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும்.  இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது.  பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த  எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன.  இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள்  கெட்டுப் போகாது.  மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம்.  ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள்.  இது குறித்து எச்சரிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்.

புதிது புதிதாக கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி 450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன.  ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி 450 நொதிகள் திணறுகின்றன.  குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ  போன்ற சுவையூட்டிகளும் பி 450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.

சோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர்.  ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது என்ற அமெரிக்க அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், அஜினோமோட்டோ  நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது.  பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினோமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது.  ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக  இந்த பொருள்  விளம்பரப்படுத்தப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.   பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப்களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோமோட்டோ  சேர்க்கப்படுகிறது.  விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் டேஸ்ட் பவுடர் என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.

இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப்  பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.

ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ  கலந்திருப்பதை மறைத்து அஞீஞீஞுஞீ ஞூடூச்திணிதணூண் என்று  மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.

குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளாக மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ  தன் கரங்களை இன்னும் அகலமாக நீட்டிக்கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.

சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர்.  இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர்.  குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.

சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான்  எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை.  பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டோ வால்  செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவைத் தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள்  சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள்.  பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.

பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய்  மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

பெற்றோர்களே ! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ  என்ற ஆபத்து தேவையா?

தயவு செய்து சிந்தித்துப் பாருங்களேன்..

இதற்கான ஆதாரங்கள்

Sharon fowler, University of Texas, USA  Jock – Samvels – NOHA Board member Lecture on “The dangers and hidder sowiees of processed free glutmatic acid”                                                                                                                                                                                       
 Dr. Olney, 5w Brain lesions, Obesity and other disturbences in mice treated with MSG                     
 Mr.Ka He, Department of Nutrition School of public health,
University of Carolina.                                              
Dr. Betty Maritimi, Georgic, Asinomoto, Aspartame & Brain
Tumors Recipe of Death.



அஜினோ மோட்டோவை தவிருங்கள்
அன்புடன் சு. சிவசுப்ரமணியம்
--
S.Sivasubramaniam
President CCHEP
Citizen Center
Center for Consumer Human resources & Environment protection
Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell: 9488520800
www.cchepeye.blogspot.com or
www.fedcons.blogspot.com or 
www.consumernlg.blogspot.com 

Monday, November 29, 2010

வேடிக்கை பார்க்கும் கல்வித்துறை... நடவடிக்கை எடுக்காத காவல்துறை...

பள்ளிகளில் மாணவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வழங்கப்படும் கடுமையான தண்டனைகள், ஆசிரியர்கள் அடித்து குழந்தைகள் துடிதுடித்து பலியாகும் சம்பவங்கள், வயதுக்கு வந்த மாணவியரை ஆபாசமாக பேசுவதால் நடக்கும் தற்கொலைகள், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளால் ஏற்படும் பிரச்னைகள்... இப்படி பட்டியலில் அடங்காத இந்த அவலங்களும், கொடூரங்களும் அவ்வப்போது தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், நகரங்களிலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் நிகழும்போது, பெற்றோரும், பொதுமக்களும் கொந்தளிக்கும்போது, "நடவடிக்கை எடுக்கிறோம்' என, போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் கோரசாக சமாதானம் செய்வதும் அவ்வப்போது நிகழாமல் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் பெரும்பாலான குற்றங்களில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே ஈடுபடுவது தான் பெரும் கொடுமை. சம்பவங்களுக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதோ, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதோ போலீசாரும், கல்வித்துறையும் கடும் நடவடிக்கை எடுக்காமல், "பூசி மெழுகி' விடுவதால், குற்றம் செய்பவர்கள் குதூகலிக்கும் நிலைமை தமிழகத்தில் உள்ளது.

கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில், 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் துடிதுடித்து தீயில் கருகி சாம்பலான சம்பவம், தமிழகத்தையே உலுக்கியெடுத்தது. இதற்கு காரணமானவர்கள், சட்டத்தின் ஓட்டைகளை கண்டுபிடித்து "வெளியே' வந்துவிட்டனர். குழந்தைகளை பறிகொடுத்தவர்களின் வாழ்க்கை இன்று சூனியமாகி, நடமாடும் பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அளவிற்கு வன்முறைகளும், கொடூரங்களும் நடக்கும்போது, "யாருமே, இந்த அநியாயத்தை கேட்க மாட்டாங்களா? கயவர்களுக்கு கைவிலங்கு மாட்ட மாட்டார்களா?' என, பாதிக்கப்பட்டவர்கள் குமுறுவது உண்டு. இப்படிப்பட்டவர்கள், வாய்ப்பு கிடைக்கும்போது, தங்களுடைய ஆதங்கங்களை எல்லாம் ஒன்று திரட்டி கொட்டி விடுவர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய, பொதுமக்கள் விசாரணை கூட்டமும் இப்படித்தான் அமைந்தது.

ஷாந்தா சின்ஹா மற்றும் பல்வேறு நீதிபதிகள் அடங்கிய இக்குழு, சென்னையில் நேற்று முன்தினமும், தொடர்ந்து நேற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தியது. மாநிலம் முழுவதும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெற்று, அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என, தேசிய ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று அண்ணாசாலை தேவநேய பாவாணர் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தேசிய ஆணையத்தின் மீது நம்பிக்கை கொண்டு, ஏராளமான பொதுமக்களும், பல்வேறு சமூகநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் திரண்டு வந்திருந்தனர்.

மகளை பறிகொடுத்த தாய்: தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்த ஒரு தாய், "நான் ஆயா வேலை பார்த்து, எனது மகளையும், மகனையும் கஷ்டப்பட்டு படிக்க வைச்சேன். எனது மகள் யோகதாரணி, ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தா. நல்லா படிப்பா. வகுப்பு, "லீடர்' அவதான். அப்படிப்பட்ட அவளை, ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு வாயால சொல்ல முடியாத அளவுக்கு அசிங்க, அசிங்கமா ஒரு லேடி டீச்சர் திட்டியிருக்காங்க. அவமானம் தாங்காம, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைச்சுகிட்டு இறந்துட்டா. அவ எழுதி வைச்ச கடிதம் மூலமாத்தான், இந்த தகவல் எங்களுக்கு தெரிஞ்சுது' என, அழுதார்.

பிஞ்சை இழந்த பெற்றோர்: மணப்பாறை அடுத்த, காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, "எனது மகள், பக்கத்துல இருந்த ஒரு தனியார் பள்ளியில யு.கே.ஜி., படிச்சிட்டு இருந்தா. வழக்கமா, நான்தான் பள்ளியில கொண்டுபோய் விடுவேன்; அழைச்சிட்டு வருவேன். ஒரு நாள் காலையில பள்ளியில விட்டுட்டு மாலையில போனா, குழந்தை வரலன்னு சொன்னாங்க. கேட்டா பதிலே இல்லை. மறுநாள், பக்கத்து பள்ளி தண்ணீர் தொட்டியில காயத்தோட பிணமா பார்த்தோம்' என கூறியவர், தொடர்ந்து பேச முடியாமல், அப்படியே கீழே சரிந்தார். அவரது மனைவி, "தண்ணீர் தொட்டியில முள் நிறைய இருந்துச்சு. அந்த முள் எல்லாம் என் மகள் உடம்புல குத்தி ரத்த காயமா, இறந்து கிடந்தா. அவளை, பள்ளி தலைமை ஆசிரியரோ, வகுப்பு ஆசிரியரோ யாருமே வந்து பார்க்கல. வகுப்பு ஆசிரியை அடிச்சதால தான், அவ இறந்திருக்கிறா. சம்பந்தப்பட்டவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் குழந்தை இறந்ததுக்கு நீதி கிடைக்கணும்' என, அவரும் அழுதார். இந்த காட்சியைக் கண்டு, விசாரணைக்கு வந்த ஒட்டுமொத்த மக்களும் கண் கலங்கினர்.

அதிகாரிகள் மவுனம்: இதேபோல், பலரும் தங்களது குழந்தைகளுக்கு ஏற்பட்ட சம்பவங்களை, தேசிய ஆணையம் முன் தெரிவித்தனர். இதற்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், "நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என ஒற்றை வார்த்தையை பதிலாக தந்தனர். கல்வித்துறை அதிகாரிகளோ, "மவுன விரதம்' இருந்தனர். "குற்றங்களில் தொடர்புடையவர்கள் வசதியாக இருந்தால், தப்பி வெளியே வந்து விடுகின்றனர்; அதுவே, ஏழைகளாக இருந்து தவறே செய்யாவிட்டாலும், அவர்கள், "உள்ளே' வாடுகின்றனர்' என ஆணைய உறுப்பினர்கள் வேதனை தெரிவித்தனர்.

 : குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்த பரிந்துரைகளுக்கு பதில் அளிக்காத, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது தொடர்பாக, சில பரிந்துரைகளை தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து பதில் அளிக்கும்படி அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. மேற்கு வங்கம், உ.பி., மாநில அரசுகள் தவிர, வேறு எந்த மாநில அரசும் இதுகுறித்து பதில் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு இதுவரை பதில் அளிக்காத மாநிலங்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணையின்போது பதில் அளிக்கவில்லை எனில், சம்பந்தபட்ட மாநில அரசுகளின் தலைமைச் செயலர், சட்டத் துறை செயலர்களுக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும்' என, உத்தரவிட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை,'




 



""நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை,'' என, ஜெர்மன் தொழில்நுட்ப பூங்கா இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில் நடந்த, "பொருட்களின் எடை, அளவு சட்டம் 1976 மற்றும்  புதிய அளவீடுகள் சட்டம் 2009' கருத்தரங்கு சென்னையில் நடந்தது.பொருட்களின், எடை, அளவு சட்டத்தின் நிறை குறைகளை பற்றி ஜெர்மன் தொழில் நுட்ப பூங்கா இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சட்டங்கள், சாதாரண மக்களுக்கு சென்றடையவில்லை. மிக நுட்பமான விளக்கங்களுடன் உள்ளதால், சட்ட வல்லுனர்களே ஒன்றுக்கு இரண்டுமுறை படித்தால் மட்டுமே புரிகிறது. இதனால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, மிகக் குறைவாகவே இருக்கிறது. சட்டங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஏற்ற வசதிகளை, அரசு செய்ய வேண்டும்.நாம் வாங்கும் பொருட்களின் அளவு குறித்து கவனிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்ரோல் பங்க்கில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையானால், அதில் 1 சதவீதம் தவறு நடந்தால் கூட, நாள் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய், அந்த பெட்ரோல் பங்க்கிற்கு கிடைத்து விடுகிறது. நாட்டில் 25 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இப்படி பலமடங்கு நுகர்வோரின் பணம் நிறுவனங்களால் சுரண்டப்படுகிறது.பொருட்களின் எடை மற்றும் அளவுக்கான சட்டத்தை இந்திய அரசு 1976ல் உருவாக்கியது. அதன் பின் 2009ல் புதிய அளவீடுகள் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த சட்டம் சரியான முறையில் மக்களுக்கு சென்று சேரவில்லை. இந்த சட்டத்தில் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.குறிப்பாக, பொருட்களின் எடையில் முறைகேடு செய்பவர்களுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் முகவரி, விலை, காலாவதியாகும் தேதி, அனைத்தும் ஒரே இடத்தில், மக்கள் புரிந்து கொள்ளும் வகையில்  பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இறக்குமதி செய்யும் பொருட்களில், இருக்கும் விளக்கங்கள் சீனா,கொரிய, மொழிகளில் இருக்கும். இவற்றை விற்பதும் குற்றமே. ஒரு பொருளை மற்றொருவரிடம் இருந்து வாங்கி, தங்கள்  நிறுவனத்தின்  பெயரில் விற்பனை செய்பவர்களும்,  தவறுக்கு பொறுப்பாவார்கள்.பொருளின் மீது குறிப்பிட்டிருக்கும் அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. பால்,குளிர்பானங்கள் ஆகியவற்றை குளிரூட்டுவதால் விலை அதிகமாக வைத்து விற்கின்றனர். அவ்வாறு செய்வதும் குற்றமாகும். சில்லறை விற்பனை விலைக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டி பொருளின் விலையை அதிகமாக விற்பதும், இந்த சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.மருத்துவ பொருட்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை செய்யும் போது, பொட்டலங்களின் மீது அதன் நிகர எடையை குறிப்பிட்டிருக்க வேண்டும்.இது தவிர அதிகாரிகளும், அவ்வப்போது கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள  வேண்டும். இந்தியாவில் 2.1 கோடி விற்பனையாளர்கள் உள்ளனர். ஆனால், 2 ஆயிரத்து 500 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இந்தத் துறையில் இருக்கும் அதிகாரிகளின் பற்றாக்குறையும் அதிகமான தவறுகள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.தவறு செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. அதிகப்படியான அபராதம் மற்றும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி பேசினார்.விழாவில், கூட்டுறவுத்துறை பதிவாளர் ஜதீந்திர நாத் ஸ்வைன், சிவில் சப்ளை கமிஷனர் பாலசந்திரன், இந்திய நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த ராஜன், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம்

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து  ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் இது‌தொட‌ர்பாக கட‌ந்த இர‌ண்டு ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌ய்‌வி‌ல், நா‌ள் ஒ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்களு‌க்கு தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌சி‌க்க‌ல் உருவாகு‌ம் எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். இவ‌ர்களு‌க்கு தாம்ப‌த்‌திய உற‌வி‌ன் போது ஏ‌ற்படு‌‌ம் ‌விறை‌ப்பு‌த்த‌ன்மை‌யி‌ல் ‌சி‌க்க‌ல் எழு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.


இத‌ற்கு காரண‌ம் புகை‌ப் ‌பிடி‌க்கு‌ம் போது நமது உட‌லு‌க்கு‌ள் செ‌ல்லு‌ம் ‌நி‌க்கோ‌ட்டி‌ன் உ‌றி‌‌ஞ்சு‌ம் ‌திசு‌க்களை பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌க்குவதுட‌ன் அதனை சுரு‌ங்க‌ச் செ‌ய்‌கி‌ன்றன. இது ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்வ‌ரி‌ன் தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கையை பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌க்கு‌கி‌ன்றது எ‌ன்று ‌சி‌ங்க‌ப்பூரை‌சே‌ர்‌ந்த மரு‌த்துவ வ‌ல்லுந‌ர் அடை‌க்க‌‌‌ண் கூ‌றியு‌ள்ளா‌ர்.


புகை‌ப் ‌பிடி‌ப்பதை‌ப் போ‌ன்று மது அரு‌ந்துவது‌ம் பா‌லிய‌ல் ‌சி‌க்க‌ல்களை உருவா‌க்கவ‌ல்லது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். நா‌ட்டி‌ல் உ‌ள்ள 120 கோடி ம‌க்க‌ள் தொகையி‌ல் 20 கோடி ஆ‌ண்க‌ளு‌க்கு ஆ‌ண்மை‌க் குறைபாடு, போதாமை, பா‌லிய‌ல் செய‌ல்படாத த‌ன்மை உ‌ள்‌ளி‌ட்ட குறைபாடுகளா‌ல் அவ‌தி‌ப்ப‌ட்டு வருவதாக ஆகா‌ஷ் கரு வள‌ர்‌ச்‌சி ம‌‌ற்று‌ம் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ன் மரு‌த்துவ‌ர் டி. காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.


ப‌ல்வேறு உறவு ‌சி‌க்கலு‌க்கு‌ம், முர‌ண்பாடான நடவடி‌க்கை ஆ‌கிய ‌பிர‌‌ச்சனைகளு‌க்கு மூல காரணமே தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் அ‌திரு‌ப்‌திதா‌ன் எ‌ன்று க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இநத ‌சி‌க்க‌ல்க‌ள் தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம், அய‌ல் அலுவலக சேவை குறைக‌ளி‌ல் ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ளிடையே அ‌திக‌ம் காண‌ப்படுவதாகவு‌ம் மரு‌த்துவ‌ர் காமரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.


இத‌ற்கு காரண‌ம் மே‌ற்‌க‌த்‌திய கலா‌ச்சார‌த்‌தி‌ன் ‌மீதான மோக‌ம், வா‌ழ்‌க்கை முறை‌யி‌ல் மா‌ற்ற‌ம், பரபர‌ப்பான, அழு‌த்த‌த்தை ஏ‌ற்படு‌த்து‌கி‌ன்ற வேலை சூழலு‌ம்தா‌ன் எ‌ன்று‌ம் காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.


உலகமயமாத‌ல், க‌ணி‌னிமயமாத‌ல் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விளைவு‌ம், பெரு‌கி வரு‌ம் இணைய‌த்தள கலா‌ச்சாரமு‌ம் ம‌க்க‌ளி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த வா‌ழ்‌க்கை முறையையே மா‌ற்‌றி அமை‌த்து உ‌ள்ளதோடு, ம‌க்களை அ‌திக அழு‌த்த‌த்தையு‌ம், பளுவையு‌ம் கொ‌ண்ட வா‌‌ழ்‌க்கை‌க்கு அழை‌த்து செ‌ல்வதோடு ம‌க்க‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கையையு‌ம் பா‌தி‌க்‌கி‌ன்றது.


த‌ற்போதைய வேலை கலா‌ச்சார‌ம் பா‌லிய‌ல் தொட‌ர்பான ம‌னித‌ர்க‌ளி‌ன் எ‌ண்ண‌த்தை மா‌ற்றுவதுட‌ன் தர‌ம் தா‌ழ்‌ந்து செ‌ல்லவு‌ம், பா‌லிய‌ல் ‌சீ‌ர்குலைவு‌க்கு‌ம் கார‌ணியாக அமை‌ந்து உ‌ள்ளது எ‌னவு‌ம் மரு‌த்துவ‌ர் காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர். து‌ரித உணவு‌க் கலா‌ச்சார‌ம், பத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட உணவு வகைகளை அ‌திக‌ம் பய‌ன் படு‌த்துபவ‌ர்களு‌க்கு தொ‌ப்பை உ‌ள்‌ளி‌ட்ட உட‌லி‌ன் பல இட‌ங்க‌ளி‌ல் உருவாகு‌ம் ஊளை‌ச் சதையா‌லு‌ம் ஒருவ‌ரி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு பா‌தி‌க்க‌ப்படுவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌‌வி‌த்து உ‌ள்ளா‌ர். ‌


திருமணமான த‌ம்ப‌திக‌ளி‌ல் 15 ‌விழு‌க்கா‌ட்டினரே கருவள‌ர்‌ச்‌சி இ‌ன்மை ‌சி‌க்கலு‌க்கு உ‌ள்ளாவதாகவு‌ம், இ‌ந்த ‌பிர‌ச்சனை‌க்கு 35 ‌விழு‌க்காடு பெ‌ண்களு‌ம், 30 ‌விழு‌க்காடு ஆ‌ண்களு‌ம் கார‌ணிகளாக அமை‌கி‌ன்றன‌ர். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் கரு வள‌ர்‌ச்‌சி‌யி‌ன்மை‌க்கு ஆணு‌ம், பெ‌ண்ணு‌ம் காரணமாக உ‌ள்ளன‌ர்.


இ‌ந்த வகையானவ‌ர்க‌ள் 20 ‌விழு‌க்காடு எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல், ‌மீதமு‌ள்ள 15 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் ‌விவாகர‌த்து பெ‌ற்றதா‌ல் எ‌ன்று மரு‌த்துவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.


இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ளி‌ல் உ‌ள்ள உ‌ண்மை ‌நிலை‌த் தொட‌ர்பாகவு‌ம், சமுதாய‌த்‌தி‌ல் உ‌ள்ள தவறான எ‌ண்ண‌த்தையு‌ம், ந‌ம்‌பி‌க்கைக‌ள் தொட‌ர்பாக இ‌த்துறை சா‌ர்‌ந்த வ‌ல்லுந‌ர்க‌ள் இர‌ண்டு நா‌ட்க‌ள் ‌வி‌ரிவான அள‌வி‌ல் ‌விவா‌தி‌க்க உ‌ள்ளதாக தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.

Wednesday, October 13, 2010