Wednesday, October 13, 2010

இடைத்தரகர்களை நிம்ப வேண்டாம்' : அதிகாரிகளை அணுகினால் பயன்

பந்தலூர் : "வருவாய் துறையின் தேவைகளுக்கு, அதிகாரிகளை மட்டுமே அணுக வேண்டும்; இடைத்தரகர்களை நம்பி ஏமாறக் கூடாது' என அறிவுறுத்தப்பட்டது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், வருவாய் துறை சார்பில், யு.எஸ்.எஸ்.எஸ்., மகளிர் கூட்டமைப்பு குழு நிர்வாகிகளுக்கு, வருவாய் துறை குறித்த சிறப்பு பயிற்சி முகாம், பந்தலூரில் நடத்தப்பட்டது. யு.எஸ்.எஸ்.எஸ்., மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி வரவேற்றார்.

பந்தலூர் தலைமையிட துணை தாசில்தார் குமார்ராஜா, சிறப்பு அழைப்பாளராக பேசியதாவது: அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், வருவாய் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தார் என பல நிலைகளிலும் அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.

நிலங்கள் குறித்த அனைத்துப் பதிவுகளும், வருவாய் துறை மூலமே மேற்கொள்ளப்படுவதுடன், நிலவரி வசூலித்தல், ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து சான்றுகள் வழங்கல், பொது சுகாதாரம், சட்ட ஒழுங்குப் பிரச்னைகளை பாதுகாத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்வது என, வருவாய் துறையினரின் பணிகள் அதிகரித்துள்ளன.

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சலுகைகள் வழங்க, சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் தலைமையில் ஒரு பிரிவு செயல்படுகிறது; இதன் மூலம் ஓய்வூதியம், உதவித்தொகை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 1998ம் ஆண்டுக்கு பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, விவசாய நிலங்களில் நிலப்பட்டா வழங்க தடையுள்ளதால், எம்மாதிரியான நிலங்கள் பெறுவது என்பது குறித்து, வருவாய் துறையினரிடம் ஆலோசித்து பெற வேண்டும்.

மாறாக, அரசு நிலங்களையும், வனப்பகுதிகளையும் ஆக்கிரமித்து, பின் பட்டா கோரி அணுகினால் பயன் கிடைக்காது. பொதுமக்கள், தங்களின் எந்தத் தேவைகளுக்கும் வருவாய் துறையினரை நேரடியாக அணுகலாம்; இடைத்தரகர்களை நம்பி ஏமாறக் கூடாது. இவ்வாறு, குமார்ராஜா பேசினார்.

நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நமக்கு தேவையான சான்றுகள், ஆலோசனையை தர வருவாய் முறையினர் முன்வரும் போது, முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார். கவிதா நன்றி கூறினார்.

சிறந்த அமைப்புக்கான விருது

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில்நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்ததான நாள் விழாவில் தன்னார்வ ரத்த கொடையாளர்கள்,​​ ரத்ததான ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு  வழங்கப்பட்டது

இவ் விழாவில் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையத்திற்கும் சிறந்த அமைப்புக்கான விருது வழங்கப்பட்டது

 கோவை  ஆட்சியர் பி.உமாநாத் தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளர் ஏ.மதிவாணன்,​​ இருப்பிட மருத்துவர் பி.சிவப்பிரகாசம்,​​ பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் சிவசுப்பிரமணியம்,​​ இணை இயக்குநர் செந்தில்குமார்,​​ ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி  ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது

விருதினை கோவை மருத்துவ கல்லுரி  ரத்த வங்கி மருத்துவ அலுவலர்  மங்கையர்கரசி வழங்க மைய தலைவர் சிவசுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். ஊட்டி  ரத்த வங்கி மருத்துவ அலுவலரும்
பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேளலாருமான மரு.அமராவதி ராஜன்  மற்றும் சுகாதார துறை அலுவலர்கள்  கோவை மாவட்ட
fedcot   ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் நிலகிரி மாவட்ட fedcot   ஒருங்கிணைப்பாளர் க. வீரபாண்டியன் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன்  மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

Wednesday, October 6, 2010

காலாவ‌தியான உணவு பொரு‌ள்: த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை

காலாவதி உணவபொருளவிற்பனசெய்வோரமற்றுமகலப்படமசெய்வோரமீதுமதமிழஅரசகடுமநடவடிக்கஎடுக்குமஎன்றஉணவஅமைச்சர் எ.வ.வேலஎச்சரித்து‌ள்ளா‌ர்.

வடசென்னையிலகாலாவதியாஉணவுப்பொருட்களபதுக்கி வைத்ததபிடிக்கப்பட்டததொடர்பாசட்ட‌ப்பேரசை‌யி‌ல் இன்றகேள்வி நேரமமுடிந்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்களசிறப்பகவஈர்ப்பதீர்மானமகொண்டவந்தனர்.

இது குறித்தநடந்விவாதத்தில் அ.இ.அ.ி.ு.உறு‌ப்‌பின‌ர் சேகரபாபு, காங்கிரஸ் உறு‌ப்‌பின‌ர் பீட்டரஅல்போன்ஸ், ா.ம.உறு‌ப்‌பின‌ர் வேல்முருகன், மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌‌ட் உறு‌ப்‌பின‌ர் மகேந்திரன், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம், ம.ி.ு.உறு‌ப்‌பின‌ர் சதனதிருமலகுமார், விடுதலைசிறுத்தைகள் க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர் ரவிக்குமார் ஆகியோரகலந்தகொண்டபேசின‌ர்.

அ‌ப்போது, காலாவதி உணவுப்பொருட்களமற்றுமகலப்பஉணவுப்பொருட்களவிற்பனசெய்வோரகடுமையாசட்டத்தினகீழதண்டிக்வேண்டுமஎன்றஅவர்களவலியுறுத்தினர்.

இதற்கபதிலளித்தஉணவுத்துறஅமைச்சர் எ.வ.வேலு பேசுகை‌யி‌ல், சென்னநகரிலவண்ணாரப்பேட்டபகுதியிலஉள்ஒரஉணவகிடங்கிலகாலாவதியாஉணவபொருட்களபதுக்கி வைத்திருப்பதாதொலைபேசி மூலமாதகவலபெறப்பட்டது.

இத்தகவலஅடுத்து, உணவபொருளவழங்கலமற்றுமநுகர்வோரபாதுகாப்புத்துறஇணஆணையாளரமற்றுமஅலுவலர்கள், குடிமபொருளவழங்கலமற்றுமகுற்றப்புலனாய்வுத்துறஅலுவலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறஅலுவலர்கள், உள்ளூரகாவல்துறஅலுவலர்களஆகியோருடனகடந்த 30ஆமதேதி இரவு 7.30மணிக்கவண்ணாரப்பேட்டி.ஏ.சாலை 4வதசந்திலஉள்கிடங்கிலதிடீரஆய்வசெய்தனர்.

இந்சோதனையினபோது, கிடங்கபூட்டப்பட்டஇருந்தது. உரிதகவலஅளித்துமகிடங்கவாடைக்கஎடுத்துள்துரபாண்டி என்பவரவரவில்லை. அங்ககுழுமிருந்பத்திரிகை செ‌ய்‌தியாள‌ர்க‌ள், தொலைக்காட்சி செ‌ய்‌தியாள‌ர்க‌ள் மற்றுமகாவலதுறையினரமுன்னிலையிலஅந்கிடங்கினபூட்டஉடைக்கப்பட்டகிடங்கசோதனையிடப்பட்டது.

இந்சோதனையினபோது, அந்கிடங்கிலகாலாவதியாஅரிசி, துவரமபருப்பு, மிளகாயஆகிஉணவுப்பொருட்களும், டீத்தூள், புளி, சாக்லேடமற்றுமசோப்பு, பவுடர்கள், பிஸ்கட், பேஸ்டபோன்காலாவதி பொருட்களுமபதுக்கி வைக்கப்பட்டிருந்ததகண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்களிடமுமஇதுகுறித்தவிசாரணசெய்ததிலபெரிகடைகளிலகாலாவதியபொருட்களஇந்கிடங்கவாடகைக்கஎடுத்துள்நபரதுரைபாண்டி என்பவரகுறைந்விலைக்கவாங்கி. இக்குடோனுக்ககொண்டவந்தஅப்பகுதி மக்களுக்கடேமேஜாபொருட்களதெரிவித்தஇப்பொருட்களகுறைவாவிலையிலவிற்பதாதெரிவித்தவிற்பனசெய்துமவந்தாரஎன்பததெரிவந்தது.

தொடர்ந்தபொதுமக்கள், காவல்துறமற்றுமசுகாதாரத்துறஅலுவலர்களமுன்னிலையிலகிடங்கிலஉள்ூ.10 லட்சமமதிப்புள்ள 47 வகையாபொருட்களகைப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்களஉடலநலனுக்கஉறுவிளைவிக்குமவகையிலகாலாவதியாபொருட்களவிற்பனசெய்தவந்துரைபாண்டி என்பவரமீதஇந்திதண்டனசட்டத்தினகீழும், உணவகலப்பதடுப்புச்சட்டத்தினகீழுமநடவடிக்கஎடுக்ராயபுரமமண்டஉதவி ஆணையரால், ராயபுரமகாவலநிலையத்திலபுகாரஅளிக்கப்பட்டுள்ளது.

இதனபடி வழக்குப்பதிவசெய்யப்பட்டஜெகன், சுடலஈஸ்வரனஆகிய 2 பேரகைதசெய்யப்பட்டுள்ளனர். இந்வியாபாரத்தநடத்துமதுரைபாண்டி என்பவரகாவல்துறையினரதனிப்படஅமைத்ததேடி வருகின்றனர். உணவகலப்பதடுப்புச்சட்டத்தினகீழதுரைபாண்டி மீதநடவடிக்கஎடுக்மாநகராட்சி சுகாதாரத்துறஅலுவலருக்குமதக்அறிவுரைகளவழங்கப்பட்டுள்ளன.

சென்னையிலகாலாவதி உணவுப்பொருட்களகண்டுப்பிடிக்கப்பட்டதஅடுத்தஅனைத்தமாவட்டங்களிலுமகாலாவதியாஉணவுப்பொருட்களஉள்ளதஎன்பதஆய்வசெய்யும்படி அனைத்து மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர்களுக்குமஉரிஅறிவுரவழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவமாவட்டத்திலுமநேற்றஆய்வமேற்கொள்ளப்பட்டது. துரைபாண்டியகாவல்துறையினரதேடி வருவதுடன், உணவுப்பொருளகலப்படமமற்றுமகாலாவதி உணவுப்பொருளவிற்பனஆகியவற்றிலஈடுபடுவோரமீதஅரசகடுமநடவடிக்கஎடுக்கும்.

பொதுமக்களிடமகாலாவதி உணவுப்பொருட்களகுறித்விழிப்புணர்வஏற்படுத்துவதற்காகல்லூரி மற்றுமபள்ளிகளிலவிழிப்புணர்ச்சி மையமஏற்படுத்தப்பட்டமாணவர்களுக்கவிழிப்புணர்ச்சி அளிக்கப்படும். இதகொண்டஅவர்களபொற்றோர்களுக்கவிழிப்புணர்வஏற்படுத்துவார்கள் எ‌ன்று அமை‌ச்ச‌ர் வேலு கூ‌றினா‌ர்.

இந்தியர்களுக்கான சமவிகித உணவு பற்றிய குறிப்புகள்

இந்தியர்களுக்கான சமவிகித உணவு பற்றிய குறிப்புகள்


சமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்
1.      மக்களை நல்ல சுகாதாரமான உடல் நலனை பேணவைத்தல். 2.     கர்ப்பிணி  மற்றும்  தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஊட்ட    அளவு பட்டியல் அளித்தல். 3.     பிறந்த குழந்தையின் எடை அதிகரிப்பு மற்றும் அந்தந்த பருவத்திற்கேற்றவாறு வளர்ச்சியை ஊக்குவித்தல். 4.     ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து, அதன் பற்றாக்குறையினால்        ஏற்படும் நோய்கள் தவிர்த்தல். 5.     வயது வந்தோரின் நலனைப் பராமரித்து, ஆயுட் காலத்தை அதிகரித்தல்.

பல்வேறு வளர்ச்சி பருவங்களும், திட்ட உணவின் முக்கியத்துவமும்

வயதான முதியவர்கள் :   சுறுசுறுப்புடனும், நலமாகவும் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த, கொழுப்பு குறைவான உணவு அளித்தல். கர்ப்பிணி பெண்கள்  :    கர்ப்பிணி பெண்கள் நல்ல முறையில் பிரசவம் அடைந்து, பால் கொடுப்பதற்கு ஏற்ற வகையில்,  நலனைக் காக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும்  வகையில் நோய்களைத்  தடுக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவளித்தல். விடலைப் பருவத்தினர் : எலும்பு  வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் அளித்தல். குழந்தைகள் குழந்தைகளின் வளர்ச்சி, உடல் பராமரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான சக்தி நிறைந்த, உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள். கைக் குழந்தைகள்: வளர்ச்சிக்கும் ஏனைய உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற வகையில்  தாய்ப்பால் மற்றும் சக்தி நிறைந்த உணவுகள்.

உணவுப் பட்டியல் குறிப்புகள்

1.       ஊட்டச் சத்துள்ள, திட்ட உணவு உட்கொள்ள பல்வேறு உணவு        வகைகளைத் தேர்வு செய்தல். 2.      கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கூடுதல்       உணவும், அதிக கவனமும் தேவை. 3.      பிறந்த குழந்தைக்கு 4-6 மாதத்திற்கு தாய்ப்பால் மிகவும் அவசியம்.       இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். 4.      குழந்தைக்கு திட உணவுகளை 4-6 மாதத்தில் இருந்து துவங்க வேண்டும். 5.      குழந்தைகளும், விடலைப் பருவத்தினரும் நல்ல உடல் நலனைப் பெறவும்        நோய்களை எதிர்க்கவும், போதுமான அளவு ஊட்ட உணவு  உட்கொள்ளவும். 6.      கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவும். 7.      சமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிசங்களைக் குறைவாகப்   பயன்படுத்தவும் வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றைக்        குறைவாகப் பயன்படுத்தவும். 8.      உடல் பருமன் மற்றும் அதிக எடையைத் தவிாக்க அதிகமாக      உணவு உட்கொள்ளக் கூடாது.   உடல் பயிற்சி செய்து உடல் எடையைப் பராமரிக்கவும். 9.      மிதமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 10.     சுத்தமான, பாதுகாப்பான உணவை உட்கொள்ளவும். 11.      சுகாதாரமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சமையல்       முறைகளையும் பின்பற்ற வேண்டும். 12.     அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மிதமான அளவு         பானங்கள் குடிக்கவும். 13.     பதப்படுத்தப்பட்ட,  டின்னில் அடைத்த உணவுகளை கவனமாக உட்கொள்ளவும்.  குறைவான அளவு சக்கரையை சோக்கவும். 14.     வயதானோர்கள், தங்களை சுறுசுறுப்பாகவும், நன்றாகவும்        வைத்துக்      கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவை  உண்ணவும்.

ஊட்டம் நிறைந்த திட்ட உணவை, பல்வேறு உணவுகள் மூலம் தேர்வு செய்ய வேண்டும்
  • நல்ல நிலையான வாழ்வு வாழ ஊட்டச்சத்து அடிப்படைத் தேவையாகும்.
  • பல்வகை உணவுமுறை, வாழ்கைக்கு மட்டுமின்றி, ஊட்டச்சத்திற்கும், உடல் நலத்திற்கும் அவசியம்.
  • அனைத்து உணவு வகைகளிலும் இருந்து தயார் செய்யப்படும் திட்ட உணவில், தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறுகளில் அதிகமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • நல்ல தரமான புரதம் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) நிறைந்த பாலை, கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும்  பெண்களுக்கான திட்ட உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் மற்றும் முந்திரி பருப்புகளில் அதிக அளவு சக்தி உள்ளது.
  • முட்டை, மாமிச உணவுகள் மற்றும் மீன் ஆகியன திட்ட உணவின் தரத்தை உயர்த்துகின்றன.  எனினும் சைவ உணவு உண்பவர்கள் தானியங்கள், பயறுகள் மற்றும் பால் பொருட்களில் இருந்து அனைத்து வகை ஊட்டச்சத்துகளையும் பெறலாம்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமினும் தாது உப்புகளும் உள்ளன.
  • வயது, இனம், உடல்நிலை, வேலை ஆகியவற்றிற்கேற்ப உணவைத் தேர்வு செய்யவும்.
  • தானியங்கள், பயறுகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றைக் கலந்து உண்ணவும்.  சக்தி பற்றாக்குறையை ஈடுசெய்ய, வெல்லம் / சக்கரை அல்லது சமையல் எண்ணெய்  சேர்க்கவும்.
  • அதிக அளவு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கவும்.
  • கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்ட உணவில், பால், முட்டை மற்றும் மாமிச உணவுகளை சேர்க்கவும்.
  • முதிர்ந்த பருவம் வந்தோருக்கு, குறைந்த அளவு கொழுப்புள்ள புரதம் நிறைந்த, மீன், பயறுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றைச் சேர்க்கவும்
  • நல்ல சுகாதார உணவு பழக்க வழக்கங்களையும் முறையான உடற் பயிற்சியையும் பின்பற்றவும்.


கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கூடுதல் உணவும், கவனிப்பும் அவசியம்

  • கர்ப்ப காலத்தில், உடல் செயற்பாட்டிற்கு அதிக அளவு ஊட்டச்சத்து தேவை.  வயிற்றில் உள்ள குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் உணவு அவசியம்.
  • பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலில் உள்ள கொழுப்பை அதிகப்படுத்தி, தேவைப்படும் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்கின்றனர்.
  • பால் கொடுக்கும் பெண்களுக்கு, அதிக அளவு பால் சுரக்கவும், உடல் நலனைக் காக்கவும் கூடுதல் உணவு தேவை.  இரும்பு சத்து நிறைந்த உணவை  உட்கொள்ளவும்.
  • ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
  • இரும்புச் சத்து பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
  • பெரும்பாலும், கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • இரும்புச் சத்து பற்றாக்குறையினால் மகப்பேறு காலத்தில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.  மேலும் குழந்தைகளின் எடை குறைகிறது.
  • குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
  • பயறுகள், உலர் பழங்கள் மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.
  • மாமிசக் கறி, மீன், கோழிக் கறி போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது.
  • தாவரங்களில் குறைவான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது.  ஆனால் மாமிச உணவுகளில் அதிகமாக உள்ளது.
  • வைட்டமின் 'சி' அதிகமுள்ள பெருநெல்லி, கொய்யா, ஆரஞ்சு வகை பழங்கள் ஆகியன, தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை கிடைக்கச் செய்கின்றன.
  • டீ இரும்புச் சத்துடன் ஓட்டிக்கொண்டு அவற்றை கிடைக்காமல் செய்கின்றது.  எனவே சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிடும் பொழுதோ, சாப்பிட்டவுடனோ அவற்றை உட்கொள்ளக் கூடாது.
  • கர்ப்பகாலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் பொழுதும் அதிகமான உணவு உட்கொள்ளவும்.
  • முழு தானியங்கள், முளைக்கட்டிய தானியங்கள், புளித்த உணவுகள் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
  • பால் / மாமிசம் / முட்டை உட்கொள்ளவும்.
  • அதிக அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும்.
  • மூடபழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் தவிர்க்கவும்.
  • மதுபானங்கள் மற்றும் புகையிலை உபயோகிக்கக் கூடாது.  பரிந்துரையின்படி மட்டும் மருந்துகள் உட்கொள்ளவும்.
  • 14-16 வார கர்ப்பத்தில், இரும்பு, போலியேட் மற்றும் கால்சியம் நிறைந்த உணவை சேர்த்து பால் கொடுக்கும் பொழுதும் தொடரவும்.
போலியேட் நிறைந்த உணவு சாப்பிடவும்
  • ஹீமோகுளோபின் உற்பத்திக்கு போலிக் அமிலம் தேவை.
  • இதன்பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
  • கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவு போலிக் அமிலம் தேவை.
  • போலிக் அமிலம் பிறக்கும் குழந்தையின் எடையை அதிகரிப்பதோடு, பிறப்பு குறைகளையும் குறைக்கிறது.
  • பச்சைக் காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், ஈரல் ஆகியவற்றில் அதிக அளவு போலிக் அமிலம் உள்ளது.


குழந்தை பிறந்த 4-6 மாதங்களுக்கு கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்கவும். இரண்டு வருடம் வரை தொடரவும்

  • குழந்தைகளின் சாதாரண வளர்ச்சிக்கு, தாய்ப்பால் இயற்கையான, சுகாதாரமான, முழு உணவாகும்.
  • குழந்தை முதலில் உண்ணும் தாய்ப்பாலில், ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு காரணிகளும் அதிகமாக உள்ளதால் கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும்.
  • தாய்ப்பால் கொடுப்பதன் முலம் நோய் தொற்றைக் குறைக்கலாம்.
  • இதனால் குழந்தைக்கும் / தாய்க்கும் பாசமும் இணைப்பும் வலுப்பெறுகிறது.
  • குழந்தை பிறப்பை நீட்டிப்பு செய்கிறது.  (மாத விலக்கை  நீட்டிக்கிறது)
  • கர்ப்பப்பை திரும்ப பழைய நிலையை அடைய தாய்ப்பால் கொடுத்தல் உதவுகிறது.
  • தாய்ப் பால் கொடுக்கும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
  • குழந்தை பிறந்தவுடன் 1 மணிநேரத்தில் தாய்பால் கொடுக்கவும்.  சீம்பாலை வெறியேற்றக் கூடாது.
  • குறைந்தது 4-6 மாதத்திற்கு கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்கவும்.
  • இதர உணவு கொடுத்தாலும், இரண்டு வருடம் வரை தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரலாம்.
  • பால் சுரப்பை அதிகப்படுத்த, அடிக்கடியும், தேவைப்படும் பொழுதும் தாய்ப்பால் கொடுக்கவும்.
  • கர்ப்ப காலத்திலும் அதன்பிறகும் தாய்ப் பால் கொடுக்கும் காலத்திலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணவும்.
  • புகையிலை (புகைபிடித்தல், மென்னுதல்) மது பானங்கள், மற்றும் மருந்துகளை பால் கொடுக்கும் காலத்தில் உபயோகிக்கக் கூடாது.
  • தாய்ப்பால் கொடுப்பதற்கு நல்ல குடும்ப ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.


இதர கூடுதல் உணவுகளை கைக்குழந்தைகளுக்கு 4 முதல் 6 மாதத்தில் தொடரலாம்.

  • 4-6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பால் மட்டும் இருந்தால் போதாது. எனவே குழந்தைககுக்கு கூடுதல் உணவை 4-6 மாதத்தில் கொடுக்கலாம். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதைத் தொ வும்.
  • இளம் குழந்தைகளுக்கு, இவ்வாறு கூடுதல் உணவின் மூலம், சத்துக்குறை நோய்களைத் தடுக்கலாம்.
  • குழந்தைகளுக்கும் தயாரிக்கும் உணவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் செய்யவும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
  • 4-6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் மட்டும் குழந்தைக்கு பற்றாது.
  • தாய்ப் பாலுடன் கூடுதல் உணவுகளையும் 4-6 மாத வயதில் கொடுக்கத் துவங்கலாம்.
  • கூடுதல் உணவளிப்பதைத் தாமதிக்கக் கூடாது.
  • குறைந்த விலையில், வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவைக் கொடுக்கலாம்.
  • ஒரு நாளுக்கு 5-6 முறை கொடுக்கவும்.
  • பழங்களையும் நன்கு சமைந்த காய்கறிகளையும் கொடுக்கலாம்.
  • சுகாதாரமான முறையில் உணவைத் தயார் செய்ய வேண்டும்.
தாய்ப்பால் பற்றவில்லை என்றால் என்ன செய்யலாம்?
  • தாய்ப்பால் பற்றவில்லை என்றால், மாட்டுப்பால் அல்லது குழந்தைகளுக்கான பவுடர்களைக் கொடுக்கலாம். குழந்தைக்கு கொடுக்கும் முன்பு, நன்றாக காய்ச்சிவிட வேண்டும். முதலில் துவங்கும் பொழுது சமஅளவு தண்ணீர் கலக்கவும்.
  • 4 வாரத்தில் முழு பால் கொடுக்கலாம்.
  • மாட்டுப்பால் கொடுக்கும் பொழுதும், கூடுதல் உணவு மூலம் இரும்பு மற்றும் வைட்டமின் 'சி' கொடுக்கவும்.
  • ஒரு நாளுக்கு 120-180 மி.லி பாலை, ஓவ்வொரு முறையும், 1 டீஸ்பூன் சக்கரையுடன், 6-8 முறை கொடுக்க வேண்டும்.
  • கடைகளில் உள்ள குழந்தை உணவைப் பயன்படுத்தினால் அட்டையில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றவும்.
  • குழந்தைகளுக்கு கொடுக்கப் பயன்படுத்தும் கப், ஸ்பூன், பாட்டில் மற்றும் நிப்பிள் போன்றவற்றை சுத்தமாக அதிக கவனத்துடன் பயன்படுத்தவும்.
  • உடல் பருமனைத் தடுக்க, அளவுக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது.
  • வீட்டில் தயார் செய்யும் குழந்தை  உணவுகளைப் கொடுக்கலாம்.  எனினும் வசதி இருப்பின் கடையில் கிடைக்கும் குழந்தை உணவுகளை கொடுக்கலாம்.


குழந்தைகள் மற்றும் விடலை பருவத்தினர், உடல் நலனுக்கு நோய் எதிர்ப்பிற்காகவும் தேவையான அளவு திட்ட உணவு உட்கொள்ளவும்

  • நல்ல வளர்ச்சிக்கும் உடல் பராமரிப்பிற்கும், ஊட்டச்சத்துள்ள உணவு மிகவும் அவசியம்.
  • குழந்தைப் பருவத்தில் திட்ட உணவு கொடுப்பதன் முலம், பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை நோய்களைத் தவிர்க்கலாம்.
  • நோய் தொற்றுகளும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும், குழந்தைகளுக்கு நோய்களையும், இறப்பையும் நேரச் செய்கின்றன.
  • நோயுற்ற காலங்களில் குழந்தைகள் அதிக அளவில் ஊட்டச்சத்துள்ள உணவினை, உடல் பராமாப்பிற்காக உட்கொள்ள வேண்டும்.
கால்சியம் நிறைந்த உணவு சாப்பிடவும்
  • உடல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம்.
  • கால்சியம், எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
  • எலும்பு தேய்மானம் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும்.
  • கர்பிணி மற்றும் தாய்ப் பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள், வயதானோர் ஆகியோருக்கு கால்சியம் அவசியம்.
  • பால், தயிர் மற்றும் கொட்டைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது.
  • ராகி மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது.
  • உடற்பயிற்சி, எலும்புகளில் இருந்து இழக்கும் கால்சியத்தை குறைக்கிறது.
  • தாய்ப்பாலுடன், சிறிதளவு மெதுமெதுப்பான தானியம், பயறுகள் கலந்த உணவை நன்கு சமைத்து கொடுக்கவும்.
  • சமைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் கொடுப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவும்.
  • அதிகமான அளவு பால் மற்றும் பால் பொருட்களை, குழந்தைகளுக்கும், விடலைப் பருவத்தினருக்கும் கொடுக்கவும்.
  • அதிகமாக உண்பதையும், தனிப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதையும் தடுக்கவும்.
உடல் சலம் சரியில்லாத நேரத்தில்
  • குழந்தையை பட்டினி போடக் கூடாது. சக்தி நிறைந்த தானியம் / பயறுகள் நிறைந்த உணவை பால் மற்றும் சமைத்த காய்கறிகளுடன் கலந்து கொடுக்கவும்.
  • குறைந்த அளவில், அடிக்கடி கொடுக்கவும்.
  • தாய்ப் பால் கொடுப்பதைத் தொடரவும்.
  • அதிக அளவு நீர் ஆகாரம் (உடல் நலமில்லாதபோது) கொடுக்கவும்.
  • வயிற்றுப் போக்கின் போது ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்ய ஏதாவது நீர் ஆகாரம் கொடுக்கவும்.


பச்சைக் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடவும்

  • சாதாரண திட்ட உணவு முழுமைபெறவும், சுவையாக இருக்கவும், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளில், நார்ச்சத்துகளும் கண் பார்வைக்கான ஒளி வேதிப்பொருட்களும் உள்ளன.
  • கீரைகள், காய்கறிகள் (மஞ்சள் / ஆரஞ்சு) மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் முலம் நுண்ணுாட்டக் குறைபாட்டினால் ஏற்படும் சத்துக்குறைவு நோய்கள் மற்றும் நெடுநாள் நோய்களைத் தவிர்க்கலாம்.
வைட்டமின் ''   நிறைந்துள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிடவும்
  • கண் பார்வைக்கு வைட்டமின் 'ஏ' தேவை.
  • வைட்டமின் 'ஏ' குறைபாடு, மாலைக்கண் நோய் மற்றும் கண்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • அதிகமான வைட்டமின் 'ஏ' குறைபாடு இருப்பின், இளங் குழந்தைகளுக்கு கண் குருடாகிவிடும்.
  • குழந்தைப் பருவங்களால் ஏற்படும், வயிற்றுப்போக்கு, அம்மை, மூச்சுக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்களினால் வைட்டமின் 'ஏ' உட்கிரகித்தல் குறைகிறது.
  • பால், முட்டை, ஈரல் மற்றும் மாமிச உணவுகளில் வைட்டமின் 'ஏ' உள்ளது.
  • தாவர பொருட்களில், வைட்டமின் 'ஏ', பீட்டா கெரோடின் வடிவில் உள்ளது.
  • அடர் பச்சைக் கீரை வகைகளான முருங்கைக் கீரை, தண்டுக் கீரை, வெந்தய கீரை, பருப்புக் கீரை மற்றும் பழங்கள், கேரட், மஞ்சள் பூசணி, மாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் அதிக அளவில் கரோட்டின் உள்ளது.
  • அன்றாட உணவில் பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை பச்சையாக சாப்பிடவும்.
  • வீட்டுக் காய்கறித் தோட்டத்தில், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவும்.
  • பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்து சமைத்து உண்ணவும்.  பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட இதனைக் கொடுக்கலாம்.


சமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிச உணவுகளை குறைந்த அளவிலும், வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை எப்பொழுதாவதும் பயன்படுத்தவும்

  • கொழுப்பு மற்றும் எண்ணெய்களில் அதிக அளவு சக்தி உள்ளது.
  • கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின், கொழுப்பில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மூலம் உட்கிரகித்தல் திறனை அதிகப்படுத்துகிறது.
  • உடலுக்குத் தேவையான செயலாக்க பொருட்கள் உருவாக்கத்திற்கு கொழுப்பு பயன்படுகிறது.
  • அதிக அளவு கலோரிகள் உள்ள கொழுப்பு உணவுகள் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது.
  • அதிக கொழுப்புச் சத்துள்ள உணவை உண்ணும் பொழுது உடல் பருமனாவதோடு, இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.
  • வாழ்வின் முற்பகுதியில் அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணவும்.
  • போதுமான அளவு உணவை மட்டும் உண்ணவும்.
  • ஓன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணைகளை பயன்படுத்தவும்.
  • வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும்.
  • லினோலெனிக் அமிலம் நிறைந்த (பயறுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், வெந்தயம், கடுகு) உணவு பயன்படுத்தவும்.
  • ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றிற்கு பதிலாக அடிக்கடி மீன் சாப்பிடவும்.
அதிக எடை போடுவது உடல் பருமனாவது ஆகியவற்றை தடுக்க அளவுக்கு அதிகமாக   சாப்பிடக் கூடாது.  உடல் எடையைப் பராமரிக்க முறையான உடற்பயிற்சி அவசியம் 
  • உடலில் அதிக அளவு கொழுப்பு படிவதால் உடல் பருமன் ஏற்படுகிறது.
  • உடல் பருமனால் பலவிதமான உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, சீக்கீரம் மரணத்தை வரவழைக்கிறது.
  • இதனால் இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு டிரை கிளிசரைடுகள் அதிகரிக்கிறது.  இருதய நோய்கள், நீரழிவு, சிறுநீரகக் கற்கள், சிலவகைப் புற்று நோய்கள் ஏற்படுகிறது.
  • அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுவதால் மட்டும் பருமன் ஏற்படுதில்லை. மனரீதியான சமுக விளைவுகளும் உண்டு.
  • மெதுவாக நிதானமாக உடல் எடையைக் குறைக்கவும்
  • அதிகமாக விரதம் இருப்பதினால், பல உடல் நலக் கேடுகள் வருகின்றன.
  • உங்களது உடல் செயல்பாட்டு அளவை ஈடுசெய்ய பல வகை உணவுகளை உட்கொள்ளவும்.
  • குறைவான அளவு உணவை முறையான இடைவெளியில் சாப்படவும்.
  • சக்கரை, கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள் மற்றும் மதுபானங்களை நிறுத்தவும்.
  • குறைவான கொழுப்புள்ள பாலை பயன்படுத்தவும்.
நல்ல உடல் நலத்திற்கான குறிப்புகள்
  • முறையாக  உடற்பயிற்சி செய்யவும்.
  • புகைபிடித்தல், புகையிலை சாப்பிடுதல், மதுஅருந்துதல் ஆகியவற்றை தவிர்க்கவும்.
  • அடிக்கடி இரத்தத்தின்  குளுக்கோஸ், கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை 30 வருடத்திற்கு மேல் பரிசோதனை செய்து கொள்ளவும்.
  • சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • அழுத்தத்தை குறைக்கும் யுக்திகளை செய்யவும் (யோகா மற்றும் தியானம்).
  • குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடவும்.



உப்பைக் குறைவாக பயன்படுத்தவும்

  • செல்களில் உள்ள திரவங்களில் மின் பகுப்பானாக உள்ளது.
  • நரப்பு கடத்தியாகவும், உடலில் உள்ள திரவ சமன்படுத்தியாகவும் பயன்படுகிறது.
  • சோடியம் சமன்பாடடைப் பொருத்து சிறுநீரகம் செயல்படுகிறது.
  • அதிகம் உப்பு சேர்ப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, வயிற்றுப் புற்றுநோயும் ஏற்படுகிறது.
  • எல்லா உணவுகளிலும் சோடியச்சத்து உள்ளதால், குறைவான அளவு உப்பு பயன்படுத்தவும்.
  • பொட்டாசியம் உட்கொள்வதைப் பொருத்து, சோடியம் உட்கொள்ளவும்.
  • சின்ன வயதிலிருந்தே, உப்பு குறைவாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை உருவாக்கவும்.
  • குறைவான உப்புள்ள உணவை சுவைக்கக் கற்றுக் கொள்ளவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான அப்பளம், ஊறுகாய், சாஸ், கெச்சப், தொக்கு, பாலாடை,  மீன் உண்பதை குறைக்கவும்.
  • பொட்டாசியம் சத்து பெற அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடவும்.
  • ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பு பயன்படுத்தவும்.
ஐயோடின் உள்ள உணவை அதிகமாக சாப்பிடவும் / ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பை பயன்படுத்தவும்
  • தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதற்கு ஐயோடின் தேவை.
  • உடல் வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் தைராய்டு ஹார்மோன் தேவை.
  • ஐயோடின் பற்றாக்குறையினால், தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்படுகிறது.
  • தண்ணீரிலும், உணவிலும் ஐயோடின் இல்லாததால் ஐயோடின் குறைபாடு அறிகுறிகள் ஏற்படுகிறது.
  • கர்ப காலத்தில் ஐயோடின் பற்றாக்குறை ஏற்படின், குறைபிரசவம், கருச்சிதைவு, கிரிட்டினிசம் ஏற்படுகிறது.
  • ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பு சாப்பிடுவதன் மூலம் உடலிற்கு அதிக அளவு ஐயோடின் கிடைக்கிறது.

சாப்பிடும் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்

  • நல்ல உடல் நலத்தைப் பராமரிக்க, சுத்தமான தரமான உணவை உண்ணவும்.
  • உணவுகளில் இயற்கையாக காணப்படும் விஷத்தன்மை, சுற்றுச்சூழல் தொற்றுகள், கலப்படங்கள் ஆகியன உடல் நலத்திற்கு கேடு தருவன ஆகும்.
  • சுத்தமில்லாத உணவை உண்ணுவதால், உணவு முலம் வரக்கூடிய நோய்கள் தாக்குகின்றன.
  • நல்ல தரமான, உணவு பொருட்களை கவனமாக பரிசோதித்து வாங்கவும்.
  • பயன்படுத்தும் முன்பு, காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவவும்.
  • பச்சையான மற்றும் சமைத்த உணவு பொருட்களை நுண்ணுயிர், எலி மற்றும் பூச்சித்தாக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • உண்ணும் வரை, எளிதில் கெட்டுப்போகக் கூடிய பொருட்களை குளிர்பதனப் பெட்டியில் சேமிக்கவும்.
  • சுய சுகாதார முறைகளைக் கையாண்டு, சமைக்கும் மற்றும் சேமிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்கவும்.

சுகாதார வாழ்விற்காக பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்களும், சமையல் முறைகளும்

  • உணவுப் பழக்கங்களை கலாச்சாரம் பெரிதும் பாதிக்கிறது.
  • உணவு பற்றிய நம்பிக்கைகள், ஊட்டச்சத்தையும், சுகாதாரத்தையும் பாதிக்கிறது.
  • சமைப்பதன் முலம் உணவு சுவையாவதோடு,  சுலபமான செரிமானம் ஆகிறது.
  • தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்கிருமிகள், சமைக்கும் பொழுது அழிந்து விடுகின்றது.
  • முறையாக சமைக்காவிடில் சத்துகள் இழப்பு ஏற்படும்.
  • அதிகமான  வெப்பத்தில் சமைக்கும் பொழுது, சத்துகள் அழிவதோடு நச்சுப் பொருட்களும் உருவாகிறது.
  • உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய முட நம்பிக்கைகளை தவிர்க்கவும்.
  • சமைக்கும் முன்பு, உணவு தானியங்களை அடிக்கடி கழுவக் கூடாது.
  • காய்கறிகளை வெட்டிய பிறகு கழுவக் கூடாது.
  • வெட்டிய காய்கறிகளை நீண்ட நேரம் தண்ணீரில்  ஊற வைக்கக் கூடாது.
  • வேகவைத்த எஞ்சிய நீரை வெளியேற்றக் கூடாது.
  • சமைக்கும் பொழுது மூடி வைத்து சமைக்கவும்.
  • அதிகமாக சுடுதல் / வறுத்தலுக்கு பதிலாக குக்கர் / நீர் ஆவி கொண்டு சமைக்கவும்.
  • முளைத்த தானியங்கள் / புளித்த உணவுகள் உண்ணவும்.
  • பயறுகள் மற்றும் காய்கறிகள் சமைக்கும் பொழுது சோடா பயன்படுத்தக் கூடாது.
  • எஞ்சிய எண்ணெயை அடிக்கடி சூடு ஏற்றக்கூடாது.


அதிகமாக தண்ணீர் குடிக்கவும், அளவாக தேனீர், காப்பி மற்றும் இதர பானங்கள் அருந்தவும்

  • மனித உடலில் தண்ணீர் முக்கால் அங்கம் வகிக்கிறது. 
  • பானங்கள் தாகத்தை தனிப்பதோடு, உடலுக்கு தேவைப்படும் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
  • சில பானங்கள் ஊட்டச்சத்து தருகின்றன. மற்றவை ஊக்கிகளாகப் பயன்படுகிறது.
  • பால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, ஊட்டச்சத்து நிறைந்த பானம் ஆகும்.
  • உடலில் தேவைப்படும், அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • தண்ணீரின் சுத்தமற்ற நிலையில் இருந்தால், கொதிக்க வைத்த தண்ணீர் அருந்தவும்.
  • ஒரு நாளுக்கு 250 மிலி கொதித்த / காய்ச்சிய பால் குடிக்கவும்.
  • கார்பனேட் ஏற்றப்பட்ட பானங்கள் அருந்துவதற்கு பதிலாக இயற்கையான பழச்சாறுகள் குடிக்கவும்.
  • மதுஅருந்தக் கூடாது.  குடிப்பழக்கம் இருப்போர் குறைவாக அருந்தவும்.


பதப்படுத்தப்பட்ட உண்பதற்கு தயாராக உள்ள உணவுகளை கவனமாகப் பயன்படுத்தவும். சக்கரையை மிகக் குறைவாக பயன்படுத்தவும்

  • நகர மயமாக்குதலினால், மக்களின் பதன்படுத்தப்பட்ட உணவுகள் உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது.
  • எனவே பாரம்பரிய முறையில் சமைக்கும் பழக்கத்தை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மாற்றி வருகின்றன.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளில் தேவையற்ற கலப்படங்கள் உள்ளது.
  • நுண்ணுாட்டச் சத்துகள் சேர்க்கப்படவில்லை எனில், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சரியான ஊட்டச்சத்துகள் இல்லை.
  • பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளாகிய சர்க்கரையில் கலோரிகள் இல்லை.
  • வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளையே உண்ணவும்.
  • பதப்படுத்தப்பட்ட திண்பண்டங்களை, சாப்பிடும் நேரத்தில் தவிர்க்கவும்.
  • கலோரி இல்லாத உணவுப் பொருட்களாகிய சக்கரை மற்றும் பதப்படுத்தப்ட்ட உணவு உண்பதை குறைத்துக் கொள்ளவும்.
  • நுண்ணுாட்டம் சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்ணவும்.
  • உடலில், உணவு அடிட்டீவ்ஸின் அளவை குறைவாக பராமரிக்க, குறைவான அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்ணவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை பயன்படுத்தும் முன்னர், டப்பாக்களில்  உள்ள பயன்படுத்தும் கடைசி நாள் போன்றவற்றை பார்க்கவும்.



உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள முதியவர்கள் நுண்ணூட்டம் நிறைந்த உணவு உண்ணவும்

  • முதியவர்களுக்கு குறைவான கலோரிகள் இருந்தால் போதும்.  உணவு உட்கொள்ளும் அளவு, உடல் செயல்பாடு, நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், முதியவர்களுக்கு நோய்கள் அதிகமாக வருகிறது.
  • முறையான உணவு பழக்கங்களும், உடற் பயிற்சியும் வயதாவதைக் குறைக்கிறது.
  • வயாதான பொழுது வரும் நோய்களைத் தடுக்க, முதியவர்களுக்கு அதிக அளவில்  கால்சியம், இரும்பு, சிங்க் மற்றும் வைட்டமின் 'ஏ' அதிகமாகத் தேவை.
  • உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பலவகையான  நுண்ணுாட்டம் நிறைந்த உணவுகள் உண்ணவும்.
  • உட்கொள்ளும் உணவிற்கேற்ப உடற்பயிற்சி செய்யவும்.
  • ஒரு நாளுக்குரிய உணவை, அதிகமாக பிரித்து உண்ணவும்.
  • பொறித்த உப்பு, மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
  • முறையாக உடற்பயிற்சி செய்யவும்


Monday, October 4, 2010

Wednesday, September 29, 2010

சரிகிறது இந்தியாவின் கவுரவம் : காமன்வெல்த் போட்டிக்கு வந்த சோதனை

சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவின் செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளால், நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்துக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.

போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கட்டுமானப் பணிகளில் முறைகேடு, டெங்கு பீதி, விளையாட்டு கிராமத்தில் சுகாதாரக் கேடு, ஸ்டேடியத்தின் கூரை இடிந்து விழுந்தது, நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது, பயங்கரவாத மிரட்டல் என, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், சர்ச்சை போட்டிகளாக மாறிப் போய் விட்டன.பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சுகாதாரக் குறைபாட்டையும் காரணம் காட்டி, நியுசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள், போட்டியில் பங்கேற்க தயக்கம் தெரிவித்துள்ளன. விளையாட்டு கிராமத்துக்கு வந்து பார்த்த, இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், அங்கு தெருநாய்கள் சுதந்திரமாக திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் கண்டு, திகைத்துப் போயினர். இவர்களில் சிலர், "ஆளைவிட்டால் போதும்' என, மறுபேச்சு எதுவும் இல்லாமல், தங்கள் நாடுகளுக்கு பறந்து விட்டனர்.

கப்பலேறும் மானம் : காமன்வெல்த் கிராமத்தில் வீரர்கள் தூங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கைகளில் தெருநாய்கள் குதித்து விளையாடியதற்கான தடயங்களையும், தெருநாய்கள் ஆங்காங்கே சுற்றித் திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற வகையில் அழுக்கு படிந்து காணப்படுவதையும் காண முடிகிறது. போதாக்குறைக்கு, சில வெளிநாட்டு "டிவி' சேனல்கள், இந்த காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பி, நம் மானத்தை வாங்கினர். "வரும் 2020ல் இந்தியா வல்லரசு நாடாகி விடும்' என்ற அரசியல்வாதிகளின் "பில்டப்'களை அடித்து நொறுக்கும் வகையில் அமைந்து விட்டது, காமன்வெல்த் போட்டிகளில் நடக்கும் குளறுபடிகள்.

காமன்வெல்த் போட்டிகள் : காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2006ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போட்டிகள் நடந்தன. இதை தொடர்ந்து, தற்போது டில்லியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த போட்டிகளில் 71 நாடுகளை சேர்ந்த 8,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடப்பது, இதுதான் முதல் முறை. ஆசியாவில் இரண்டாவது முறையாக இந்த போட்டிகள் நடக்கின்றன. கடந்த 1998ல் கோலாலம்பூரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தன.

ஒவ்வொரு நாட்டுக்கும் ரூ.48 லட்சம் : இந்த காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக, இந்தியா, கனடா நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 48 லட்ச ரூபாய் தரப்படும் என்றும், வீரர்களுக்கான விமான டிக்கெட், தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக இந்தியா உறுதி அளித்தது.இதையடுத்து, காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் 46-22 என்ற ஓட்டு வித்தியாசத்தில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

செலவு எவ்வளவு?இந்தியாவில் நடக்கும் போட்டிக்காக 11 ஆயிரத்து 494 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், இதற்காக 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போட்டிகளை நடத்துவதற்காக கட்டமைப்பு பணிகளை செய்வது, விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மற்றும் புதுப்பிப்பது ஆகியவற்றுக்காக 27 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செலவில் பெரும்பகுதி, "ஊழலில் கரைந்து விட்டதாக'  மீடியாக்கள் அம்பலப்படுத்தின.

எங்கெங்கு காணினும் ஊழல் : தொடர் ஜோதி ஓட்ட ஏற்பாடுகள், போட்டி ஒளிபரப்பு உரிமை, விளம்பரதாரர் உரிமை என, ஆரம்பத்திலேயே போட்டி ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்ததாக தகவல் வெளியானது. இப்போட்டிக்காக, கடந்த ஆண்டு தொடர் ஜோதி ஏற்றி, ஓட்டத்தை தொடங்கி வைத்த பிரிட்டன் ராணியே, தனது கவலையை தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனாலும், அதிகாரிகள் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.டில்லியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, விளையாட்டு அரங்கங்களை புதுப்பிப்பது, நடை மேம்பாலங்களை அமைப்பது, வீரர்களுக்கு தேவையான விளையாட்டு கருவிகளை வாங்குவது என, எங்கெங்கும் ஊழல் கரை கடந்தது. குறிப்பாக, மிகவும் விலை குறைந்த பொருட்களை, அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டது. கட்டுமானப் பணிகளிலும் இதே நிலை தான். தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தியதால், நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது.

ஊழல் கண்காணிப்பு  ஆணையம் அதிரடி : காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் குறித்து தினமும் செய்திகள் வெளியானதும், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆணையம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. காமன்வெல்த் போட்டிகளின் 14 திட்டப் பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது.குறிப்பாக, திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் அளித்தது உள்ளிட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக, போட்டி ஏற்பாட்டு குழுவின் இணை இயக்குனர் பொறுப்பில் இருந்த தர்பாரி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.டென்னிஸ் கோர்ட் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம், போட்டி ஏற்பாட்டு குழுவின் பொருளாளர் அனில் கண்ணாவின் மகனுக்கு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அனில் கண்ணா ராஜினாமா செய்தார். காமன்வெல்த் பணிகளில், குழந்தை தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவதாக, பிரிட்டன் பத்திரிகை ஒன்று, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு, தன் பங்கிற்கு இந்தியாவின் மானத்தை கப்பலேற்றியது.

வெள்ளம் : ஊழல் ஒரு பக்கம், போட்டிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்த, மறுபக்கம் இயற்கையும் தன் பங்கிற்கு விளையாடியது. அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், டில்லியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மைதானங்கள் சேதமாயின. சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்துக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும், தண்ணீரில் மிதந்தன. வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு கிராமம், வெள்ள நீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளித்தது. அங்கு தேங்கியிருந்த தண்ணீரால், கொசுக்கள் உருவாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கி, போட்டி ஏற்பாட்டாளர்களை கதறடித்தன.

பயங்கரவாதம் : இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த பயங்கரவாத பிரச்னையும், காமன்வெல்த் போட்டிகளில் ஊடுருவியது. போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள சூழ்நிலையில், டில்லி ஜும்மா மசூதி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தைவான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து, காமன்வெல்த் போட்டிகளுக்கு மிரட்டல் விடுத்து, இ-மெயிலும் வந்தது. இதை பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு பீதியை கிளப்பி விட்டு, புண்ணியம் தேடிக் கொண்டன. காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல் தலைமையிலான குழுவினர், விளையாட்டு கிராமத்தை சுற்றிப் பார்த்து விட்டு, அதிருப்தி தெரிவித்தனர்.

அடி மேல் அடி :இதுபோன்ற பிரச்னைகளால் டில்லி காமன்வெல்த் போட்டிக்கு, தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருந்தது. விளையாட்டு வீரர்களிடம் பீதி ஏற்பட்டு, சிலர் போட்டிகளை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், இதற்கெல்லாம் சாதாரண மக்கள் கவலைப்பட்ட அளவுக்கு கூட, விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும், பொறுப்பாளிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. "சர்வதேச அளவிலான ஒரு போட்டியை ஏற்பாடு செய்யும் போது, இதுபோன்ற குறைபாடுகள் எல்லாம் சகஜம்' என, "குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத கதையாக' பேசித் திரிகின்றனர்.  தங்கள் பாக்கெட் நிறைந்தால் போதும் என்ற நிலை தான் அவர்களுக்கு.

பிரதமர் தலையிட்டும்  தீர்வு இல்லை : பிரச்னை பெரிதானதும், இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட்டார். பிரதமர் வீட்டில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி, கில், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சோனியாவும் ஆலோசனைகளை வழங்கினார்.இதன்படி, போட்டிக்கான பணிகளை கண்காணிக்கும்படி, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இருந்தும், பிரச்னை தீரவில்லை.

அரசு என்ன செய்ய  வேண்டும்? நம் நாட்டில் திறமையான முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை கண்டறிந்து, போட்டி ஏற்பாடுகளை அவர்கள் கையில் ஒப்படைப்பதன் மூலம், நம் நாட்டின் மதிப்பு, சர்வதேச அளவில் கெடாமல் பார்த்து கொள்ளலாம். ஆனால், அதற்கு அரசுக்கு மனம் வர வேண்டும்.மேலும், போர்க்கால அடிப்படையில் விளையாட்டு கிராமத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  போட்டி துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசு இயந்திரம் இதற்காக முடுக்கி விடப்பட வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை நிரூபிக்கும் பிரச்னை என்பதால், இதற்காக ராணுவத்தை கூட பயன்படுத்தலாம். இல்லையெனில், எதிர்காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை மட்டுமல்ல, வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டும் சூழ்நிலை உருவாகி விடும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்காவிட்டால், சர்வதேச நாடுகளின் முன், நாம் தலைகுனிந்து நிற்கும் சூழல் உருவாகும்.  எது எப்படியோ, போட்டிகள் சிறப்பாக நடந்து முடிவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுவோம்.

இந்தியாவால்  முடியாதது இல்லை : சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவது என்பது, இந்தியாவுக்கு புதிய விஷயம் அல்ல. கடந்த 1951 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் இங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட வரலாறு உண்டு. எனவே, வெறும் 12 நாட்கள் மட்டுமே நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது, இந்தியா போன்ற மனிதவளம் கொண்ட நாட்டுக்கு சிரமமான காரியமே அல்ல. ஆனால், போட்டி துவங்கியதில் இருந்து, முடிவது வரை அனைத்திலும் பிரச்னை என்றால், அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது என்று தானே அர்த்தம்!

"கவுன் டவுண்'  களேபரம் : போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள கடைசி நேரத்தில் நடந்த "மெகா' குளறுபடிகள்:
* ஜவகர்லால் நேரு அரங்கில் 961 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி துவங்குவதற்கு 11 நாட்கள் இருக்கும் போது, அரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.  இங்குள்ள நடைபாதை மேம்பாலமும் இடிந்து விழுந்தது.
* காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தின் பணிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் நடந்தன. வீரர்கள் வரத் துவங்கிய நேரத்தில் இங்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டது.
* இந்திரா காந்தி விளையாட்டு வளாகம், 669 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சைக்கிள் போட்டி நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓடுபாதைக்குள், தண்ணீர் கசிந்ததால், ஓடுபாதை சேதமடைந்தது.

குற்றச்சாட்டு பட்டியல் : டில்லி காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து மற்ற நாட்டு வீரர்கள் கூறிய குற்றச்சாட்டுகள்:

ஸ்காட்லாந்து:  விளையாட்டு கிராமத்தில் தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. வீரர்கள் தூங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கையில் நாய்கள் உற்சாகமாக விளையாடுகின்றன. அறைகளில் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.
பிரிட்டன்:  விளையாட்டு கிராமத்தில் உள்ள கழிப்பறைகள், சுகாதாரமின்றி உள்ளன. உள்ளே நுழையவே முடியவில்லை. இங்குள்ள மின்சார கருவிகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
கனடா:  விளையாட்டு கிராமம் முழுவதும் குப்பை கூளங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள சூழ்நிலையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.
நியூசிலாந்து: தற்போதுள்ள நிலை, இன்னும் ஒரு சில நாட்களில் முற்றிலும் மாறி விடும் என கூற முடியாது.

யார் யாருக்கு என்ன பொறுப்பு? * எம்.எஸ்.கில் (மத்திய விளையாட்டு துறை அமைச்சர்), ஜெய்பால் ரெட்டி (மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர்), ஷீலா தீட்ஷித் (டில்லி மாநில முதல்வர்) இவர்கள் மூவருக்கும் தான், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான முக்கிய பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் தொடர்பான திட்டங்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றை இவர்கள் தான் கண்காணிக்கின்றனர்.
*சுரேஷ் கல்மாடி:  காங்கிரஸ் எம்.பி.,யான இவர், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டு குழு தலைவர். தொடர் ஜோதி ஓட்டம், வீரர்களுக்கான டிக்கெட், போக்குவரத்து, தங்குமிட வசதி, உணவு வசதி, துவக்க மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், டிக்கெட் விற்பனை ஆகியவை இவர் பொறுப்பில் தான் விடப்பட்டன. ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போது, கல்மாடி மீது தான் அதிகம் புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழுவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
*ஒய்.எஸ்.தத்வால்: டில்லி டி.ஜி.பி.,யான இவர் பொறுப்பில் தான், பாதுகாப்பு ஏற்பாடுகள் விடப்பட்டுள்ளன.
*செல்ஜா:   மத்திய சுற்றுலா துறை அமைச்சர். போட்டிகளை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை இவர் பொறுப்பில் விடப்பட்டுள்ளன.
*அம்பிகா சோனி:  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர். போட்டிகளை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது, தரமான முறையில் ஒளிபரப்பு வசதிகளை செய்து தருவது, செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது ஆகியவற்றை, இவரது தலைமையிலான அமைச்சரகம் தான் கவனிக்கிறது.

"இதுபோன்ற அரைகுறையான போட்டி ஏற்பாடுகளை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில், ஒலிம்பிக் போன்ற மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளை நம்மால் நடத்த முடியும் என, என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!'- மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குஞ்சராணி தேவி, பளு தூக்கும் வீராங்கனை.

அரசு நிர்வாக சீர்திருத்த பரிந்துரைகள் ஏற்பு : லஞ்ச, ஊழல் ஒழிப்பு "கைவிரிப்பு'

 தமிழக அரசு நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக, நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அளித்த பரிந்துரைகள் பலவற்றை தமிழக அரசு ஏற்றுள்ளது. எனினும், லஞ்சம் ஊழலை ஒழிப்பது தொடர்பான பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும், லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்கவும், சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி இரண்டாவது அறிக்கையை 2008 அக்டோபர் 3ம் தேதி அளித்தது. இந்த பரிந்துரைகளில், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை குறித்த அம்சங்கள் ஆராயப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை:

நிர்வாக சீர்திருத்த கமிட்டியின் பரிந்துரைகள், அவற்றின் மீதான அரசின் முடிவுகள்.

* பணிகள் தொடர்பாக சட்டரீதியான மற்றும் அரசியலமைப்புச் சட்ட அம்சங்கள் மாற்றப்பட வேண்டும். சட்டவிதி 311 நீக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்தின் 311வது பிரிவு, அரசு ஊழியர்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்டது. எந்த ஒரு ஊழியரையும் சட்டப்படியான நடைமுறைகளின் படி விசாரிக்காமல் டிஸ்மிஸ் செய்ய முடியாது என, அந்த பிரிவு கூறுகிறது. சட்ட விதிகள் மற்றும் அரசியல் சட்டத்தை உயரதிகாரிகள் சரியாக கடைபிடித்தாலே, பணிகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். எனவே இந்த பரிந்துரையை ஏற்க முடியாது.

* ஊழலை ஒழிக்கும் வகையில் விதிகளில் வலுவான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். இது பொதுவான அறிவுரை. இதன் மீது நடவடிக்கை தேவையில்லை.

* அனைத்து மட்டத்திலும் உள்ள அதிகாரிகளால் சட்ட விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டும். இந்த பரிந்துரை பொதுவாக உள்ளது. விதிகளை சரியாக பயன்படுத்தினாலே, ஊழலை ஒழிக்க முடியும். எனவே நடவடிக்கை தேவையில்லை.

* குரூப்- சி பணியிடங்களுக்கு மாவட்ட அளவில், மாவட்ட அதிகாரிகளால் நியமிக்கப்பட வேண்டும். அரசுப் பணியில் சிறந்த நபர்களை நியமிக்க வேண்டியிருப்பதால், மாநில அளவில் தான் நியமனம் நடக்க வேண்டும். எனவே இந்த பரிந்துரையை ஏற்க முடியாது.

* தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளை மாற்றியமைத்து, குறைக்க வேண்டும். பணியாளர்களின் எண்ணிக்கையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, தலைமைச் செயலக துறைகளை மாற்றியமைப்பது தொடர்பாக அந்த கமிட்டி அளிக்கும் அறிக்கைபடி முடிவு எடுக்கப்படும். எனவே, அனைத்து துறைகளும் தங்களது பணியாளர்கள் பற்றிய விவரங்களை மதிப்பீடு செய்து, பணியாளர் நலத் துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்

* கோப்புகள் இரண்டு இடங்களுக்கு மேல் பார்வைக்கு செல்லக் கூடாது. மூன்றாவது மட்டம், முடிவு எடுக்கும் இடமாக இருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் கோப்புகளை இதுபோன்ற பரிசீலிக்கும் முறை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முடிவு எடுக்கும் மட்டம் உட்பட மூன்று மட்டங்களில் மட்டுமே கோப்புகள் பரிசீலிக்கப்படும். இந்த பரிந்துரை ஏற்கப்படும். தொழில்நுட்ப ரீதியிலான கோப்புகளை, சார்புசெயலர் அந்தஸ்துக்கு மேல் தான் பரிசீலிக்க வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.

* ஊழல் நடப்பதற்கு உகந்த இடங்களை கண்டறிந்து, அங்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.  இது பொதுவான விவகாரம். ஏற்கனவே உள்ள விதிகளை கடுமையாக அமல்படுத்தினாலே, ஊழலை ஒழித்துவிட முடியும். எனவே எந்த நடவடிக்கையும் தேவையில்லை.

விதிகளை தளர்த்தக் கூடாது: விதிகளை தளர்த்துவது தொடர்பாக ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அரசின் சுயாட்சி அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. சுயாட்சி அரசை, விதிகள் கட்டிப்போட்டுவிடக் கூடாது. எனவே இந்த பரிந்துரையை ஏற்க முடியாது.

* அனைத்து உத்தரவுகளும் சட்டப்பூர்வ பின்னணியை கொண்ட உத்தரவுகளாக இருக்க வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.

* தலைமைச் செயலக ஊழியர்கள் இடமாற்றத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்டங்களுக்கும், மாவட்டங்களில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தலைமைச் செயலக ஊழியர்களுக்கான கல்வித் தகுதி மற்றவர்களை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பணியாளர்களை விட தலைமைச் செயலக பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்படுகிறது. தலைமைச் செயலக பிரிவு அலுவலர், மாவட்டங்களில் துணை கலெக்டருக்கு இணையான சம்பளத்தை பெறுகிறார். இதற்காக, பிரிவு அலுவலரை துணை கலெக்டராக நியமிக்க முடியாது.

* துறைத் தலைவர்களாக அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்க வேண்டும். இந்த பரிந்துரையை ஏற்க முடியாது.

* தபால்கள் மற்றும் கோப்புகளை விரைவாக அனுப்ப வேண்டும். கிளார்க்குகளின் கையெழுத்துக்காக காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். அந்த அலுவலகத்தின் தலைவரே, தபால் நிலையிலேயே முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.

* அதிகாரிகள் தங்களது பொறுப்புகள் மற்றும் சவால்களை ஏற்க வேண்டும். சுயமாக முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவுக்கான பொறுப்புடைமையை அவர்கள் ஏற்க வேண்டும். அனைத்து அதிகாரிகளுக்கும் கோப்புகளை அனுப்பும் முறையை நிறுத்த வேண்டும். இந்த பரிந்துரை ஏற்கப்படுகிறது.

Tuesday, September 28, 2010

Sunday, July 25, 2010

தெரியவில்லை வங்கியின் எல்லை பார்வைக்கு வைத்தால் பயன்

கூடலூர் : "நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தங்களின் எல்லைப் பகுதியை, வங்கிகளில் ஒட்டி வைக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல வங்கிகளில், மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து, வசிப்பிடம், வாடிக்கையாளர் சேவைக்கு உட்பட்ட பகுதியில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் தங்களுடைய சேவைப் பரப்பு வரையறுக்கப்பட்டது; இப்பகுதிகளில், சேமிப்பு கணக்கு, கடன் வழங்குதல், வைப்பு, முதலீடு பெறுதல் உட்பட சேவைகளை வழங்குகிறது. வங்கியின் சேவைப் பகுதிகள் குறித்தும், எந்த வங்கியில் கடன் பெறுவது என்பது குறித்தும் மக்களுக்கு தெரிவதில்லை. பிரச்னைக்கு தீர்வு காண, சேவை வழங்கும் பகுதி விபரங்களை, வாடிக்கையாளர்கள் அறிந்துக் கொள்ள, வங்கிகளில் ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

"பயம்' இருந்தால் "ஜெயம்' இருக்காது நிலவும் நிலையை மாற்ற அறிவுரை

ஊட்டி: "அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு பயந்து, பணிந்து வாழும் நிலை மாற வேண்டும்' என, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம்,  ஊட்டியில் நடத்தப்பட்டது. மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடு குறித்து பேசினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நுகர்வோர் அமைப்புகள் தன்னார்வத்துடன் செயல்பட வேண்டும். பல நிலைகளில், தனக்கு என்ற செயல்பாட்டை தவிர்த்து மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மையங்கள், மன்றங்கள், மக்களுக்கு தேவையான தகவல்களை திரட்டி வைக்க வேண்டும். அரசின் செயல்பாடுகளை மக்கள் அறிய உதவ வேண்டும். மக்களின் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மக்களுக்கு உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். குறைகளுக்கு புகார் அனுப்புவதோடு இருந்து விடாமல், தொடர் கண்காணிக்க வேண்டும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தயார்படுத்த வேண்டும்; மக்கள், தட்டிக் கேட்பவர்களாக மாற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் பேசுகையில், "மக்கள் குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டு கொண்டுள்ளனர்; அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு பயந்து, பணிந்து வாழும் நிலை மாற வேண்டும். மக்களை விழிப்படைய செய்வதுடன், அடிப்படை தேவைகள் பெற உதவ வேண்டும். ரேஷன் கார்டு பெற்றுத் தருதல், முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருதல் உட்பட அரசு நலத்திட்டங்களை பெற உதவுவது அல்லது அவைகளை பெற வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளும் நலத்திட்டங்கள், செயல்பாடுகளில் நிலவும் குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; முறைகேடுகளை களைய மேலதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். நாளிதழ்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை சேகரித்து, விவாதிக்க வேண்டும். உள்ளூர் குறைபாடுகளை மக்கள் மூலமாக தீர்க்க வலியுறுத்த வேண்டும்.நீர் வளம், சுகாதார சீர்கேடு, கழிவு நீர் அகற்றுதல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களில், உள்ளாட்சி செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். புகார் அளிக்கும் முன், ஆதாரங்களை திரட்ட வேண்டும். மக்கள் நலனுக்கு செயல்படும் அமைப்பாக உருவாக வேண்டும். இவ்வாறு, வீரபாண்டியன் பேசினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதித்து, அமைப்புகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ், ரமேஷ், ஜெயச்சந்திரன், சுப்ரமணி, மஞ்சுளா, ராமச்சந்திரன், டேவிட், கவிதா, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். கிராம நுகர்வோர் மன்ற அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

"தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' 30ம் தேதி கோவையில் விழிப்புணர்வு

ஊட்டி : "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' என்ற தலைப்பில், கோவையில் வரும் 30ம் தேதி, விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய - மக்கள் மைய தலைவர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:தரமான பொருட்களை விற்பனை செய்ய, தரமான பொருட்கள் குறித்து அறிந்துக் கொள்ள, மத்திய அரசு, இந்திய தரக் கட்டுப்பாட்டு மையத்தை (பி.ஐ.எஸ்.,) செயல்படுத்தி வருகிறது. தரமான பொருட்களை கண்டறிதல் மற்றும் தர முத்திரைகள், தர நிர்ணய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய தர கட்டுப்பாட்டு அமைவனம், கோவை கருமத்தம்பட்டி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் சார்பில், கோவையில் வரும் 30ம் தேதி தர விழிப்புணர்வு குறித்த, "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சியை நடத்துகிறது.தர நிர்ணய சட்டங்கள், தர முத்திரைகள், தர முத்திரை குத்தப்பட்ட பொருட்களில் வேலை குறைபாடு நிவர்த்தி செய்தல், புகார் தெரிவித்தல், நிவாரணம் பெறல், போலி தர முத்திரைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், "கூடலூர் பாதுகாப்பு, மக்கள் மையத்தை அணுகலாம்; 94885-20800 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தர முத்திரைகள், போலி பொருட்கள் குறித்த புகார் இருப்பினும் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்

மாணவர்களின் போக்குவரத்து பிரச்னை நுகர்வோர் பாதுகாப்பு மையம் யோசனை

ஊட்டி: "மாணவர்களுக்கான போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம், வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டு, கிராமப் பகுதிகளுக்கான பஸ்கள், நகரப் பகுதிகளுக்கு மாற்றி இயக்கப்படுகின்றன. இதனால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில பஸ்களின் நடத்துனர்கள், பள்ளி , கல்லூரி மாணவ, மாணவியரை ஏற்றி செல்ல மறுக்கின்றனர். மாணவர்களை ஏற்றிச் செல்ல, போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். பஸ்சில் பயணிக்கும் முறை குறித்து, பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பல தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர், வரிசையில் நின்று பஸ்களில் ஏறி பயணிக்கின்றனர். இம்முறையை, அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும். இதை கண்காணிக்கவும், மாணவர்களை ஏற்றிச் செல்லாத பஸ்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், பள்ளி மாணவர்களிடையே ஒரு குழுவை ஏற்படுத்தினால் பயன் கிடைக்கும். தனிக்குழுவாக இல்லாவிட்டாலும் என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., மாணவர் படை, குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் இப்பணியை மேற்கொள்ளலாம். பள்ளி நிர்வாகங்கள் ஆதரவு தெரிவித்தால்,


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்- மக்கள் மையம் ஆதரவு தரும். பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, போக்குவரத்து, போலீசார், கல்வித் துறையினர் ஒன்றிணைந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

Sunday, July 11, 2010

நுகர்வோர் விழிப்புணர்வு 10.07.10

பந்தலூர் நுகர்வோர் விழிப்புணர்வு
நிகழ்ச்சி நடத்திய படங்கள்

நாள் : 10.07.10